வெள்ளி வென்றார் சிந்து; ஒலிம்பிக்கில் புதிய சாதனை Dinamalar
பதிவு செய்த நாள் :
வெள்ளி வென்றார் சிந்து; ஒலிம்பிக்கில் புதிய சாதனை

ரியோ டி ஜெனிரோ: ஒலிம்பிக் பாட்மின்டனில் வெள்ளிப்பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமை பெற்றார் சிந்து. பைனலில், ஸ்பெயினின் கரோலினாவிடம், போராடி தோல்வியடைந்தார்.
பிரேசிலில் ரியோ ஒலிம்பிக் போட்டி நடக்கிறது. இதன் பாட்மின்டன் பெண்கள் ஒற்றையர் பைனல் நேற்று நடந்தது. இதில் தரவரிசையில் 10வது இடத்திலுள்ள இந்திய வீராங்கனை சிந்து, 'நம்பர்-1' வீராங்கனை, ஸ்பெயினின் கரோலினா மரினை எதிர்கொண்டார்.முதல் செட்டின் துவக்கத்தில் இருந்தே பின் தங்கினார் சிந்து (3-7). இது 6-11 என,

தொடர்ந்தது. ஒரு கட்டத்தில் 16-17, அடுத்து 19-19 என, கரோலினாவை
நெருங்கினார் சிந்து. பின் தொடர்ந்து அசத்த, முதல் செட்டை சிந்து 21-19 என, கைப்பற்றினார்.
இரண்டாவது செட்டில் 2-11 என்ற மோசமான நிலைக்கு தள்ளப்பட்டார். இதில் இருந்து மீண்டு வருவது மிகவும் கடினம் என்ற நிலையில், இரண்டாவது செட்டை சிந்து 12-21 என, இழந்தார்.
இதையடுத்து வெற்றியாளரை முடிவு செய்ய, போட்டி மூன்றாவது மற்றும் கடைசி செட்டுக்கு

Advertisement

சென்றது. இதிலும் மீண்டும் சொதப்பத் துவங்கினார் சிந்து (1-6).இதன் பின் சற்று சுதாரித்துக் கொண்ட சிந்து, கொஞ்சம் கொஞ்சமாக நெருங்க, ஸ்கோர் 10-10 என, சமனை எட்டியது. இருப்பினும், சிந்து மறுபடியும் ஏமாற்ற 11-15 என, பின் தங்கினார்.கடைசியில் மூன்றாவது செட்டை 15-21 என, இழந்தார். 1 மணி நேரம், 19 நிமிட போராட்டத்தின் முடிவில், 21-19, 12-21, 15-21 என்ற கணக்கில் போராடி தோற்றார் சிந்து. இருப்பினும், ஒலிம்பிக் வரலாற்றில் முதல் வெள்ளிப்பதக்கம் கைப்பற்றிய முதல் இந்தியர், வீராங்கனை என்ற பெருமை பெற்றார் சிந்து. கரோலினா தங்கம் வென்றார்.

Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (61)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balaji - Khaithan,குவைத்
20-ஆக-201616:46:00 IST Report Abuse

Balajiஇந்த போட்டியை நேரடியாக காணும் வாய்ப்பை ஒரு தனியார் தமிழ் செய்தி சேனல் ஏற்படுத்தியிருந்தது...அதில் போட்டியை நான் கண்டு களித்தேன்....அந்த தொலைகாட்சி நிறுவனத்துக்கு எனது நன்றிகள்....போட்டி துவங்கியது முதல், முதல் செட்டில் ஆரம்பத்தில் சற்று பின்தங்கியிருந்தாலும் பிறகு சுதாரித்து முதல் செட்டை தனதாக்கிய விதம் சிந்துவின் போராட்ட குணம் வெளிப்பட்டது.... பிறகு இரண்டாவது மற்றும் மூன்றாவது செட்டில் மெரினின் ஆக்ரோஷத்துக்கு ஈடு கொடுத்து தான் விளையாடி வந்தார்.... இருந்தும் அவரால் புள்ளிகளை எளிதில் பெறமுடியாமல் போனது..... இருந்தும் எந்த நிலையிலும் விட்டுக்கொடுத்தவிடாமல் தான் போராடினார் சிந்து........ அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்......

