'எதையும் சந்திக்க நான் தயார்' ஜெ.,வுக்கு சசிகலா புஷ்பா சவால் Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
'எதையும் சந்திக்க நான் தயார்'
ஜெ.,வுக்கு சசிகலா புஷ்பா சவால்

''எத்தனை வழக்கு வேண்டுமானாலும் போடட்டும்; அதை எதிர்கொள்ளும் வல்லமை உள்ளது,'' என, ராஜ்யசபா எம்.பி., சசிகலா புஷ்பா கூறினார்.

 'எதையும் சந்திக்க நான் தயார்'  ஜெ.,வுக்கு சசிகலா புஷ்பா சவால்

அவர் அளித்த பேட்டி:

அ.தி.மு.க., என்னும் அடிமைக் கூட்டத்தில், என்னையும் ஒருத்தியாக, வைத்துக்கொள்ள விரும்பவில்லை. அதனால்தான், அங்கிருந்து வெளியேறி விட்டேன். நான், பல நாட்கள் குமுறிக் கொண்டு இருந்ததுபோல, பலரும் அ.தி.மு.க.,வில் குமுறுகின்றனர்; விரைவில்,

அவர்களும் வெளியே வருவர். சென்னை, போயஸ் தோட்டத்தில் நடந்ததைக் கூறியதற்கு, பழிவாங்கும் முயற்சியாக, என் வீட்டில், எப்போதோ வேலை பார்த்த பெண்களை துரத்திப் பிடித்து, அவர்கள் மூலம் என் மீதும், என் குடும்பத்தினர்மீதும், பொய்யான புகார்களை கொடுக்க வைக்கின்றனர்.

இப்படியெல்லாம் நடக்கும் என, இந்த சசிகலா புஷ்பாவுக்கு மட்டும் தெரியாதா என்ன; எந்த பொய் வழக்கையும், எதிர்கொள்ளும் துணிச்ச லோடு தானே, அ.தி.மு.க.,வில் இருந்து வெளியே வந்துள்ளேன்.என் மீது, எத்தனை வழக்கு வேண்டு மானாலும் போடட்டும்; அதை எதிர்கொள்ளும் வல்லமை எனக்கு உள்ளது.

ஒரு வாரமாக, அ.தி.மு.க.,வினர் பல்வேறு வழி களில், என்னைமிரட்டி வருகின்றனர்; கொலை செய்து விடுவதாக சொல்கின்றனர். எல்லா ஆதாரங்களையும் திரட்டி வருகிறேன்; விரைவில், அதை ராஜ்யசபாவில் சமர்பிப்பேன்.

நானும் ஒரு பெண்; முதல்வரும் ஒரு பெண்தான். அவருக்கான மரியாதையை,

Advertisement

எந்தஇடத்தி லும் நான் குறைத்ததில்லை. ஆனால், என் மீது அவர், இவ்வளவு வன்மம் கொண்டு செயல்படு கிறார் என்றால், அதை சும்மா விட மாட்டேன். ஜெயலலிதாவுக்கு ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுத்த மக்களை சந்தித்து, நியாயம் கேட்பேன்.இனி, எனக்கு என்ன நடந்தாலும், அதற்கு, ஜெயலலிதான் காரணமாக இருக்க முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -

Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (85)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
AXN PRABHU - Chennai ,இந்தியா
12-ஆக-201623:18:09 IST Report Abuse

AXN PRABHUஇந்த பெண்மணி பற்றி ஆயிரம் விமர்சனங்கள் உண்டு. ஆனால், ஜெயலலிதாவை எதிர்த்து பேசும் திறனையும் ஆண்மையையும் கொண்ட ஒரே அதிமுக பிரமுகர் என்ற வகையில் பாராட்டுக்கு உரியவர்.

