ராமநாதபுரத்தின் முன்னோடி பகுதியாக உள்ளது "தினமலர்' நகர் விழாவில் கலெக்டர் புகழாரம்| Dinamalar

ராமநாதபுரத்தின் முன்னோடி பகுதியாக உள்ளது "தினமலர்' நகர் விழாவில் கலெக்டர் புகழாரம்

Added : ஜூன் 10, 2010
Advertisement

ராமநாதபுரம்: ""ராமநாதபுரத்தில் முன்னோடி நகர் பகுதியாக "தினமலர்' நகர் விளங்குவதாக,'' கலெக்டர் ஹரிஹரன் பேசினார். "தினமலர்' நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தின் இரண்டாம் ஆண்டு விழா நேற்று கொண்டாடப்பட்டது. சங்க தலைவர் தாமஸ் வில்லியம் வரவேற்றார். இணை செயலாளர் சுவாமி ஆண்டறிக்கை அளித்தார். கலெக்டர் ஹரிஹரன் தலைமை வகித்து பேசியதாவது: "தினமலர்' நகரில் நுழைந்த உடனேயே வித்யாசமான உணர்வை பெறமுடிந்தது. இப்பகுதி ராமநாதபுரத்தில் தான் உள்ளதா, என வியப்பாக உள்ளது. மத்திய அமைச்சர் வாசனிடம் முயன்று நிதிபெறும் அளவுக்கு இப்பகுதி மக்களுக்கு திறமை உள்ளது. இதே போல முயன்று வசதிகளை பெற்றுக் கொள்ளும் பக்குவத்தை பொதுமக்கள் பெறவேண்டும். அதை தவிர்த்து மறியல், போராட்டங்களில் ஈடுபடுவது பலனளிக்காது. இப்பகுதி நிச்சயம் ராமநாதபுரத்தின் முன்னோடி பகுதி என்பதை மறுப்பதற்கில்லை, என்றார். முன்னிலை வகித்த பாலசுப்பிரமணியன் டி.ஆர்.ஓ., பேசியதாவது:


பசுமையின் முக்கியத்துவம் உணர்ந்து மரக்கன்றுகளை அதிக அளவில் நட்டுள்ளனர். இதுவே இப்பகுதி மக்களின் பொறுப்புணர்ச்சியை காட்டுகிறது. குடியிருப்பு சங்கங்கள் பெயரளவில் இல்லாமல் தொடர்ந்து மக்கள் சேவையிலும் ஈடுபட வேண்டும். அதற்கு தினமலர் நகர் நல்ல உதாரணமாக உள்ளது, என் றார். மாவட்ட ஊராட்சி தலைவர் ரவிச்சந்திரராமவன்னி, பயிற்சி கலெக்டர் மோகனசுந்தரம், செய்திமக்கள் தொடர்பு அலுவலர் செல்வராஜ், மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் விஜயகுமார், உதவி செயற்பொறியாளர் பாண்டியன், டாக்டர் பாபு அப்துல்லா, சங்க தேர்வு தலைவர் சின்னத்துரை அப்துல்லா,சங்க கவுரவ ஆலோசகர்கள் டாக்டர்கள் ரவிராஜேந்திரன், கியாவூதீன், சட்டஆலோசகர் முனியசாமி உட்பட நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர். நிகழ்ச்சியை ஆசிரியர் கள் ஆரோக்கியதாஸ், ஆரோக்கிய பிரபு தொகுத்து வழங்கினர்.ரத்ததானம் செய்த மாணவ, மாணவிகள் தினமலர் நகர் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் நடந்த ரத்ததான முகாமில் ராமநாதபுரம் அன்னை கேட்டரிங், நர்சிங் பாரா மெடிக்கல் கல்லூரி, பரமக்குடி முத்தாலம்மன் பாலிடெக்னிக் கல்லூரி மாணவ, மாணவிகள் பலரும் பங்கேற்றனர். இதை சங்க கவுரவ ஆலோசகர் டாக்டர் ரவிராஜேந்திரன் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். சங்க தலைவர் தாமஸ் வில்லியம் வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர் அய்யப்பன் பேசினார். தேர்வு செயலாளர் விஜயபாஸ்கர், துணை தலைவர் கருணாகரன், துணை செயலாளர் சுவாமி, பொருளாளர் ஆரோக்கியராஜ்,அன்னை கேட்டரிங் கல்லூரி தாளாளர் ஈஸ்வரன், முதல்வர் மகேஸ்வரி, முத்தாலம்மன் பாலிடெக்னிக் கல்லூரி திட்ட அலுவலர் ராமநாதன் , உதவியாளர் அமர்நாத் பங்கேற்றனர்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X