திரைப்பட பாடலாசிரியர் நா.முத்துக்குமார் உடல் தகனம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

திரைப்பட பாடலாசிரியர் நா.முத்துக்குமார் உடல் தகனம்

Updated : ஆக 14, 2016 | Added : ஆக 14, 2016 | கருத்துகள் (57)
Advertisement

சென்னை: மறைந்த திரைப்பட பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் உடல் சென்னை வேலங்காடு மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
நா.முத்துக்குமாரின் இறுதி ஊர்வலத்தில் இயக்குநர்கள், நடிகர்கள் உள்ளிட்ட திரைத் துறையினர், அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.
இரண்டு தேசிய விருதுகள் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வாங்கிய பாடலாசிரியர் நா.முத்துக்குமார் உடல்நலக் குறைவின் காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 41. இவரது இழப்பு மனதை கலங்க வைப்பதாக திரை உலக கலைஞர்கள் அதிர்ச்சியும், கவலையும் தெரிவித்துள்ளனர்.

தமிழ்த் திரைப்பட பாடலாசிரியர் நா.முத்துக்குமார், சென்னையில் காலமானார். அவருக்கு வயது 41.

தமிழ் திரை உலகின் பிரபல பாடலாசிரியர் கவிஞர் நா.முத்துக்குமார். புகழ்பெற்ற இயக்குனர் பாலு மகேந்திராவிடம் 4 ஆண்டுகள் பணியாற்றி வந்த இவர் வீரநடை படத்தின் மூலம் பாடலாசிரியராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். 1,500 க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார். தற்போது 100 படங்களுக்கு பாடல்கள் எழுதி வந்தார். இதில் ரஜினிகாந்த் நடித்து வரும் 2.ஓ படமும் ஒன்று. இந்த படம் இன்னும் வெளியாகவில்லை. தமிழ் திரைஉலகில் தனக்கென ஒரு முத்திரை பதித்து வந்த இவர் சமீபத்தில் மஞ்சள்காமாலை நோயினால் பாதிக்கப்பட்டார். சிகிச்சை பலன் அளிக்காமல் இவர் இன்று (14 ம் தேதி) காலமானார்.
தேசிய விருது பெற்றவர் : ராம் இயக்கத்தில் வெளியான தங்கமீன்கள் படத்தில் ஆனந்த யாழை மீட்டுகிறாய் என்ற பாடல் பெரும் புகழை இவருக்கு தேடித்தந்தது. இந்தபாடலும், சைவம் படத்தில் அழகே அழகே எதுவும் அழகே பாடலும் தேசிய விருதுகளை பெற்றன. 2005 ல் தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியர் விருதினையும், பல பிலிம்பேர் விருதுகளையும் இவர் பெற்றுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் கன்னியாபுரம் கிராமத்தில் பிறந்த நா.முத்துக்குமார்,சென்னை அண்ணாநகரில் வசித்து வந்தார். தந்தையின் ஆர்வத்தால் முத்துக்குமாருக்கு கவிதை, பாடல்கள் எழுதும் எண்ணம் ஏற்பட்டது. இளநிலை இயற்பியல் பட்டம் முடித்த முத்துகுமார், சென்னையில் எம்எஸ்சி மற்றும் டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். மறைந்த முத்துக்குமாருக்கு தீபலட்சுமி என்ற மனைவி (37), மகன் ஆதவன் (9) மற்றும் மகள் யோகலட்சுமி (8) உள்ளனர்.


கலைஞர்களின் புகழஞ்சலி:

" 28 வருடமாக இவரை தெரியும் . என்னோடு தொடர்ந்து பயணித்தவர் இழப்பை நம்ப முடியவில்லை" - எழுத்தாளர் சாருநிவேதிதா " எழுத்து உலகிற்கு பேரிழப்பு " - இயக்குநர் விக்கிரமன். " பழகுவதற்கு இனியவர் " - மதன்கார்க்கி" மரணம் அதிர்ச்சி அளிக்கிறது " - கங்கை அமரன்" நான் தான் இவரை அறிமுகம் செய்தேன். இவரது பாடல்கள் மக்களிடம் வேகமாக போய்சேர்ந்தது, என் தம்பி இல்லாததது வருத்தமளிக்கிறது" - இயக்குநர் சீமான். " உதவி இயக்குநர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்தவர் , பழக இனிமையானவர் " - வெற்றி மாறன்" நட்புக்காக வாழ்ந்தவர், பணத்தை பொருட்டாக நினைக்க மாட்டார் " - முத்துக்குமாரின் நண்பர் கலை. " அவரது பண்பு பிறர் பாராட்டும் வகையில் இருந்தது" - பார்த்திபன்" சமூகத்தின் மீது அக்கறை கொண்டவர் " - சமுத்திரக்கனி.
" இவனது வளர்ச்சியை கண்டு நான் ரசித்தேன். தொலை தூரம் பயணித்து விட்டான், மரணம் துக்கமானது என்பதை உணர்த்தி விட்டு சென்றுள்ளான். முத்துக்குமார் இல்லாத வெறுமை எங்களுக்கு அதிர்ச்சி "- கவிஞர் பழனி பாரதி
" திரைத்துறையில் தனி முத்திரை பதித்தவர், என்மீது மிகுந்த பாசம் கொண்டவர். இவரது குடும்பத்திற்கு இரங்கல் " - கருணாநிதி." மழை மட்டுமா அழகு வெயில் கூடத்தான் அழகு என்று சொன்னவர் , வாழ்வு மட்டுமா அழகு மரணம் கூட அழகு என்று சொல்லாமல் சொல்லி விட்டு சென்று விட்டார். மரணத்தின் சபையில் நீதி இல்லை . " - கவிஞர் வைரமுத்து.


