ரவை குண்டுகள் இல்லாவிட்டால் உயிரிழப்பு ஏற்படும்| Dinamalar

ரவை குண்டுகள் இல்லாவிட்டால் உயிரிழப்பு ஏற்படும்

Added : ஆக 19, 2016 | கருத்துகள் (20)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
ரவை குண்டுகள் இல்லாவிட்டால் உயிரிழப்பு ஏற்படும்

ஸ்ரீநகர்: ரவை குண்டுகளை பயன்படுத்துவதை நிறுத்தினால், உயிரிழப்புகள் அதிகரிக்கும் என காஷ்மீர் ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் சி.ஆர்.பி.எப்., கூறியுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஹிஸ்புல் பயங்கரவாதி புர்ஹான் வானி கொல்லப்பட்டதை தொடர்ந்து, கலவரம் ஏற்பட்டது. இதனையடுத்து கலவரத்தை கட்டுப்படுத்த ரவை குண்டுகளை போலீசார் பயன்படுத்தினர். இதில் பலர் காயமடைந்தனர். ரவை குண்டுகளை பயன்படுத்துவதை எதிர்த்து காஷ்மீர் ஐகோர்ட்டில், வழக்கறிஞர் சங்கம் பொது நல வழக்கு தொடரப்பட்டது.

இந்த மனுவுக்கு பதிலளித்த சி.ஆர்.பி.எப்., ரவை குண்டுகளை பயன்படுத்துவதை நிறுத்தினால், மோசமான சூழ்நிலையில் பாதிப்பு அதிகரிக்கும். ரவை குண்டுகளை பயன்படுத்துவதை நிறுத்தும் போது மிகவும் ஆபத்தான சூழ்நிலைகளில் சி.ஆர்.பி.எப்., வீரர்கள் ரைபிள்கள் பயன்படுத்துவதையும், துப்பாக்கிச்சூடு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இதனால் உயிரிழப்புகள் அதிகரிக்கும். ரவை குண்டுகள் கடந் 2010ல் அறிமுகப்படுத்தப்பட்டது. கூட்டத்தை கட்டுப்படுத்த இதை பயன்படுத்த அனுமதிக்கப்பட்டது. கலவரத்தின் போது, கடந்த ஜூலை 9 முதல் ஆகஸ்ட் 11 வரை 3500 ரவை குண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளது என கூறியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bharathi - bangalore,இந்தியா
21-ஆக-201608:07:32 IST Report Abuse
Bharathi நம்ப வைக்கவில்லை, கேள்வி கேட்க அனுமதிக்க படவில்லை
Rate this:
Share this comment
Cancel
Kandaswamy - Coimbatore,இந்தியா
20-ஆக-201600:45:35 IST Report Abuse
Kandaswamy தாயின் வழி பாசம் காட்டுவதென்றால், தந்தையின் வழி கண்டிப்பு காட்டுவது. அதாவது ரவை குண்டுகள் தாயின் வழி. தந்தை வழியில் 10 டேங்க்,100 AK 47, 250 கை எறி குண்டுகள், 250 க்ரேநெய்டு கொண்டு அடக்கலாம். உங்களுக்கெல்லாம் சர்தார் வல்லபாய் படேலும் ஆபரேஷன் போலோவும் இருந்தால்தான் சரிவரும்.
Rate this:
Share this comment
Cancel
ManiMurugiah Mkl - Yanbu,சவுதி அரேபியா
19-ஆக-201623:45:25 IST Report Abuse
ManiMurugiah Mkl இராணுவம் AK-47 பயன்படுத்தலாமா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X