Rate this:
Mohamed Ilyas - Karaikal,இந்தியா
20-ஆக-201613:35:59 IST Report Abuse

Mohamed Ilyasசானியா மிர்சா , சைனா நைவால் எல்லாம் விளம்பர தூதவர்களாகி வலம் வந்தது மட்டும் தான் நாட்டுக்கு மிச்சம் சிந்து போனற நாட்டின் மேன்மைக்கு பாடு படுகிற வீரர்கள் தான் தேவை

Rate this:
jagan - Chennai,இந்தியா
20-ஆக-201622:05:19 IST Report Abuse

jaganபாத்து ....விளையாட்டு அமைதி மார்கத்தில் தடைசெய்யப்பட்ட ஒன்று......

Rate this:
muthu Rajendran - chennai,இந்தியா
20-ஆக-201613:30:30 IST Report Abuse

muthu Rajendran. 120 கோடி மக்கள் கொண்ட எம் நாட்டில் ஒரு வெள்ளி பதக்கத்தை வாங்கி தந்து பெருமை படைத்த சிந்து எனும் அன்பு மகளுக்கு வாழ்த்துக்கள் அடுத்து என் நாட்டிற்கு தங்கமும் வரும் என்ற நம்பிக்கை துளிர்க்கிறது

Rate this:
Rafi - Riyadh,சவுதி அரேபியா
20-ஆக-201613:20:57 IST Report Abuse

Rafi நேரலையில் முதல் ஆட்டத்தின் வெற்றியில் தங்கம் கிடைத்துவிடும் என நினைத்தேன், இரண்டாம் ஆட்டத்தில் தளர்ந்து விட்டாய், மூன்றாமாட்டத்தில் பாதிவரை முன்னெடுத்து வைத்ததை ரசித்தேன். பின் பாதியில் தடுமாற்றம், பரவாயில்லை, ஆனந்த கண்ணீரிலிருந்த கரோலினா மர்லினை கட்டியணைத்து வாழ்த்திய போது, நம் தேச மக்களின் உளப்பூர்வமான வாழ்த்தை தெரிவிக்கின்றோம். வரும் காலங்களில் தங்க மங்கையாக பவனி வர வாழ்த்துகின்றேன்.

Rate this:
முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
20-ஆக-201612:23:46 IST Report Abuse

முக்கண் மைந்தன் நடுவர் அவர்களே......, இந்தியாவுக்காண்டி யாரு மெடலு கெலிச்சாலும் அது ஒரு "புதிய சாதனையே....". ஏன்னா சில காலம் முன்ன வரைக்கும் ஆக்கிய தவுத்து வேற எதுலயுமே யாரும் மெடலு வாங்கல....... நாளைக்கி யாராச்சும் "சும்மிங்"ல ஒரு மெடலு (வெங்கலம்னு வெச்சுக்குங்களேன்) கெலிச்சா அதும் ஒரு "புதூ சாதன"தேன்......

Rate this:
JOKER - chennai,இந்தியா
20-ஆக-201612:22:10 IST Report Abuse

JOKERஇந்தியாவின் பதக்க எண்ணிக்கையை உயர்த்திய தங்க மகள் சிந்துவுக்கு வாழ்த்துக்கள்

Rate this:
LAX - Trichy,இந்தியா
20-ஆக-201612:13:04 IST Report Abuse

LAXவாழ்த்துக்கள் சிந்து.. // Congratulations Sindhu..