Rate this:
vidhuran - dubai,இந்தியா
12-ஆக-201622:05:55 IST Report Abuse

vidhuranசட்டமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் உரிமை மட்டுமே தமிழக மக்களுக்கு உள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் உரிமை மக்களிடம் இருந்தாலும் பெரும்பாலும் அது மத்திய அரசினை ஆளும் வாய்ப்பு உள்ளவர்களுக்கே சாதகமாக அமையும். மாநில கட்சிகளின் பாராளுமன்ற (மக்களவை)உறுப்பினர்கள் என்னதான் காட்டுக்கத்தல் கத்தினாலும், அவர்கள் சார்ந்து இருக்கும் கட்சியின் தலைமையின் நிலைப்பாடு அவர்களின் திறமையை முழுவதுமாக மழுங்கடித்து விடும். உதாரணம், முரசொலி மாறன் எதிர்க்கட்சியாக இருந்த காலங்கள். மற்றபடி தேசிய கட்சியின் மக்களவை உறுப்பினர்கள் (நாடறிந்த அடிமைகள்) உதாரணம்: காங்கிரஸ் உறுப்பினர்கள். ஆகையினால், தமிழ்நாட்டில் மேலவையை ஒழித்து கட்டியது போல மாநிலங்கள் அவையையும் ஒழித்து கட்டினால் தான் சசிகலா புஷ்பா மாதிரி ஆட்கள் மாநிலங்களவையில் உறுப்பினர் ஆகமுடியாது. இன்று இவர் நாளை வேறொருவர். இது ஒரு சாபக்கேடு.

Rate this:
Kaliraja Thangamani - Chennai,இந்தியா
12-ஆக-201620:40:27 IST Report Abuse

Kaliraja Thangamaniவாசகர்களின் கருத்துக்கள் மன வருத்தத்தை தருகிறது.

Rate this:
M.Guna Sekaran - Madurai,இந்தியா
12-ஆக-201619:20:31 IST Report Abuse

M.Guna Sekaranசபாஷ் ? இதே மாதிரி அனைவரும் துணிந்து எந்த கடசியா இருந்தாலும் கேள்வி கேட்க வேண்டும் ... மதுரை அருகில் ாலும் கடசி அமைச்சர் ,போலீஸ் உதவிஉடன் சேர்மன் அரசு புறம்போக்கு இடத்தில் 5,6 வருடம் இருக்கும் நில வரி கட்டிவரும் இடத்தில் நில அபகரிப்பு செய்கிறார்கள் ,, இதை யாரும் தட்டி கேட்க முன் வருப்பைர்கள் பணத்தை வைத்து சரண் அடைய வைக்கிறார்கள் . நில அபகரிப்புகு தடை உத்தரவு வங்கியும் ஆளும் கடசி ஆளுடன் மொத பண வசதி இல்லாமல் அவரகள் கொடுக்கும் பணத்தை வாங்கி கொண்டு செல்ல வெட்டி இருக்கு ? அரசு புறம்போக்கு இடத்தில் ஆளும் கடசி ஆளுஇங்கு மட்டும் எப்படி அரசு பட்ட வழங்கும் என்று புரியவில்லை ,,,,,,,,,,,,,,,, என்ன செய்யா பணம் பாதாளம் வரை பாய்த்து ? எப்படி D .M .K நில அபகரிப்பு செய்து பதவியை இழந்ததோ அதே மாதிரி A .D .M .K அழிய போகிறது ஒரு சில கருப்பு ஆடுகளால் ................

Rate this:
rajan - kerala,இந்தியா
12-ஆக-201618:50:30 IST Report Abuse

rajanபுஸுப்பாக்கோவ் அம்மா திராவிட முன்னேற்ற கழகம் உதயமாகும் தருணம் வந்து விட்டது. தமிழக புதிய முதல்வர் வைகுந்தபதி அருளால் சசிகல பு விரைவில் கொடி ஏத்துவாக டோய் . அன்னகாவடிகளுக்கு விரைவில் இடம் பெயர வாழ்த்துகள் .

Rate this:
sankaranarayanan - tirunelveli,இந்தியா
12-ஆக-201623:14:38 IST Report Abuse

sankaranarayananஒரு ஆணியும் புடுங்கமுடியாது - கனவு காணவேண்டாம் தம்பி...

