மீண்டும் ஒரு 1965: ஸ்டாலின் எச்சரிக்கை| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

மீண்டும் ஒரு 1965: ஸ்டாலின் எச்சரிக்கை

Added : ஆக 08, 2016 | கருத்துகள் (156)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
1965 ., ஸ்டாலின் எச்சரிக்கை

சென்னை: நாடு முழுவதும் ஒரே கல்வி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கட்சியின் பொருளாளர் ஸ்டாலின் தலைமை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசியதாவது: மோடி தலமையிலான மத்திய அரசு நாடு முழுவதும் ஒரே கல்வி கொள்கையை கொண்டு வருவது முறையல்ல, இது தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். காஷ்மீர் முதல் குமரி வரை ஒரே கொள்கை சாத்தியமல்ல. நாடு முழுவதும் ஒரே மாதிரி உடை , உணவு முறை என்று கட்டாயப்படுத்த முடியுமா ? இது போல் இந்த கொள்கையை மத்திய அரசு கைவிட வேண்டும்.தமிழ்மொழியை பின்னுக் தள்ளி சமஸ்கிருதத்திற்கு தாலாட்டு பாட முயற்சி நடக்கிறது. சமத்துவத்திற்காக இந்த போராட்டம், சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர விண்ணப்பித்திருக்கிறோம். இது வரை இது குறித்து அரசு எடுத்து கொள்ள விரும்பவில்லை. எல்லா கட்சிகளும் ஒன்று சேர்ந்து எதிர்க்க தயாரக இருக்கின்றோம். தனித்தீர்மானமாக கொண்டு வர வேண்டும் என கடிதம் வழங்கவிருக்கிறேன்.

