பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு: 94 பேர் பலி| Dinamalar

பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு: 94 பேர் பலி

Updated : ஆக 08, 2016 | Added : ஆக 08, 2016 | கருத்துகள் (39)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு: 94 பேர் பலி

கராச்சி: பாகிஸ்தானின் பாலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள மருத்துவமனையில் நடந்த, குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கிச்சூட்டில் 94 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். பலி எண்ணிக்கை 100 ஐ தாண்டும் என அஞ்சப்படுகிறது.

பலுசிஸ்தான் மாகாண வக்கீல் சங்க தலைவர் பிலான் அன்வர் காசி மர்ம நபர்கள் சுட்டதில் பலியானார். அவரது உடலை, வழக்கறிஞர்கள் மருத்துவமனைக்கு கொண்டு வந்த போது குண்டுவெடித்தது.இந்த சம்பவத்தின் போது பத்திரிகையாளர்களும் மருத்துவமனை வளாகத்தில் கூடியிருந்தனர். குண்டுவெடிப்பை தொடர்ந்து மர்ம நபர் ஒருவர், துப்பாக்கியால் சுடத்துவங்கியதாகவும் போலீசார் கூறினர். இதனையடுத்து மருத்துவமனை வளாகத்தில் பீதி நிலவியது. தொடர்ந்து பாதுகாப்பு படையினர் அங்கு குவிக்கப்பட்டனர்.


பாகிஸ்தானின் குவெட்டா மாவட்டத்தில் நடந்த குண்டு வெடிப்பு மற்றும் துப்பாக்கி சூட்டில் 30 பேர் பலியாயினர்.

Advertisement


வாசகர் கருத்து (39)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
GOPALASAMY - bengaluru,இந்தியா
08-ஆக-201621:10:47 IST Report Abuse
GOPALASAMY அமைதி குழந்தைகளே , மனது பதறுகிறது . அரும் பாடு பட்டு ஒரு கொள்கை வாதியை தயார் செய்தால் அவரை போலீஸ் சுட்டு கொன்று விட்டதாம் . என்ன கொடுமை ?
Rate this:
Share this comment
Cancel
HAMEED - uk,யுனைடெட் கிங்டம்
08-ஆக-201621:06:27 IST Report Abuse
HAMEED ஒருத்தருக்கும் அங்கு இறந்து கிடப்பது மனித உயிர் என்று தெரியவில்லை....
Rate this:
Share this comment
ramkishore - chennai,இந்தியா
09-ஆக-201600:38:16 IST Report Abuse
ramkishoreஎல்லா மனிதர்களுமே அந்த உயிர்களுக்காக வருந்ததான் செய்வார்கள்,வாடிய பயிருக்காகவே வாடிய மண் இது. ஒரு நாடே தீவிரவாதிகளை வளர்த்து, அடைக்கலம் கொடுத்து, ஊக்கமளிக்கிறார்களே என்கிற ஆதங்கத்தின் வெளிப்பாடே இங்கு வெளியிடப்படும் கருத்துக்கள். அந்த உயிர்கள் துடித்ததை உணரமுடிகிறது.. ஆனால் ஒருவன் உன்னையும் உன் குடும்பத்தையும் கொல்வேன்,உன் தேசத்தை அழிப்பேன் அல்லது என் குடும்பத்தை அழித்து நானும் தற்கொலை செய்து கொல்வேன் என்று சொன்னால் என்னதான் செய்வது என்று உண்மையாகவே புரியவில்லை.. எப்படியானாலும் இறந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்வோம்.....
Rate this:
Share this comment
குரங்கு குப்பன் - chennai,இந்தியா
09-ஆக-201608:13:28 IST Report Abuse
குரங்கு குப்பன் வெறும் மனித உயிர் இல்லை மத வெறி பிடித்த மனித உயிர் என்று தெரியும்...
Rate this:
Share this comment
Cancel
Sham - Ct muththur,இந்தியா
08-ஆக-201620:47:55 IST Report Abuse
Sham தன் வினை தன்னைச் சுடும்... இருந்தாலும், ரத்த வெறிபிடித்த அமைதி மார்க்கத்தவர்களின் வெறிக்கு பலியான அப்பாவி ஜனங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X