அண்ணாநகரில் உள்ள அவரது வீட்டிலிருந்து நியூ ஆவடி ரோடு வேலங்காடு மயானம் வரை அவரது உடல் ஊர்வலமாக கொண்டு சென்று தகனம் செய்யப்பட்டது. நா.முத்துக்குமாரின் இறுதி ஊர்வலத்தில் இயக்குநர்கள், நடிகர்கள் உள்ளிட்ட திரைத் துறையினர், அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (57)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
victor les - Manama,பஹ்ரைன்
21-ஆக-201612:53:40 IST Report Abuse
victor les நா. முத்தே ..........எங்கள் நல் முத்தே ...................... எந்த கலைக்கும் முடிவேயில்லை ..... உன்னால் எழுதப்பட்ட உன் தமிழுக்கும் தான்..... எப்படி இருந்தாய்.... ஏன் இறந்தாய்......... உன் பிரிவு கேட்டு ............... உலக தமிழே அழுதது ....... இன்னும் அழுகிறது............ உனக்கு தெரியாத...... நீ பார்த்திராத ............. கோடானுகோடி கண்களின் கண்ணீர் .... உன் பாதங்களை கழுவியது...... நல்ல மகனாய்... நல்ல கணவனாய்.... நல்ல மனிதனாய்..... நீ வாழ்ந்திருந்தாலும் இன்னும் வாழாமல் போனது பெரும் துயரம் தான் .... உன் உடல்நிலை எங்களுக்கு அறியாமல் போனதே..... அறிந்திருப்பின்...... எங்கள் பிரார்த்தனையால் உன் உயிர் பிரிந்திருக்காது ........ உன் இழப்பால் வாடும் ....... ஒன்றும் அறியா உன் பிஞ்சுகளுக்காகவும் ........ தமிழ் நெஞ்சங்களுக்காகவும்..... நீ வந்தே ஆகவேண்டும் .... எங்களோடு வாழ்ந்தே ஆகவேண்டும்... இது எங்களின் கண்ணீர் கட்டளை...... மீண்டும் வா .......... மீண்டும் வா .......... மீண்டு வா .................
Rate this:
Share this comment
Cancel
தமிழர்நீதி - சென்னை ,இந்தியா
15-ஆக-201615:11:11 IST Report Abuse
தமிழர்நீதி 1500 தமிழ் பாடல் எழுதி தேசிய , மாநில விருதுபெற்ற 41 வயது தமிழ் கவியை மஞ்சள் காமாலை நோயிலிருந்து காப்பாற்ற முடியாமல் நோய்க்கு அடிமை பட்டு கிடக்கும் தேசம், இன்று சூழ 7 அடுக்கு காவல் போட்டு கொடியேத்துது. சமஸ்கிருதத்திற்கு பலகோடி, இன்ப சுற்றுலாவுக்கு பலகோடி என்று தூவுது. இன்னும் ஆயுதம் வாங்க வரி போடலை என்று GST போட்டு மொட்டை அடிக்கிறார்கள். இளம் மனைவி, இரு பச்சிளம் குழந்தைகள் எத்தனை இன்னும் நோயின் அடிமையில் வீழ்ந்து வெம்பிப்போகிறார்கள் . மொட்டை அடிக்கிறார்கள் கொடி ஏற்றி. என்று பறக்கும் தேசியக்கொடி சுதந்திர இந்தியாவில். வெள்ளையரிடமிருந்து, கொள்ளயரிடம் சிக்கி தேசம் வறுமை, நோய், அரசுசார் தீவிரவாதத்தில் சிக்கி தவிக்கிறது. ஆழந்த இரங்கலுடன்,நோய்க்கு அடிமைப்பட்ட சக இந்திய குடிமகன் . ஆயுதத்தைவிட அறிவுக்கும் , விவசாயத்திற்கும் , வியாதிக்கும் முக்கியம் கொடுக்காமல் கன்டைனரில் பணம் சேர்க்கும் இன்றய இந்தியா விடுதலை பெறுமா, அடிமை சங்கிலி உடைக்குமா ?இன்னும் எத்தனை மேதைகள் 41 ல நம்மைவிட்டு போகபோகிறார்களோ ? ஆண்டவனே இந்தியாவிற்கு விடுதலை கொடு சீக்கிரம்
Rate this:
Share this comment
Cancel
E.MANI,KUWAIT - KUWAIT,குவைத்
15-ஆக-201606:17:57 IST Report Abuse
E.MANI,KUWAIT மஞ்ச காமாலை நோயை நமது நாட்டு மருந்தால் மட்டுமே குணப்படுத்த முடியும். தயவு செய்து இங்கிலீஷ் மருந்து சாப்பிடாதீங்க .மிக எளிய முறையில் நாட்டு சித்த வைத்தியத்தால் குணபடுத்திடலாம் . இதற்கு மேலும் யாரையும் இழக்க வேண்டாம் .கவிஞர் முத்துக்குமார் பாடலை கேட்டு என் மகள் மீது இன்னும் பாசம் கூடிடுச்சு . ஒரு நல்ல கவிஞரை இழந்து விட்டோம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X