Rate this:
spr - chennai,இந்தியா
20-ஆக-201610:59:57 IST Report Abuse

spr“நான் சிறப்பாக விளையாடியதற்கு எனது பயிற்சியாளர் கோபிசந்த் தான் காரணம். இறுதிபோட்டியில் என்னுடன் மோதிய கரோலினா சிறப்பாக விளையாடி தங்கம் வென்றார் . இப்போட்டியில் தங்கம் வெல்ல இருவரும் கடுமையாக போராடினோம். “என்று சொன்ன வெள்ளித் தாரகை செல்வி சிந்துவிற்குப் பாராட்டுகள் "கான முயலெய்த அம்பினில் யானை பிழைத்தவேல் ஏந்தல் இனிது”.இதற்குப் பொருள் "வலிவு மிகுந்த யானைக்குக் குறிவைத்து, அந்தக் குறி தப்பினாலும் கூட அது, வலிவற்ற முயலுக்குக் குறிவைத்து அதனை வீழ்த்துவதைக் காட்டிலும் சிறப்புடையது." தங்கத்தை” (யானையின் மேல் எறிந்த வேல்) குறிவைத்து ஆடிய திறமை (குறிதப்புவது போல) பலன் தாராவிடினும் இவரது விளையாட்டுத்திறமை பாராட்டுதற்குரியது எதிரணி மகளிரும் சிறப்பாக ஆடுவதோடு செல்வி சிந்துவின் கவனத்தை சிதறடிக்கும் வகையில் அவ்வப்பொழுது சில செயல்களை செய்தார் திறமையான ஆட்டத்தோடு மிக்க மனவலிமை உடையவரே என நிரூபித்தார் ஆனால்......................"மீண்டும் சொதப்பத் துவங்கினார் சிந்து" என்று கொஞ்சம் கூடாக கூச்சமில்லாமல் குளிரூட்டிய அறையில் அமர்ந்து எழுதிய செய்தி சேகரிப்பாளருக்கு ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் நாடி விளையாடும் ஒரு நபருக்கு உள்ள மன அழுத்தம் குறித்து என்ன தெரியும்? இவரையாவது மன்னித்துவிடலாம் ஆனால் இந்த ஒரு செய்திக்குறிப்பில் மட்டுமல்ல தினமலரில் இன்று வெளியான அனைத்துத் தொகுப்பிலும் இதே சொற்றோடர்களை தணிக்கை செய்யாமல் வெளியிட்ட பத்திரிகையின் ஆசிரியரை என்ன செய்யலாம் ?............”