மத்திய அரசு கைவிட மறுக்குமானால் மீண்டும் தமிழகத்தில் 1965 போன்ற ஒரு போராட்டம் ஏற்படும் ஒரு நிலை உருவாகும் என மத்திய அரசுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.Powered by Vasanth & Co
Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (156)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kowsik Rishi - Chennai,இந்தியா
12-ஆக-201612:44:52 IST Report Abuse
kowsik Rishi மு.கருணாநிதியும், மு. க. ஸ்டாலினும் 1960 கள் பேசுவது அரசியல் மோசடி. இனி இந்தி என்ன எந்த பாஷை, மொழி திணிப்பு என்ற பேச்சே இல்லை. எல்லா மக்களும் குறிப்பாக தமிழ் நாடு மக்கள் எல்ல மொழிகளையும் படிக்க வேண்டும். இந்தி, சமஸ்க்ரிதம், பிரென்ச், ஜேர்மன், ரஷிய, என்ற எல்லா மொழிகளையும்...... மோடி அரசு காங்கிரஸ் கம்பெனியின் பிரிட்டிஷ் ஈஸ்ட் இந்தியா கம்பெனி பிரிட்டிஷ் ராஜகிய ஆட்சியின் மெக்காலே கல்வி கொள்கையை .. சீராய்வு செய்வது நல்லது - ஆனால் - திணிப்பு என்ற பேச்சே வேண்டாம் மு. கருணாநிதியும் மு.க. ஸ்டாலின் பேசும் 60 கள் தார் டப்பா வேலைக்கு வேட்டு வைக்கவேண்டும். மு. கருனாநிதியின் எந்த மோசடி அரசியல் இனி தமிழ் நாட்டில் வேண்டாம் தார் டப்பா வேலை மு. கருணாநிதி இனி இங்கே எடுபடாது
Rate this:
Share this comment
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
09-ஆக-201603:13:11 IST Report Abuse
Mani . V எப்படி ஸ்டாலின், ரயில் ஓடாத தண்டவாளத்தில் தலை வைத்து படுத்தது மாதிரியா? அல்லது இடைவிடாத இரண்டு மணி நேர உண்ணாவிரதம் மாதிரியா? (என் நண்பர் பக்கத்தில் இருந்துகொண்டு "அது இரண்டு வீட்டிலும் ஏற்பட்ட பிரச்சினைக்காக கடற்கரையில் வந்து ஓய்வு எடுத்தது" என்று சொல்லி சிரிக்கிறார்).
Rate this:
Share this comment
Cancel
Tamil Selvan - Chennai,இந்தியா
09-ஆக-201600:20:32 IST Report Abuse
Tamil Selvan தமிழ் பெயரை வைக்காமல் ஏன் ஸ்டாலின் என்று பெயர் வைத்தீர்கள் என்று சொன்னால் இவர் அதற்கு ஒரு வரலாறு சொல்லுவார். இவர் மட்டும்தான் பிளாஷ் பேக் சொல்லுவார். மற்றவர்கள் யாரும் சொல்லக்கூடாது...
Rate this:
Share this comment
Cancel
X. Rosario Rajkumar - TRICHY,இந்தியா
09-ஆக-201600:11:31 IST Report Abuse
X. Rosario Rajkumar சம்ஸ்கிருத எதிர்ப்பு என்று சொல்லி 1965 இல் நடந்தது போன்று தமிழர்களை பலி கொடுக்க வேண்டாம். காந்தியடிகளின் வழி செல்வோம். நல்லதே நடக்கும். வளர்க ஒற்றுமை. ஒழியட்டும் வேற்றுமை.
Rate this:
Share this comment
Cancel
Ootai Vaayan - Kovai,இந்தியா
08-ஆக-201622:51:00 IST Report Abuse
Ootai Vaayan திரும்ப மொதல்லே இருந்தா.. எங்களால் தாங்கமுடியாது சாமி..
Rate this:
Share this comment
Cancel
adalarasan - chennai,இந்தியா
08-ஆக-201622:35:59 IST Report Abuse
adalarasan அரசியல்வாதிகள் பளார் தாங்களும் படிக்க மாட்டார்கள், மற்றவர்களையும் படித்து முன்னேற விட மாட்டார்கள்? இடத்தில் பலர் பொய் பட்டம் வேறு பெறுகிறார்கள்? ஒரு சென்டென்சசோதமாக எழுதி படிக்கத்தெரியாதவங்கள் பலர் தாங்கள் பட்டதாரி என்கிறாரு பெயர் வைத்துக்கொள்கிறார்கள்? 5 வது வரை படித்தவர்களுக்கு டாக்டர் பட்டம் வேறு? என கொ டுமாய் ஐயா இது?
Rate this:
Share this comment
Cancel
adalarasan - chennai,இந்தியா
08-ஆக-201622:28:42 IST Report Abuse
adalarasan இவருக்கு அந்த கொள்கையில் என்ன எழுதி இருக்கிறது என்றும் தெரியாது, படித்தாலும் புரியாது? 1965l பங்கேற்று, அழிந்துபோன குடும்பங்கள் பல, இதை அறிந்தவர்கள் இன்னும் பலர் உயிருடன்தான் இருக்கிறார்கள்? உங்கள் ஏமாற்றுவேலை எல்லாம் இனிமேல் எடுபடாது? உதாரணமாக ஹிந்தியை படிக்காதீர்கள் என்று சொல்லி, பல தமிழர்கள், வேலை வாழ்ப்பை இழக்க நேரிட்டது ? நம் மாநிலம் தவிர மற்ற மாநிலங்கள் அனைத்திலும் ஹிந்தியை பாடமாக, அனுமதித்து, பயன் பெறுகிறார்கள்?
Rate this:
Share this comment
Cancel
mohan - chennai,இந்தியா
08-ஆக-201622:24:54 IST Report Abuse
mohan தமிழன் எந்த படிப்பையும், மொழியையும் கற்காமல் கடைசி வரைக்கும் கேனப்பயலாகவே இருக்க வேண்டும்...சென்னை தமிழ் கூட மாறக்கூடாது. சென்னை நல்ல தமிழ் பேசுவதற்கு யாராவது போராட்டம் நடத்துகிறார்களா....
Rate this:
Share this comment
Cancel
Visu Iyer - chennai,இந்தியா
08-ஆக-201621:55:27 IST Report Abuse
Visu Iyer மறுபடியும் 1965ன்னா ஊழலை மறுபடியும் தொடங்க போகிறோம் என்று சொல்கிறாரா, க்ளோபலைசேஷன்னா என்னன்னு தெரியுமோ...
Rate this:
Share this comment
Cancel
Subburamu Krishnaswamy - Coimbatore,இந்தியா
08-ஆக-201621:37:17 IST Report Abuse
Subburamu Krishnaswamy These leaders will not oppose schools teaching many foreign languages including arabic and urdu in tamil nadu are opposing sanskrit. They are all optional languages. Those who are interested in learning foreign languages are at liberty to learn any language of their choice. Even if Sanskrit is introduced in central and other CBSC schools, that is going to be optional. There is no need to be panic about sanskrit. These people will leave from political arena in course of time and loose respect from the common man. Even in telugu, kannada speaking people in tamil nadu have slowly forgotten their read and write s of their mother tongue, they have completely merged with tamil people. Similarly tamil speaking people will also loose their language s if they settle in foreign lands. That is quite nature. Why uselessly fighting for language issues. Several non tamil people are speaking tamil outside our state. We may observe tamil name boards in restaurants outside tamil nadu. Learning a language is individuals choice, no body can oppose it or compel it to learn. That is not the business of Mr. Stalin.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை