Rio Olympics 2016 Badminton Live Score: Sindhu Fighting hard After Winning First Game vs Okuhara | ஒலிம்பிக் பாட்மின்டன்: பைனலில் புயலாக நுழைந்தார் சிந்து| Dinamalar

ஒலிம்பிக் பாட்மின்டன்: பைனலில் புயலாக நுழைந்தார் சிந்து

Updated : ஆக 19, 2016 | Added : ஆக 18, 2016 | கருத்துகள் (84)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
ஒலிம்பிக் பாட்மின்டன்: பைனலில் புயலாக நுழைந்தார் சிந்து

ரியோ டி ஜெனிரோ: பாட்மின்டன் அரையிறுதிபோட்டியில் இந்திய வீராங்கனை சிந்து வெற்றி பெற்று பைனலுக்கு முன்னேறினார். இதனையடுத்து ரியோ ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு அடுத்த பதக்கம் உறுதியானது.

பிரேசிலின் ரியோவில் நடந்து வரும் ஒலிம்பிக் போட்டியில் மகளிருக்கான பாட்மின்டனில் இந்திய வீராங்கனை சிந்து, காலியுறுதியில் சீனாவின் இகான் வாங்கை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றார். அரையிறுதியில் ஜப்பான் வீராங்கனை நொசாம்பி ஓக்குஹாரா எதிர்கொண்டார்.
அரையிறுதியில் துவக்கம் முதலே முன்னிலை பெற்று வந்த சிந்து, இப்போட்டியில் முதல் செட்டை 21-19 என்ற புள்ளி கணக்கில் கை பற்றிய சிந்து, 2வது செட்டில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 21-10 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று 2-0 என்ற செட் கணக்கில் நொசாம்பியை வீழ்த்தி பைனலுக்கு முன்னேறினார். பைனலில் சிந்து உலகின் ‛நம்பர் 1' வீராங்கனையான ஸ்பெயின் நாட்டின் கரோலினா மெரினை எதிர்கொள்கிறார்.

ரியோ ஒலிம்பிக் போட்டியில் மகளிர் பேட்மிண்டன் பிரிவில் இறுதி போட்டிக்கு இந்தியாவின் பி.வி.சிந்து தகுதி பெற்றுள்ளார்.

பைனலில் சிந்து வெற்றி பெற்றால் இந்தியாவிற்கு தங்க பதக்கம் வெல்லும் வாய்ப்புள்ளது. பைனலுக்கு தகுதி பெற்றதன் மூலம் குறைந்த பட்சம் வெள்ளிப் பதக்கத்தை சிந்து உறுதி செய்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (84)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sivalingam Kesavelu - Vellore,இந்தியா
19-ஆக-201619:12:12 IST Report Abuse
Sivalingam Kesavelu வாழ்த்துக்கள் சிந்து, தங்கம் வென்று இந்திய மக்களின் தவம் நிறைவேற நீ தலைவியாய் திரைக்கு பின்னல் மறைந்துள்ள பல திறமை உள்ள சிந்துகளை அடுத்த ஒலிம்பிக்கில் பல தங்கம் வெல்ல வழி நடத்த வாழ்த்துக்கள்.
Rate this:
Share this comment
Cancel
Saravanan - Madurai,இந்தியா
19-ஆக-201618:13:58 IST Report Abuse
Saravanan நேற்று கிரிக்கெட் பார்ப்பதை விடுத்தது அனைவரையும் பாட்மிண்டன் பார்க்க வாய்த்த சிந்துவிற்கு பாராட்டுக்கள். மேலும் கடந்த ஒரு வாரமாக பெரும்பான்மையானவர்களை நேரலையில் தடகளம் பார்க்க வைத்த அணைத்து வீரர்கள், வீராங்கனைகளுக்கு வாழ்த்துக்கள். உண்மையில் இது ஒரு நல்ல மாற்றம். இந்தியா அடுத்த ஒலிம்பிக்கில் நிச்சயம் அதிக பதக்கங்கள் வாங்க வாய்ப்புள்ளது.
Rate this:
Share this comment
Cancel
Murugan - Boissy- saint- leger,பிரான்ஸ்
19-ஆக-201616:49:19 IST Report Abuse
Murugan உனது பின்னால் இந்திய மக்கள் உள்ளனர். இந்தியாவிற்கு தங்கத்தை வென்று, உலக செய்திகளில் உன்னத ஸ்டராகா ஜொலித்திடுவாய் ................................
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X