Rate this:
JAY JAY - CHENNAI,இந்தியா
20-ஆக-201610:43:43 IST Report Abuse

JAY JAY நேற்று நம்மவர்கள், குறிப்பாக மீடியாக்கள் பண்ணிய அலப்பறை சொல்லி மாளாது.... எதற்கு இந்த தனி மனித முக்கியத்துவம்...?.. சிந்து சிந்து..சிந்து...இப்படி அனைத்து மீடியாக்களும் சிந்து பாடும்போதே தெரிந்துவிட்டது, இவர் தங்கம் வெல்லமாட்டார் என்று...காரணம் பிரஷர்... ஒரு வீராங்கனையின் மீது ஒட்டு மொத்த இந்தியாவில் உள்ள 120 கோடி பேரும் கண்களை வைத்து உற்று நோக்கினால், பிரஷர் அதிகமாகி நிச்சயம் தோற்க தான் கூடும்... விளையாட்டில் வெற்றி வரலாம்...போகலாம்.. அமெரிக்காவின் பெல்ப் தனிப்பட்ட மனிதனாக 22 தங்க பதக்கம் வென்றுள்ளார்...ஆனாலும் அங்குள்ள மீடியாக்கள் அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாட வில்லை... அவரது நீச்சல் போட்டியை LIVE ஆக அனைத்து சேனல்களும் ஒளிபரப்பவில்லை.. மக்களும் கூட அப்படிதான்... ஆனால் நம்மவர்கள் தான் ஹீரோ ஒர்ஷிப் பண்ணுவதில் பேர் போனவர்கள்.. தங்க தாரகையே , விடி வெள்ளியே இப்படி அடை மொழிகள் வேறு... ஒரு கிரிக்கெட் வீரரை கடவுள் என்றே கொண்டாடுவது கேவலத்தின் உச்சக்கட்டம்... நல்லவேளை இந்த பெண் தங்கம் வெல்லவில்லை... வென்றிருந்தால், அடுத்து ஒரு ENERGY DRINK SPONSOR ஆகியிருப்பார்... இந்த எனர்ஜி ட்ரின்க் குடித்ததால் தான் இவர் தங்கம் வென்றார் என்பது மாதிரியான விளம்பரங்கள் பட்டையை கிளப்பி இருக்கும்..... இதன் மூலம் குறுகிய காலத்தில் அந்த பெண்ணும் பல கோடி சம்பாதித்து இருப்பார்... ஆனால், இந்திய விளையாட்டு, தரை மட்டமாகியிருக்கும்.... நமது வீரர்கள் ஒரு முறை ஒரு பதக்கம் வென்றால் ரெண்டாவது முறை வெல்லாமல் போவதற்கு இதுவே காரணம்... பதக்கம் வென்றால், அவரை ஹீரோ ஆக்கி விடுகிறார்கள்... விளம்பரங்கள் மூலம் கோடி சம்பாதித்த பின்னர் நாட்டுக்காக விளையாட வேண்டும் என்ற அந்த மனதின் எரிமலை பின்னர் எப்படி வேலை செய்யும்?... பணம் தான் பிரதானமாக தெரியும்... பெல்ப் 22 பதக்கங்கள் தொடர்ந்து பெற்றதற்கு காரணம், விளையாட்டின் மீதான அவரது ஈர்ப்பும், அந்த நாட்டில் விளம்பரங்கள் மூலம் இவர்கள் அதிகம் சம்பாதித்து கல்லா கட்ட முடியாததும் தான் காரணம்... அதனால் தான் அவர்களால் தொடர்ந்து வெற்றி பெற்று , தனது நாட்டிற்கு விருதுகளை வாங்கி தரமுடிகிறது.... விளையாட்டில் நாம் கடக்க வேண்டிய தூரம் அதிகம் உள்ளது... பதக்கம் வென்றால் இங்கு அளிக்கப்படும் ராஜ மரியாதையை குறைத்து கொண்டாலே, வீரர்கள், பணம் என்ற ஒற்றை குறிக்கோளை மறந்து, மீண்டும் மீண்டும் பதக்கம் வெல்வார்கள்... ரத்தோர் பதக்கம் வென்றார் ,.ஆனால் அவரை விளையாட கூட விடாமல் மந்திரியாக்கி விட்டார்கள்.. மந்திரியாக , நல்லவர்களுக்கா பஞ்சம்?.. விளையாட்டு வீரர் தானா கிடைத்தார்?... இப்படியே அரசும் , கார்ப்பரேட் களும், மீடியாக்களும் செய்து கொண்டு இருந்தால், 120 கோடி சனம் கொண்ட இந்தியா தெடர்ந்து, விளையாட்டில் PRE KG லெவலில் தான் இருக்கும்.. விளையாட்டில் பாலிடிக்ஸ் ஐ சேர்க்காதீர்கள்... நாம் அதிகம் பதக்கம் நிச்சயம் வெல்லலாம்...

Rate this:
Subramaniya prabu.G - (sivagangai ) Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
20-ஆக-201610:35:09 IST Report Abuse

Subramaniya prabu.Gபோராடி வெற்றி கண்ட சகோதரிக்கு வாழ்த்துக்கள்... இதுவே முதல் படி இன்னும் உங்கள் வெற்றிகள்/ முயற்சிகள் தொடர வாழ்த்துக்கள்...

Rate this:
மேலும் 50 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement