பாதுகாவலரை செருப்பு மாட்ட வைத்த அமைச்சருக்கு சிக்கல் Dinamalar
பதிவு செய்த நாள் :
பாதுகாவலரை செருப்பு மாட்ட
வைத்த அமைச்சருக்கு சிக்கல்

புவனேஸ்வர்: ஒடிசா மாநில அமைச்சர், பொது நிகழ்ச்சியில், பாதுகாவலரை, தனக்கு செருப்பு மாட்டி விடும்படி கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

பாதுகாவலரை செருப்பு மாட்ட வைத்த அமைச்சருக்கு சிக்கல்

ஒடிசா மாநிலத்தில், முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் ஆட்சி நடக்கிறது. இங்கு, சிறு மற்றும் குறு

தொழில்கள் துறை அமைச்சராக இருப்பவர் ஜோகேந்திர பெஹரா, 74. கேன்ஜூஹார் என்ற இடத்தில் நடந்த சுதந்திர தின விழாவில், அவர் பங்கேற்றார்.

செருப்பை கழற்றி விட்டு, தேசியக் கொடியை ஏற்றினார்; பின், செருப்பை அணிய முற்பட்ட போது, அவரால் அணிய முடியவில்லை. இதையடுத்து, தன் பாதுகாப்பு பணிக்காக, அரசு நியமித்த பாதுகாவலரை, செருப்பை மாட்டி விடும்படி அமைச்சர் கூறினார். அதை ஏற்று, பாதுகாவலரும்கீழே குனிந்து, அமைச்சருக்கு செருப்பை மாட்டிவிட்டார்.

இந்த காட்சி, 'டிவி' சேனல்களில் வெளியானது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தும்படி, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர். ஆனால், அமைச்சர் பெஹரா அசரவில்லை. ''நான், இந்த

Advertisement

மாநிலத்தின் மிக முக்கியமான பிரமுகர்; பாதுகாவலர் எனக்கு செருப்பு மாட்டிவிட்டது தவறு இல்லை,'' என, சம்பவத்தை நியாயப்படுத்தி உள்ளார்.

Advertisement

வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மஸ்தான் கனி - அதிராம் பட்டினம்,இந்தியா
17-ஆக-201617:51:52 IST Report Abuse

மஸ்தான் கனிவயதை கருதி நியாயமா இல்லையா என்று பார்க்கலாம் ஆனால் 92 எதிலும் compare பண்ணமுடியாது - புரியுதோ

Rate this:
nimmi - Dindigul,இந்தியா
17-ஆக-201616:23:19 IST Report Abuse

nimmiவெளியில் இருப்பவர்கள் ஆயிரம் பேசலாம். அங்கு மட்டுமில்லை, பொது இடத்தில் பலர் முன்னிலையில் தமிழ் நாட்டில்கூட இது போன்ற நிகழ்வு நடந்ததை நான் கண்கூடாக பார்த்திருக்கிறேன். 1980-களில் எம்ஜியாருக்கு நெருக்கமான, வீரமான ஒரு அமைச்சரின் பாத்து காப்பு அதிகாரி (உதவி ஆய்வாளர் அந்தஸ்து) கோடம்பாக்கம் அம்பேத்கார் சிலையருகே உள்ள ஒரு மண்டபத்தில் நடைபெற்ற விழா முடிந்து செல்லும்போது, அமைச்சர் காலனியை எடுத்து முன்வைத்ததை, கண்கூடாக பார்த்திருக்கிறேன். அதேபோல 1990-களின் பின்பகுதியில், பெரியவருக்கு தலைமை பாதுகாப்பு அதிகாரியாக (காவல் துணை கண்காணிப்பாளர் அந்தஸ்து) ஒருவர், அண்ணா நினைவிடத்தில், பெரியவரின் வெள்ளை நிற காலனியை கையில் எடுத்து பெரியவருக்கு மாட்டி விட்டதை பார்த்திருக்கிறேன். எதையும் தவறு என்று எடுத்துக்கொண்டால் தவறு. இல்லையென்றால் இல்லை. நிச்சயம், மேலே நான் சொன்ன இரு பிரமுகர்களும் தங்களுக்கு காலனியை மாட்டிவிடும்படி சொல்லியிருக்க வாய்ப்பில்லை. இந்த காவல் அதிகாரிகள் இருவரும், அவர்களை 'தாஜா' செய்வதற்காக செய்த வேலை இது என்றே கருதுகிறேன்.

Rate this:
17-ஆக-201615:39:41 IST Report Abuse

அண்ணாமலை ஜெயராமன்உடல் ஒத்துழைக்கவில்லை என்றால் ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள். பதவி வெறி பிடித்து அலையாதீர்கள். உடல் தகுதி, மக்களுக்கு சேவை செய்வும் மனம் இருந்தால் அரசியலில் இருங்கள், பதவிக்கு வாருங்கள்.

Rate this:
kooli - Chennai,இந்தியா
18-ஆக-201600:37:42 IST Report Abuse

kooli என்ன புண்ணாக்கு சேவை இவர் செஞ்சுடப் போறார்..? கேவலம்.....

Rate this:
மேலும் 13 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)