வளர்ச்சிக்கு வழிவகுக்கும் ஜிஎஸ்டி - ரகுராம் ராஜன்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

வளர்ச்சிக்கு வழிவகுக்கும் ஜிஎஸ்டி - ரகுராம் ராஜன்

Added : ஆக 09, 2016 | கருத்துகள் (7)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
வளர்ச்சிக்கு வழிவகுக்கும் ஜிஎஸ்டி - ரகுராம் ராஜன்

மும்பை : ரிசர்வ் வங்கியின் நிதிகொள்கை தொடர்பான கூட்டம் கவர்னர் ரகுராம் ராஜன் தலைமையில் மும்பையில் நடந்தது. அதில் நிதிக்கொள்கையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் வட்டி விகிதமே நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ரெப்போ வட்டி விகிதம் எனப்படும் குறுகியகால கடன்களுக்கான வட்டி விகிதம் 6.5 சதவீதத்திலேயே நீடிக்கிறது. சிஆர்ஆர் எனப்படும் ரொக்க கையிருப்பு விகிதமும் 4 சதவீதமே நீடிக்கிறது.
கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கவர்னர் ரகுராம் ராஜன், ‛‛பணவீக்கம் கட்டுக்குள் வராததால் நிதிக்கொள்கையில் எந்த மாற்றமும் செய்யவில்லை. நாட்டின பொருளாதார வளர்ச்சி 7.6 சதவீதமாக இருக்கும். ஜிஎஸ்டி., மசோதா, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் என்றார்.

வட்டி விகிதம் மாற்றம் இல்லை: ரிசர்வ் வங்கி

ரகுராம் ராஜன் தலைமையில் நடைபெற்ற கடைசி கூட்டத்தொடர் இது என்பது குறிப்பிடத்தக்கது. வருகிற செப்டம்பர் மாதத்துடன் இவர் ஓய்வு பெற உள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Akaja - Miniapolis ,யூ.எஸ்.ஏ
09-ஆக-201622:48:42 IST Report Abuse
Akaja அய்யா நீங்க கவர்னராக இருக்கும் வரை நாடு உருப்படும்,,,,,பிற்பாடு என்ன ஆகுமோ,, பயமாக இருக்கு,,,
Rate this:
Share this comment
Cancel
Selvaraj Thiroomal - Chennai,இந்தியா
09-ஆக-201615:58:50 IST Report Abuse
Selvaraj Thiroomal நல்லதேயே நினைத்து சொல்லுவோம் என்னதான் இருந்தாலும் போகும்போது ஏன் சொந்த கருத்தெல்லாம் சொல்லி சங்கடப்படவேண்டும்.. வளர்ச்சி வளர்ச்சி என்று ஆளாளுக்கு சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்.. வயதாவதுதான் வளர்ச்சி, பிறகு அதுவே தளர்ச்சி என்றநிலையே இன்றுவரை தொடர்கிறது,, தொடர்ந்துகொண்டே இருக்கிறது,, மேலும் மேலும் தொடரவும் போகிறது
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
09-ஆக-201615:00:26 IST Report Abuse
K.Sugavanam குழந்தை என்ன சொல்லி கதரப் போகிறதோ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X