ஆபத்தான நிலையில் சிவன் கோயில்: பூஜை நிறுத்தம்| Dinamalar

ஆபத்தான நிலையில் சிவன் கோயில்: பூஜை நிறுத்தம்

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement
ஆபத்தான நிலையில் சிவன் கோயில்: பூஜை நிறுத்தம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே ராமேஸ்வரம் கோயில் கட்டுப்பாட்டில் இருந்த பழமையான சிவன் கோயில், இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளது. பூஜைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.மும்முடிசாத்தான் ஊராட்சியில், மிகவும் பழமை வாய்ந்த பெரிய நாகேஸ்வரர் என்ற ராமநாதசாமி, பர்வதவர்த்தினி அம்மன் கோயில் உள்ளது. பல நுாற்றாண்டை கடந்த இந்த கோயில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வந்தது.சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் ராமேஸ்வரம் கோயிலில் வழிபட்டபின் இவ்வழியே வந்த போது, இங்குள்ள ராமநாதசாமி கோயிலில் முடி சூட்டிக்கொண்டதாகவும், அதனாலேயே இந்த கோயில் இருந்த இந்த ஊருக்கு முன்பு 'மும்முடி தரித்தான்' என்ற பெயர் இருந்துள்ளது. காலப்போக்கில் இது மும்முடிசாத்தான் என மருவியுள்ளது. இந்த கோயில் சுற்றுப்பகுதியில் உள்ள பாண்டியூர், தியாகவன்சேரி, சேதுக்கால், மணிசந்தல் உள்ளிட்ட கிராம மக்கள் கோயிலுக்கு மன்னர்களுக்கான பங்காக செலுத்தும் நெல் சேமிக்கப்பட்டுள்ளது. அதற்காக இரண்டு பெரிய நெற்களஞ்சியங்கள் இருந்துள்ளன. இங்கு சேகரிக்கப்படும் நெல் ராமேஸ்வரம் கோயிலுக்கு கொண்டுசெல்லப்பட்டது.ராமேஸ்வரம் கோயில் நிர்வாகம் சார்பில், இந்த கோயிலில் பூஜைகள் செய்யப்பட்டு, கோயில் பராமரிக்கப்பட்டு வந்தது. கடந்த ஐந்தாண்டுகளுக்கும் மேலாக கோயிலில் எந்த பராமரிப்பு பணிகளும், பூஜையும் நடக்கவில்லை. இதனால் கோயில் பாழடைந்து கிடக்கிறது. சுற்றுச்சுவர், மண்டபம், மூலஸ்தானம் என அனைத்து பகுதிகளும் சேதமடைந்து இடிந்துவிழும் அபாய நிலையில் உள்ளது.பூஜைகள் நிறுத்தப்பட்டதால், இவ்வூர் இளைஞர்கள் ஊரில் பணம் வசூல் செய்து பூஜைகள் செய்து வருகின்றனர்.கே.முத்தழகு, முன்னாள் ஊராட்சி தலைவர்: கோயில் கும்பாபிஷேகம் முடிந்து 15 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. அப்போது, சேதமடைந்த பகுதிகளை புனரமைக்கவில்லை. கோயிலுக்கு பூஜாரியும் இல்லை. பூஜையும் இல்லை. கோயிலை புதுப்பித்து பூஜைகள் செய்ய வேண்டும், என்றார்.கே.நடராஜன்: கும்பாபிஷேகம் நடத்தவும், முதல்வரின் அன்னதான திட்டத்தில் கோயிலை சேர்க்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.செல்வராஜ், ராமேஸ்வரம் கோயில் இணை ஆணையர்: பழமையான இந்த கோயிலின் பழமை மாறாமல் புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்தப்படும். புதுப்பிக்கும் பணிகளை இன்னும் ஒருவாரத்திற்குள் துவக்கிவிடுவோம். பூஜைகள் நடக்க ஏற்பாடு செய்யப்படும், என்றார்.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (6)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Swaminathan - chennai,இந்தியா
09-ஆக-201617:43:53 IST Report Abuse
Swaminathan ஆன்லைன் பரிமாற்றத்துக்கான பேங்க் விவரம் தரவும்.
Rate this:
Share this comment
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
09-ஆக-201615:05:25 IST Report Abuse
Pasupathi Subbian ஒரு கோவிலை கட்டினால் பல தலைமுறைக்கு புண்ணியம் செய்த பாக்கியம் கிடைக்கும்.
Rate this:
Share this comment
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
09-ஆக-201613:37:12 IST Report Abuse
மலரின் மகள் கோயில் அறங்காவலர்கள் பக்தர்களின் தயவுடனும் ஊர் பொதுமக்களின் பங்களிப்புடனும் கோயிலை நிர்வகிக்க வேண்டும். இந்து அற நிலையத்துறையின் பேரில் சில கோவில்களும் சமஸ்தானத்தின் பேரில் சில கோவிலுமாக இருப்பதால் காலப் போக்கில் நலிவடைந்து சிதிலமடைந்து தொல் பொருள் ஆராய்ச்சித் துறைக்கு சென்று விடும் நிலைமையை எய்து விடுகின்றன. ராமா நாத புரத்தின் கோவில்கள் சற்று வித்தியாசமானவை, வருமானம் வரும் கோவில்களை மட்டும் இந்து அறநிலைய துறையும் மற்ற கோவில்கள் பல சமஸ்தானத்தின் வழித் தோன்றல்களிடமும் உள்ளன. மன்னர் மானியம் ஒழிக்கப் பட அவர்களுக்கும் பெரியளவில் வருமானம் இல்லாமல் கோவில்களையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டும், மேலும் அதற்கு புதிய அறங்காவலர்களை நியமிக்காமலும், புதிய உறுப்பினர்களை சேர்க்க மனமில்லாமலும் பல கோவில்கள் சிறப்பாகப் பராமரிக்கப் படுவதில்லை.
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
09-ஆக-201611:38:48 IST Report Abuse
Nallavan Nallavan ஹிந்து இயக்கங்கள், பாஜக என்ன செய்கின்றன ???? மாட்டுக்கறி விவகாரத்தில் பிசியோ ????
Rate this:
Share this comment
Cancel
Cheran Perumal - Radhapuram,இந்தியா
09-ஆக-201611:01:26 IST Report Abuse
Cheran Perumal யாராவது முயற்சி எடுத்து புதுப்பித்து கும்பாபிஷேகம் செய்தால் அதன்பிறகு அரசாங்கம் உண்டியல் வைத்து வசூல் பணியை துவங்கும்.
Rate this:
Share this comment
Cancel
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
09-ஆக-201606:10:56 IST Report Abuse
மதுரை விருமாண்டி அரசு பள்ளிக்கூடம் போல நிலைமை.. சிவனுக்கே ஹெல்மெட் போட்டுக் கொள்ளும் பரிதாபம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.