மின் மயானம் பராமரிக்கும் பெண்ணுக்கு தமிழக அரசின் 'கல்பனா சாவ்லா விருது'| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மின் மயானம் பராமரிக்கும் பெண்ணுக்கு தமிழக அரசின் 'கல்பனா சாவ்லா விருது'

Added : ஆக 15, 2016 | கருத்துகள் (38)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 மின் மயானம் பராமரிக்கும் பெண்ணுக்கு தமிழக அரசின் 'கல்பனா சாவ்லா விருது'

சென்னை,:மின் மயானத்தை அழகுற பராமரித்து வரும், எம்.ஏ., பொருளாதாரம் படித்த, பிராமண பெண் ஜெயந்திக்கு, தமிழக அரசின், 'கல்பனா சாவ்லா' விருது
வழங்கப்பட்டது.தமிழகத்தில் ஆண்டுதோறும், சுதந்திர தின விழாவில், துணிவு மற்றும் சாகச செயலுக்கான, 'கல்பனா சாவ்லா விருது' வீர தீர செயல் புரியும் பெண்ணுக்கு, முதல்வர் கையால் வழங்கப்படுகிறது.
காசோலைநேற்று நடந்த சுதந்திர தின விழாவில், கல்பனா சாவ்லா விருதை, நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயந்திக்கு, 40, முதல்வர் ஜெயலலிதா வழங்கி கவுரவித்தார். அவருக்கு, ஐந்து லட்சம் ரூபாய்க்கான காசோலை, தங்க முலாம் பூசப்பட்ட
பதக்கம் மற்றும் சான்றிதழ்
வழங்கப்பட்டது. விருது கிடைத்தது குறித்து ஜெயந்தி கூறியதாவது:
நான் பிராமண வகுப்பைச் சேர்ந்தவள். என் கணவர் வாசுதேவன் டிராவல்ஸ் வைத்துள்ளார்; கலப்பு திருமணம். எங்களுக்கு நந்தகுமார், நவீன்குமார் என, இரண்டு மகன்கள் உள்ளனர். நான் எம்.ஏ.,
பொருளாதாரம் படித்துள்ளேன். என் தந்தை பட்டு குருக்கள் இறந்தபோது, அவரது இறுதிச் சடங்கு செய்ய, உறவினர்கள் வராமல் சிரமப்பட்டேன். குடும்ப சூழலால் வேலை தேடியபோது, நாமக்கல் நகராட்சி, சேந்தமங்கலத்தில் உள்ள மின் மயானத்தில், பூங்காவை பராமரிக்கும் வேலை கிடைத்தது.
அந்த மின் மயானத்தை, 'யுனைடெட் வெல்பர் டிரஸ்ட்' என்ற தொண்டு நிறுவனம், பராமரித்து வருகிறது. அதில் சேர்ந்து, மின் மயான பூங்காவை பராமரிக்கத் துவங்கினேன். மயானத்தில், உடலை எரிக்கும் ஊழியர்கள், அப்பணியை சுத்தமாகச் செய்யாததால், நானே அந்தப் பணியைச் செய்கிறேன் என, கேட்டேன்; தொண்டு நிறுவனத்தினர் தயங்கினர். என் வற்புறுத்தலால், அப்பணியை
ஒப்படைத்தனர்.
பொதுமக்கள் ஆதரவுஎன் குடும்பத்திலும், உறவினர்கள் மத்தியிலும், கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதை கண்டு கொள்ளாமல் துணிச்சலுடன் மேற்கொண்டேன். மின் மயானத்தை துாய்மையாக பராமரிக்கத் துவங்கினேன்; பொதுமக்கள் ஆதரவு தந்தனர். தற்போது மின் மயானத்தின் மேலாளராக உள்ளேன். எனக்கு உதவியாக மலர் என்ற பெண் பணிபுரிந்து வருகிறார்.
கடந்த, 2013ல் இப்பணியில் சேர்ந்த நான், இதுவரை, 2,500க்கும் மேற்பட்டோரின் உடல்களுக்கு, இறுதிச் சடங்குகளை செய்துள்ளேன். இறந்தோர் தெய்வத்திற்கு சமம். தெய்வத்திற்கு பணிவிடை செய்வதாக நினைத்து, இப்பணியை செய்து வருகிறேன். என் பணியை பாராட்டி, கல்பனா சாவ்லா விருதை, முதல்வர் வழங்கியிருப்பது, மிகுந்த மகிழ்ச்சியை தந்துள்ளது. மேலும் சிறப்பாக பணி
புரிய இவ்விருது உதவும்.முதல்வர் என்னிடம் பேசும்போது, 'நீங்கள் பிராமணப் பெண்ணா?' எனக் கேட்டார்; 'ஆமாம்' என்றேன். உடனே முதல்வர், 'இவ்விருதை உங்களுக்கு வழங்குவதில் பெருமிதம் அடைகிறேன்' என்றார். முதல்வருடன் பேசியது மகிழ்ச்சியாக உள்ளது.
இவ்வாறு ஜெயந்தி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
G.Prabakaran - Chennai,இந்தியா
16-ஆக-201622:15:11 IST Report Abuse
G.Prabakaran மிக பெரிய அரிய சேவை பாராட்டுக்கள்.
Rate this:
Share this comment
Cancel
Tamilnesan - Muscat,ஓமன்
16-ஆக-201619:16:00 IST Report Abuse
Tamilnesan இவரால் இந்த விருதுக்கு பெருமை
Rate this:
Share this comment
Cancel
புதுகை வானம்பாடி - புதுக்கோட்டை,இந்தியா
16-ஆக-201618:59:12 IST Report Abuse
புதுகை வானம்பாடி இந்த விருதுக்கு தினமலரும் ஒரு கரணம் ...... இந்த செய்தியை இரண்டு ஆண்டுக்கு முன் வெளியிட்டது ... வாழ்த்துக்கள் விருது பெற்ற பெண்மையும் தினமலரும் ....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X