Rate this:
narayanan iyer - chennai,இந்தியா
12-ஆக-201617:47:50 IST Report Abuse

narayanan iyerஎத்தனையோ பேரை சமாளித்தாய் கீழிருக்கும் போதே .இப்போ மேல போய் சமாளிப்பேன் என்கிறாய் .வளர்க உன் தொண்டு. பொறு சட்டமன்ற கூட்டம் முடியட்டும் அதுவரை உன்னால் எவ்வளுவு முடியுமோ அதை டெல்லியில் இருந்தே சொல்லிக்கொண்டிரு .

Rate this:
GB.ரிஸ்வான் - jeddah,சவுதி அரேபியா
12-ஆக-201617:28:50 IST Report Abuse

GB.ரிஸ்வான் இவளுக்கு பின்னால் மஞ்சள் (துண்டு) துட்டின் நிறம் தெரிகிறது கேவலமான அரசியல் .....

Rate this:
kowsik Rishi - Chennai,இந்தியா
12-ஆக-201617:05:23 IST Report Abuse

kowsik Rishiசசிகலா புஷ்பா அவர்களே (2) ஆசிரியர், ஆசிரியர் குடும்பம் என்று சொல்வதை விட்டுவிடுங்கள் (2) நீங்கள் எதைப்பற்றியும் சிந்திக்கவில்லை என்பது தான் உண்மை. எதையும் சந்திக்க வேண்டிய சூழ்நிலை உங்களுக்கு வந்தது நீங்கள் எதைப்பற்றியும் சிந்திக்காமல் போனதால் தான் எம். ஜி. ஆர். சொன்னார் பதவி வரும்போது பண்பு வரவேண்டும் தோழி ................. சசிகலா புஷ்பா அவர்களே இப்போதும் சொல்லுகிறீர்கள் சிந்திக்காமல் சொல்லுகிறீர்கள் எதையும் சந்திக்கலாம் என்று தவறு செய்கிறீர்கள்

Rate this:
Ramaswamy Sundaram - Mysore,இந்தியா
12-ஆக-201616:43:05 IST Report Abuse

Ramaswamy Sundaramஇந்த உத்தமி பெற்ற ரத்தினம் இன்னிக்கி பேசற டயலாக் எல்லாம் யாரோடது தெரியுமா? அன்னிக்கி பராசக்தி எழுதிய கைதான் அது....என்னமோ நடக்கப்போவுது....உஷார் உஷார்...ஐயோ இதுவரைக்கும் திருட்டு கூட்டம் போட்டு தள்ளியவர்கள் எல்லாம் நினைவுக்கு வாராங்களே?

Rate this:
N.Kaliraj - VANIYAMBADI,இந்தியா
12-ஆக-201617:33:11 IST Report Abuse

N.Kaliraj இவர் உத்தமி பெற்ற ரத்தினம் என்றால்.....அவர்?...

Rate this:
Kumar - Chennai,இந்தியா
12-ஆக-201616:27:14 IST Report Abuse

Kumarஇங்கு பதிவு செய்த சிலர் எம்பி பதவியை தூக்கி எறிந்துவிட்டு சசி அக்கா போராடலாமே என்று பதிவு செய்கிறார்கள். ஜெயா அம்மா முதல்வர் பதவியை தூக்கி எறிந்துவிட்டு இவருடன் எப்படி போராட முடியாதோ அப்படிதான் சசி அக்காவாலும் பதவியை தூக்கி எறிந்துவிட்டு போராட முடியாது. அரசு பதவிகள், அரசியல் கட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் கவச குண்டலங்களே.

Rate this:
sundaram - Kuwait,குவைத்
12-ஆக-201616:58:13 IST Report Abuse

sundaramஒரு சிறு மாற்றம். ஜெயா மாக்களோடு போராடுவதாக இருந்தால் மக்கள் கொடுத்த பதவியை தூக்கி எறிந்துவிட்டு போராட வேண்டும். அதேபோல, சசிகலா புஸ்பா, ஜெயாவுடன் போராடுவதால் ஜெயா கொடுத்த பதவியை தூக்கி எறிந்துவிட்டு போராடுவதுதான் முறை. ஜெயா கொடுத்த பதவியை கவச குண்டலமாக பயன்படுத்தி ஜெயாவை எதிர்ப்பது நாகரீகம் ஆகாது நியாயமும் ஆகாது....

Rate this:
மேலும் 72 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement