இதே நாளில் அன்று| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இதே நாளில் அன்று

Added : செப் 13, 2016
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 இதே நாளில் அன்று

2015 - செப்டம்பர் 14
கல்கி, சாண்டில்யன், அகிலன் போன்ற வரலாற்றுப் புதின எழுத்தாளர்கள் வரிசையில், கவுதம நீலாம்பரனுக்கும் இடம் உண்டு!கடந்த, 1948 ஜூன், 14ம் தேதி, கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அருகே உள்ள சப்தகூடலில் பிறந்தார்; இயற்பெயர்: க.கைலாசநாதன்; தீபம், இதயம் பேசுகிறது, ஞானபூமி, ஆனந்த விகடன், குங்குமம், குங்குமச் சிமிழ் போன்ற இதழ்களில் பணியாற்றி உள்ளார். கிட்டத்தட்ட, 200 சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், வரலாற்றுப் புதினங்கள், வானொலி மற்றும் தொலைக்காட்சி நாடகங்கள் என, பல படைப்புகளை ஆக்கியுள்ளார்.ஈழவேந்தன் சங்கிலி, பல்லவன் தந்த அரியணை, வெற்றித் திலகம், பல்லவ மோகினி, மாசிடோனிய மாவீரன், சோழவேங்கை உள்ளிட்ட, இவரது பல வரலாற்றுப் புதினங்கள், வாசகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றன.'இலக்கியப் பேரொளி, தமிழ் வாகைச் செம்மல், தமிழ்மாமணி' உட்பட, பல விருதுகளை பெற்ற, கவுதம நீலாம்பரன் இறந்த நாள் இன்று!

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X