மேய்ச்சல் நிலமாக மாறிய மதியம்பட்டி ஏரி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மேய்ச்சல் நிலமாக மாறிய மதியம்பட்டி ஏரி

Added : செப் 05, 2016

மல்லசமுத்திரம்: மதியம்பட்டி ஏரியில், போதிய நீர்வரத்து இல்லாத காரணத்தால், மேய்ச்சல் நிலமாக மாறியுள்ளது. வெண்ணந்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட, மல்லசமுத்திரம் அடுத்த, மதியம்பட்டி ஏரியில் நீர் வற்றியதால், மேய்ச்சல் நிலமாக மாறியது. இப்பகுதியில், பெரியஏரி, சின்னஏரி அமைந்துள்ளது. தற்போது பெய்து வரும் பருவமழையால் ஏரிக்கு போதிய நீர்வரத்து இல்லாமல் புற்கள் முளைத்து மேய்ச்சல் நிலமாக மாறியுள்ளது. இந்த ஏரிக்கு, மாமுண்டி திருமணி முத்தாற்றில் அதிக மழைப்பொலிவு ஏற்பட்டு, அதிலிருந்து பிரிந்து, மதியம்பட்டி பெரியஏரி மற்றும் சின்னஏரிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படும். இதனால், இப்பகுதியில், விளைநிலங்கள் பயன்பெறும். அதில், பருத்தி, சோளம், மக்காட்சோளம், பாசிப்பயிறு, நிலக்கடலை உள்ளிட்ட பயிர்வகைகள் விளைவிக்கபட்டு, விவசாயிகள் அதிக மகசூல் ஈட்டி வந்தனர். தற்போது, மழைப்பொலிவு போதிய அளவு இல்லாததால், நீர்வரத்து குறைந்து விவசாயிகள் தங்களது வளர்ப்பு கால்நடைகளை மேய்த்து வருகின்றனர். மேலும், ஆங்காங்கே தண்ணீர் தேங்கி குட்டைபோல் மாறியுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X