கைதாவாரா கார்த்தி சிதம்பரம் ?| Dinamalar

பொது செய்தி

இந்தியா

கைதாவாரா கார்த்தி சிதம்பரம் ?

Updated : செப் 02, 2016 | Added : செப் 02, 2016 | கருத்துகள் (42)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
கைதாவாரா கார்த்தி சிதம்பரம் ?

புதுடில்லி : முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத்துறை அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
2ஜி ஊழல் வழக்கின் ஒரு பகுதியாக ஏர்செல் - மேக்சிஸ் ஒப்பந்த விவகாரத்தில் கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத்துறை சார்பில் பண மோசடி வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவ்வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறை சார்பில் கார்த்தி சிதம்பரத்திற்கு இதுவரை 3 முறை சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் விசாரணைக்கு ஆஜராவதை தவிர்த்து வருவதுடன், சம்மனுக்கு எதிராகவும் கார்த்தி சிதரம்பரம் கேள்வி கேட்டுள்ளார்.
சம்மன் ஒன்றிற்கு எதிர் கேள்வி எழுப்பி உள்ள கார்த்தி சிதம்பரம், நான் என்ன குற்றம் செய்தேன்? என கேட்டுள்ளார். தனது கேள்விக்கு அமலாக்கத்துறை பதிலளித்த பிறகு நல்ல முடிவை எடுக்க உள்ளதாகவும் கார்த்தி தெரிவித்துள்ளார். தொடர்ந்து சம்மன்களை தவிர்த்து வருவதால் கார்த்தியை கைது செய்து, விசாரணை நடத்த அமலாக்கத்துறை முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேற்குவங்க மாநிலம் சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில், சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரத்திற்கும் சமீபத்தில் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (42)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா
03-செப்-201605:25:40 IST Report Abuse
Rajendra Bupathi ஜாமீனுல வெளீயே வரமுடியாத செக்க்ஷன்ல தூக்கி உள்ள போடுங்க ?
Rate this:
Share this comment
Cancel
adalarasan - chennai,இந்தியா
02-செப்-201622:54:58 IST Report Abuse
adalarasan சம்மன் அனுப்பினால் மதிக்கவேண்டும் தன்னுடைய விளக்கத்தை சட்டபூர்வமாக தந்து எதிர்கொள்ளவேண்டும்? மோடிஜி உட்பட, எவ்வளவோ தலைவர்கள், குற்றச்சாட்டுக்களின் பேரில் விசாரிக்கப்பட்டுள்ளனர்>>?
Rate this:
Share this comment
Cancel
s. subramanian - vallanadu,இந்தியா
02-செப்-201619:08:12 IST Report Abuse
s. subramanian மல்லையா மாதிரி ஓடும் காலம் வந்துவிட்டது . நீதிமன்றம் சொத்த்துக்களை முடக்கினால் ...... அட எங்கப்பா உலக கடன்களை எல்லாம் அடைத்தது விடலாம். அவ்வளவு சுருட்டி இருக்காங்க
Rate this:
Share this comment
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
02-செப்-201618:59:40 IST Report Abuse
r.sundaram நான் குற்றம் செய்யவில்லை என்று அமலாக்கத்துறையிடம் போய் சொல்ல வேண்டியது தானே? வெளியில் இருந்து சொல்வதை உள்ளே போய் சொல்லுங்கள் சார். உள்ளே போனால் அந்த 14 நாடுகளை பற்றி கேள்வி கேட்பார்கள் என்ற பயமா? அப்பாவும் அம்மாவும் வக்கீல்கள்.நீங்களே பயந்தா எப்படி சார். கொஞ்சம் தைரியமா நெஞ்சை நிமிர்த்திக்கிட்டு போங்க. எக்குத்தப்பாக கேழ்வி கேட்டால் உண்மையை உளறி விடுவோம்மோ என்ற பயமா? இருக்கிறது போதும் என்ற மனதுடன், நேர்மையாக, நாணயமாக வியபாரம் பண்ணினால் இந்த பயம் வருமா, சொல்லுங்கள்.
Rate this:
Share this comment
Cancel
Murukesan Kannankulam - Kannankulam,இந்தியா
02-செப்-201618:43:36 IST Report Abuse
Murukesan Kannankulam 2ஜி ஊழல் வழக்கின் ஒரு பகுதியாக ஏர்செல் - மேக்சிஸ் ஒப்பந்த விவகாரம் கேட்டால் சொல்லுவார்கள் 9000 கோடி ஊழல் வெளியே 1.76 கோடி உள்ளே விந்தையாக உள்ளது
Rate this:
Share this comment
Cancel
Sridhar S - Chennai,இந்தியா
02-செப்-201617:39:20 IST Report Abuse
Sridhar S நாங்க என்ன பல லட்சம் கோடியா கொள்ளை அடிச்சோம் .. சில கோடி தானே இதற்க்கு ஏன் விசாரணை ... என்று கேட்கிறார் போல ..
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
02-செப்-201617:27:41 IST Report Abuse
Endrum Indian அரசியல்வாதிகள், நடிக/ நடிகைகள், பணக்காரர்கள் இவர்கள் கோர்ட், சட்ட விதிமுறைகளுக்கு அப்பார்ப்பட்டவர்கள் இந்தியாவில், இது தான் யதார்த்தம்.
Rate this:
Share this comment
Cancel
kowsik Rishi - Chennai,இந்தியா
02-செப்-201617:23:56 IST Report Abuse
kowsik Rishi மு.கருணாநிதியின் கூட்டத்தில் மாறன், கார்த்திக் கூட்டம் இந்தியாவில் சிறப்பு குடிமக்கள் இவர்கள் என்ன யார் செய்து விடமுடியும் என்ற தோரணை தானே பிக் பாக்கெட், டிக்கெட் இல்லா பயணி என்று எல்லாரும் உடனே கைது நடவடிக்கை - மாறன், கார்த்திக், மு. கருணாநிதி ஆள் என்றால் எல்லாம் கப் சிப். என்று இவர்களை எல்லாம் கைது, விசாரணை, தண்டனை என்று செய்து வருமோ அன்று தான் இந்தியாவின் சட்டம் சட்டம் அது வரை மர சட்டம்
Rate this:
Share this comment
Cancel
Citizen - Calgary,கனடா
02-செப்-201616:17:58 IST Report Abuse
Citizen இவனை கைது பண்ணுங்க சொல்ற நம்மள வேணும்னா கைது பண்ணுவானுங்க இவனை பண்ண மாட்டானுக ...நம்ம சட்டம் அப்டி......
Rate this:
Share this comment
Cancel
K.Palanivelu - Toronto,கனடா
02-செப்-201615:37:14 IST Report Abuse
K.Palanivelu சிதம்பரம் காங்கிரஸ் ஆட்சியில் நிதிஅமைச்சராய் நெடுங்காலம்பதவி வகித்தபடியால் இன்னும் அவருக்கு மேல்மட்டத்தில் அதிகாரிகளின் ஆதரவு அவருக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் மறைமுகமாக இருந்துவருகிறது. அது களையப்பட்டு சட்டத்தின் முன் அனைவரும் ஒன்றேயென கடும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை