மின்சார ரயில் தண்டவாளம் உடைந்து விலகியது : "கேங்மேன்' சாமர்த்தியத்தால் விபத்து தவிர்ப்பு| Dinamalar

மின்சார ரயில் தண்டவாளம் உடைந்து விலகியது : "கேங்மேன்' சாமர்த்தியத்தால் விபத்து தவிர்ப்பு

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement
மின்சார ரயில் தண்டவாளம் உடைந்து விலகியது :

சென்னை: சென்னை பீச் - தாம்பரம் இடையில் புறநகர் மின்சார ரயில் பாதையில் பூங்கா ரயில் நிலையம் அருகில் நேற்று தண்டவாளம் உடைந்து விலகியதால், அந்த வழியில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பாதை பராமரிப்பு பணியில் இருந்த கேங்மேன் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.


சென்னைபீச் - தாம்பரம் இடையில் புறநகர் மின்சார ரயில்கள் தினசரி இயக்கப்பட்டு வருகின்றன. இப்பாதையில் நேற்று காலை 11:15 மணியளவில் பூங்கா ரயில் நிலையம் அருகில் திடீரென ரயில் தண்டவாளம் உடைந்து, ஸ்லீப்பர் கட்டையை விட்டு விலகிவிட்டது. இதை அப்பகுதியில் பாதை பராமரிப்பு பணியில் இருந்த கேங்மேன் ஒருவர் பார்த்துவிட்டார். அவர் ரயில் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கும் முன், அதே பாதையில் எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து பீச் ரயில் நிலையம் நோக்கி மின்சார ரயில் புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. விரைவாக செயல்பட்ட அந்த கேங்மேன், ரயில் வந்து கொண்டிருந்த தண்டவாளத்தை நோக்கி ஓடியதுடன், கையசைத்து ரயிலை நிறுத்த கூறினார். ரயில் டிரைவர் ரயிலை உடனே நிறுத்தினார். டிரைவரிடம், தண்டவாளம் உடைந்து கிடக்கும் விவரத்தை தெரிவித்ததுடன், உடனடியாக உயர் அதிகாரிகளுக்கும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த வழியில் மின்சார ரயில்கள் உடனடியாக நிறுத்தப்பட்டன. சம்பவ இடம் வந்த ரயில்வே அதிகாரிகள் தற்காலிகமாக தண்டவாளத்தை பொருத்தினர். இதனால், ஒரு மணி நேரம் ரயில் போக்குவரத்து தடைபட்டது. பகல் 12:15 மணியில் இருந்து ரயில் போக்குவரத்து மீண்டும் துவங்கியது. குறிப்பிட்ட அந்த தண்டவாளப் பகுதியில் மட்டும் ரயில்கள் மெதுவாக இயக்கப்பட்டன. அதிகப்படியான வெப்பத்தால், இச்சம்பவம் ஏற்பட்டிருக்கலாம் என ரயில்வே தரப்பில் கூறப்படுகிறது.


Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.