பாலித்தீன் பைகளுக்கு வருகிறது முழு தடை| Dinamalar

பொது செய்தி

இந்தியா

பாலித்தீன் பைகளுக்கு வருகிறது முழு தடை

Updated : செப் 11, 2016 | Added : செப் 10, 2016 | கருத்துகள் (15)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
பாலித்தீன் பைகளுக்கு வருகிறது முழு தடை

புதுடில்லி: -'துாய்மை இந்தியா' திட்டத்தின் ஒரு பகுதியாக, மஹாத்மா காந்தி பிறந்த நாளான, அக்., 2 முதல், நாட்டின் அனைத்து சுற்றுலா தலங்கள் மற்றும் தேசிய நினைவுச் சின்னங்கள் அமைந்துள்ள பகுதிகளில், பாலித்தீன் பை பயன்பாட்டிற்கு முழு தடை விதிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது.
இதுகுறித்து, மத்திய சுற்றுலா துறை அமைச்சர் மகேஷ் சர்மா கூறியதாவது: பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சியால், நாடு முழுவதும், துாய்மை இந்தியா திட்டம் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. சுற்றுலா துறையும் இதில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

பாலித்தீன் பைகளின் பயன்பாட்டால், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இதனால், மழைநீர் மண்ணுக்குள் செல்வது தடுக்கப்படுகிறது; நிலத்தடி நீர்மட்டம் குறைகிறது. மண் வளம் குறைந்து, புவி வெப்பமயமாகிறது.

எனவே, நாட்டின் அனைத்து சுற்றுலா தலங்கள் மற்றும் தேசிய நினைவுச் சின்னங்கள் அமைந்துள்ள இடங்களில், பாலித்தீன் பை பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்படுகிறது. இந்த தடை, மஹாத்மா காந்தி பிறந்த நாளான, அக்., 2ம் தேதி முதல் அமலாகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Paranthaman - kadappa,இந்தியா
12-செப்-201615:46:57 IST Report Abuse
Paranthaman சுத்தமான இந்தியா உறுவாவதை கிராம பகுதிகளில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். பழைய காலங்களில் கிராம ஏரிகளின் மீது பனை மரங்களையும் கருவேல மரங்களையும் வளர்த்தார்கள். இப்போது ஏரிக்கரைகளை கிராம மக்கள் கழிப்பிடங்களாக பயன்படுத்தி வருகிறார்கள். அடுத்து நாட்டின் ஒட்டுமொத்த சாலையோரங்களை சீர்படுத்தி இரு பக்கங்களிலும் சித்த மருத்துவ மூலிகை செடிகளை தக்க பாதுகாப்புடன் வைக்கலாம். அவைகளில் வளரும் மூலிகை தாவரங்களை சித்த மருத்துவ மருந்துகளில் பயன்படுத்தி அரசு நியாய விலைக்கடைகளில் ஒரு சித்தமருத்துவர் ஆலோசனையில் குறைந்த விலைகளில் விற்பனை செய்யலாம். நாட்டில் உள்ள அனைத்து ஏரிகள் குளங்கள் ஆறுகள் நதிகள் மற்ற நீர்நிலைகளை ஆகியவைகளை தூய்மைபடுத்துவதுடன் அவைகளை மக்கள் உபயோகப்படுத்தும் முறைகளில் சித்த மருத்துவ மூலிகை பவடர்களை தெளித்து நீரை தூய்மை படுத்தலாம். தூய்மை என்பது மிருகங்களில் இல்லை. மனிதர்களிடம் உள்ளன. ஆனால் பெரும்பான்மை மக்கள் சரியான நேரத்தில் சரியான உணவு நல்ல உடை உறைவிடங்கள் புறத்தூயுமை இன்றியும் வியர்வைகளில் தூசிகள் படிந்த அழுக்கு மேனிகளுடன் அலைந்து வாழ்கிறார்கள். அவர்களை முதலில் தூய்மை படுத்துவது அவசியம். அதற்காக முதல் கட்டமாக தொழிற்சாலைகள் வயல்காடுகள் கட்ட்ட வேலைகள் ஆகியவற்றில் ஈடுபடும் மனிதர்களை ஒன்றிணைத்து அவர்கள் அருகில் தினக்குளியலுக்கான சோப்பு சீப்பு முகம் பார்க்கும் கண்ணாடி தூய்மையான உடைகள் அடங்கிய பொது பாத் ரூம்கள்களை அமைத்து அதனை பராமரிக்கும் ஆட்களையும் நியமிக்கவேண்டும். எவரேனும் புற தூய்மையுடன் இல்லை எனில் அவர்களிடம் தக்க அபராதம் வசூலிக்கவேண்டும். இந்த முறைகளில் நாடும் மனிதர்களும் தூய்மை பெறுவதுடன் ஜாதி உணர்வுகளும் அடியோடு ஒழிந்துவிடும். அப்போது தான் பிரதமர் எதிர் பார்க்கும் தூய்மையான இந்தியா கிடைக்கும்.
Rate this:
Share this comment
Cancel
Paranthaman - kadappa,இந்தியா
12-செப்-201615:18:55 IST Report Abuse
Paranthaman அரக்கு மாளிகைகளை கட்டி வாழ்ந்தவர் பற்றி மகாபாரதம் கூறுகிறது. நாட்டில் பெருகி வரும் மனித சமுதாய சுவாசத்தின் எதிரியாக விளங்கும் யூஸ அண்டு துரோ பிளாஸ்டிக் பைகள் மற்றும் அதனாலான மற்ற பொருட்கள் அனைத்தையும் சேமிப்பு குடோன்களில் சேர்த்து அவைகளை மறு சுழற்சியில் சிமெண்ட் கலப்பிற்கு பதிலாக ஐல்லி மணல்களில் கலந்து உருக்கி ரெடி மேடு வீடுகளை கட்டுவதற்கு வேண்டிய சுவர் பலகைகள மேற்கூறைகள் தரைத்தளங்கள் பிளாட்பாரங்கள் மெத்தை படிக்கட்டுகள் கிளாசெட்டுகள் விநாயகர் சிலைகள் கோயில் கோபுரங்கள் மோட்டார் வாகன உதிரி பாகங்கள் மீனவர் படகுக்ள் ஆகியவைகளில் பயன்படுத்தலாம்.
Rate this:
Share this comment
Cancel
Krishna Sreenivasan - singapore,சிங்கப்பூர்
12-செப்-201611:17:24 IST Report Abuse
Krishna Sreenivasan இந்த உலகிலே பிளாஸ்டிக் இல்லாத எதுவுமே இல்லிங்க சகலமும் பிளாஸ்டிக் மயம் தான் அவ்ளோ அதிகமா எல்லோருமே யூஸ் பண்றோம் என்பதுதான் உண்மை, சிலதுகளில் ஓகே, சாப்பிட்றதுக்கெல்லாம் வேண்டாமே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X