Assam's Majuli becomes the first island district of India | மஜுலி.. இந்தியாவின் முதல் தீவு மாவட்டம்!| Dinamalar

பொது செய்தி

இந்தியா

மஜுலி.. இந்தியாவின் முதல் தீவு மாவட்டம்!

Added : செப் 09, 2016 | கருத்துகள் (5)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
மஜுலி.. இந்தியாவின் முதல் தீவு மாவட்டம்!

திஷ்பூர் : அசாம் மாநிலத்தில் பிரம்மபுத்திரா நதியால் சூழப்பட்ட மஜுலி பகுதி, இந்தியாவின் முதல் தீவு மாவட்டமாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
அசாம் மாநிலத்தில் உள்ள ஆற்றுத் தீவுப் பகுதியான மஜுலி, உலகின் பெரிய ஆற்றுத் தீவு என்ற பெருமை பெற்றது. பிரம்மபுத்திரா நதியால் நாலாபுறமும் சூழப்பட்ட இத்தீவின் மொத்த பரப்பளவு 352 சதுர கிலோமீட்டர் மட்டுமே. இந்நிலையில் அசாம் முதல்வர் சர்வானந்த சோனோவால் தலைமையிலான அமைச்சரவை, மஜுலியை மாவட்டமாக தரம் உயர்த்த ஒப்புதல் அளித்தது. இதனையடுத்த இந்தியாவின் முதல் தீவு மாவட்டமாக மஜுலி உதயமானது.
இதுகுறித்து அசாம் முதல்வர் சோனோவால் கூறியதாவது: மஜுலி அசாமின் 35வது மாவட்டமாக உதயமாகியுள்ளது. இதன்மூலம் அங்குள்ள மக்களின் நீண்டகால ஆசை நிறைவேறியுள்ளது. மஜுலி இனி பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்து நிலைகளிலும் முன்னேற்றம் அடையும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
09-செப்-201617:26:42 IST Report Abuse
மலரின் மகள் மானசரோவர் ஏரி - பிரம்மபுத்திரா
Rate this:
Share this comment
Cancel
Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா
09-செப்-201611:20:26 IST Report Abuse
Rajendra Bupathi பிரம்மபுத்திரா நதி அடிக்கடி சோகத்தையும் கொடுக்கும், அநேக சுகத்தையும் கொடுக்கும்.
Rate this:
Share this comment
Cancel
Nagan Srinivasan - Houston,யூ.எஸ்.ஏ
09-செப்-201608:18:44 IST Report Abuse
Nagan Srinivasan பிரம்மபுத்திரா நதி கைலாஷ் மலையில் இருந்து உற்பத்தி ஆகி வருகின்றது. கொடுத்து வைத்தவர்கள் அசாம் மாநிலத்தில் பிரம்மபுத்திரா நதியால் சூழப்பட்ட மஜுலி பகுதி வாழ் மக்கள்
Rate this:
Share this comment
Pannadai Pandian - wuxi,சீனா
09-செப்-201610:50:34 IST Report Abuse
Pannadai Pandianதல.....பிரம்மபுத்ரா சீனாவின் திபெத்தில் உருவாகிறது. அங்கு அதற்கு பெயர் சாங்ப்போ. பின் அது இந்தியாவின் அருணாச்சலில் நுழைந்து 5 நதிகளாக பிரிகிறது.அப்படி பிரிந்த நதிகளுக்கு பெயர் கமெங், சுபான்சிரி, சியாங், லோஹிட், டிராப். இதன் காரணமாகவே அருணாச்சல பிரதேஷ் உருவாக்கப்பட்ட போது நதிகளின் பெயரின் 5 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டது. தற்போது பல மாவட்டங்கள் மக்கள் பெருக்கம், பல பகுதிகளை முன்னிலை படுத்தி முன்னேற்றுதல் போன்ற காரணங்களால் உருவாக்கப்பட்டாலும், முதன் முதலில் இந்த 5 மாவட்டங்கள் தான் இருந்தது. இந்த 5 நதிகளும் மறுபடியும் அஸ்ஸாமில் ஒன்றாக கலக்கிறது. அதற்கு பெயர் பிரம்மபுத்ரா. பிரம்மபுத்ரா நதிக்கரையோரம் ரம்மியமானது. அங்குள்ள மாஜிகள்( படகு ஓட்டுபவர்கள் ) பெரும்பாலும் பீஹாரிகள்.மிக கடினமான உழைப்பாளிகள். இவர்களுக்காகவே பல பாடல்களை அஸ்ஸாமின் பிரபல பாடகர் பூபன் ஹசாரிக்கா பாடியிருக்கிறார். கலாச்சாரம் செறிந்தது பிரம்மபுத்ரா கரையோரம். இதன் கரைகளில் உள்ள டீ எஸ்டேட்டுகளை காண கண் போதாது. அவ்வளவு அழகு. அஸ்ஸாமியர்களின் பிகு நாட்டியமும் பிகு பாடல்களும் நம்பர் 1 கிராமிய புராதன பாடல்கள். வடக்கு கரையோரம் மிரி மக்கள் வசிக்கின்றனர். அவர்கள் புல்லாங்குழல் வாசிக்கும் போது கிருஷ்ணரே வாசிப்பது போல இருக்கும். இப்ப போடுங்க அஸ்ஸாமுக்கு ஒரு ஓ நல்லா வாய மூடி நாக்கை மடக்கி விசில் அடியுங்க......மேரே பாரத் மஹான்...
Rate this:
Share this comment
K.Sugavanam - Salem,இந்தியா
09-செப்-201614:02:16 IST Report Abuse
K.Sugavanamபிரம்மபுத்ரா வீட்டுக்கே வருகிறது. கொடுத்து வைத்தவர்கள். கைலாஷை அபிஷேகம் செய்துவிட்டு....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X