தேவாலய கட்டடத்துக்கு 'சீல்' வைக்க உத்தரவு| Dinamalar

தேவாலய கட்டடத்துக்கு 'சீல்' வைக்க உத்தரவு

Advertisement

- நமது நிருபர் -நுங்கம்பாக்கம் லேக் ஏரியா பகுதியில், விதிமீறல் உள்ளதாக புகார் கூறப்பட்ட தேவாலய கட்டடத்துக்கு, 'சீல்' வைக்க, சென்னை மாநகராட்சிக்கு, தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.சென்னை நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம் அருகில், லேக் ஏரியா, 7வது தெருவில், தனியார் ஒருவர், தேவாலயம் மற்றும் மண்டப பயன்பாட்டுக்காக அடுக்குமாடி கட்டடத்தை கட்டி உள்ளார். எதிர்ப்புஇதற்காக, அவர், 2006ல் சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ.,விடம் திட்ட அனுமதி பெற்றார். ஆனால், இந்த அனுமதியில் குறிப்பிடப்பட்ட விதிமுறைகள் மீறப்பட்டதாக புகார் கூறப்பட்டது.இது தொடர்பாக, லேக் ஏரியா குடியிருப்போர் சங்கம் சார்பில், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறைக்கு, 2016 ஜூனில், மனு அளிக்கப்பட்டது. அதில், லேக் ஏரியாவில் கட்டப்பட்டு உள்ள அடுக்குமாடி கட்டடத்தில் விதிமீறல்கள் இருப்பதாகவும், இதனால் அங்கு ஏற்படும் பிரச்னைகள் குறித்தும் விரிவாக விவரிக்கப்பட்டு இருந்தது.மேலும், 'கட்டட உரிமையாளர், வரன்முறை தொடர்பாக அரசிடம் மேல் முறையீடு செய்து உள்ளார். அந்த கட்டடத்தை வரன்முறைபடுத்துவதை கடுமையாக எதிர்க்கிறோம்' எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.இது குறித்து வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:கட்டட உரிமையாளர் தரப்பு விளக்கத்தை கேட்க, உரிய கால அவகாசம் வழங்க வேண்டும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, அவருக்கு நேரம் ஒதுக்கப்பட்டது. நோட்டீஸ்அதன் பின் அந்த குறிப்பிட்ட கட்டடத்தில் விதிமீறல்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டு, 'சீல்' வைப்பதற்கான நோட்டீஸ் ஏற்கனவே வழங்கப்பட்டது. ஆனால், உரிமையாளர் நீதிமன்ற தடை பெற்று நடவடிக்கையை முடக்கினார்.இந்நிலையில், கட்டட உரிமையாளர், குடியிருப்போர் சங்கம் ஆகிய தரப்பு கருத்துகளை கேட்ட பின், கட்டடத்துக்கு சீல் வைப்பதற்கான நடவடிக்கை எடுக்க, சி.எம்.டி.ஏ., மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement