அடுத்த மாதம் பொழியவுள்ள பருவ மழைக்கு ஏரிகள் தாங்குமா? அதிகாரிகளின் அலட்சியத்தால் பலமிழந்த ஏரிகள் Dinamalar

எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
தாங்குமா?
அடுத்த மாதம் பொழியவுள்ள மழைக்கு ஏரிகள் தாங்குமா?
அதிகாரிகள் அலட்சியம் பலமிழந்த ஏரிகள்

மாவட்டம் முழுவதும் பொதுப்பணித்துறை மற்றும் ஊராட்சி கட்டுப்பாட்டில், 1,800க்கும் மேற்பட்ட ஏரிகள் உள்ளன. இதில், பொதுப் பணித்துறையினர், 912 ஏரிகளை பராமரித்து வருகின்றனர்.

அடுத்த மாதம் பொழியவுள்ள பருவ மழைக்கு ஏரிகள் தாங்குமா? அதிகாரிகளின் அலட்சியத்தால் பலமிழந்த ஏரிகள்

பொதுப்பணித்துறை ஏரிகள் கடந்த காலங்களில் முறையாக பராமரிக்காமலும், பராமரிப்பு நிதியில் ஏராளமான முறைகேடுகள் காரணமாக, கடந்த ஆண்டு பெய்த பருவ மழையில், பெரும்பாலான பெரிய ஏரிகள் உடைந்தன.

இந்நிலையில், அடுத்த மாதம் வட கிழக்கு பருவ மழை துவங்கவுள்ள நிலையில், ஓராண்டு கடந்த பின்பும், இன்றைய நாள் வரை பெரும்பாலான ஏரிகள் பராமரிக்கப்படாமல் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதன் விளைவாக, அடுத்த மாதம் பெய்யவுள்ள மழையில், எந்தெந்த கிராமங்கள், ஏரி நீரில் மூழ்குமோ என்ற சந்தேகம் இப்போதே எழ துவங்கியுள்ளது. ஒரு மாதத்திற்குள், இந்த ஏரிகளை சீரமைக்க வேண்டும் என, விவசாயிகள் தரப்பிலும் கோரிக்கை எழுந்துள்ளது.

கண்காணிப்பில் மதுராந்தகம் ஏரி!மதுராந்தகம் தாலுகாவில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில், 165 ஏரிகள் உள்ளன. இதில், பிரதான ஏரி, மதுராந்தகம் ஏரியாகும். கடந்த ஆண்டு பெய்த மழையில், நான்கு ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஏரி நிரம்பியது. ஓரளவு தண்ணீர் இருந்த நிலையில், வட கிழக்கு பருவ மழையால், இந்த ஏரியிலிருந்து வெளியேறும் நீரால் வெள்ளப்பெருக்கு ஏற்படும் நிலை உருவாகலாம்.

அதேசமயம், இந்த ஏரியின் கரைப்பகுதிகளை ஆய்வு செய்து, கரையின் பலத்தை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. தற்போது, ஏரியின் ஷெட்டர் பகுதிகள் எவ்வாறு வேலை செய்கிறது என, ஆய்வு நடத்தப்படுகிறது.

பாதுகாக்கப்படுமாகூடுவாஞ்சேரி ஏரி?கடந்தாண்டு டிசம்பர் மாத மழை வெள்ளத்தில், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, ஆதனுார், காரணைப்புதுச்சேரி போன்ற பல பகுதிகளில், குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்தது. காரணைப்புதுச்சேரியில் உள்ள பெரியார் நகர் ஏரி மற்றும் ராஜிவ் காந்தி நகர் ஏரிகள், ஆதனுார் ஏரி, கூடுவாஞ்சேரி ஏரி, நந்திவரம் ஏரி போன்ற ஏரிகள் நிரம்பியதோடு, வலுவான கரைகள் இல்லாததால் உடைந்தன.

அதே போல், காரணைப்புதுச்சேரியில் உள்ள ராஜிவ் காந்தி நகர் ஏரி, பெரியார் நகர் ஏரிகளின் கரைகள் பலவீனமாக உள்ளன. வட கிழக்கு பருவ மழை துவங்கும் முன், மேற்கண்ட ஏரிகளை பலப்படுத்த வேண்டும். இல்லை யெனில், கடந்த ஆண்டில் பாதிக்கப்பட்டது போன்று, இந்த ஆண்டும் பாதிக்கப்பட வேண்டிய சூழல் ஏற்படும் என பகுதிவாசிகள் தெரிவிக்கின்றனர்.

செங்கல்பட்டுஏரிகளை கவனிங்க!கடந்த ஆண்டு பெய்த மழையில், செங்கல்பட்டு அடுத்த செட்டிபுண்ணியம் ஏரி கலங்கல் உடைப்பு, கால்வாய் கிராம ஏரிக்கரை உடைப்பு,

தேனுார் கிராம ஏரி உடைப்பு, தென்மேல்பாக்கம் கிராம ஏரி உடைப்பு என, செங்கல்பட்டை சுற்றி யுள்ளஏரிகளில் காணப்பட்ட நிலை இன்னமும் சீர்படுத்தப்படவில்லை.

இந்த ஏரிகளில் ஏற்பட்டுள்ள உடைப்புகள் சீரமைக்கப்பட வேண்டும் என, பொதுப்பணித் துறை அதிகாரிகள், அரசுக்கு கருத்துரு அனுப்பி உள்ளனர்.ஆனால், இன்னமும் அது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது. வட கிழக்கு பருவ மழை துவங்கும் முன், ஏரிகளை சீரமைக்க உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

வீட்டு மனைகளாக ஏரி நிலங்கள்!ஸ்ரீபெரும்புதுார் தாலுகாவில், பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில், 133 ஏரிகள் உள்ளன. வெங்காடு ஊராட்சி, இரும்பேடு கிராமத்தில் சித்தேரி, பெரிய ஏரி ஆகிய இரண்டு ஏரிகள் உள்ளன. இந்த இரண்டு ஏரியின் கரைகள் கடந்த டிசம்பர் மாதம் பெய்த பெருமழையில் உடைந்து, தண்ணீர் வெளியேறியது.

இந்நிலையில் இன்று வரை இந்த ஏரிக்கரைகள் சரிசெய்யப்படவில்லை. ஏரி நீர் மழையின் போது சேமிக்க முடியாததால் அப்பகுதியில், 1,000 ஏக்கரில் பயிரிட்டு வந்த விவசாயிகள் பாதிப் படைகின்றனர். இதனால் பலர் தங்கள் நிலத்தை ரியல் எஸ்டேட் நிறுவனங்களிடம் விற்று வருகின்றனர்.

இதே போல், தத்தனுார் ஊராட்சியில் உள்ள கண்ணந்தாங்கல் ஏரி நீரை பயன்படுத்தி, கண்ணந்தாங்கல் கிராமத்தில், 1,000 ஏக்கர் விவசாயம் செய்யப்படுகிறது. கடந்த பெரு மழையின் போது உடைந்த கலங்கல் இன்றும் சரிசெய்யப்படாமல் உள்ளது. இதனால் ஏரியில் நீரை தேக்கி வைக்க முடியாத நிலை உள்ளதால், அப்பகுதியில் விவசாயம் பாதிப்படைந்துள்ளது.

முழுமையாக சீரமைக்க வேண்டும்திருக்கழுக்குன்றம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏரிகள் கடந்த ஆண்டு பெய்த கனமழையால் சாலுார், புலியூர், பெரும்பேடு, பாண்டூர், கோரப் பட்டு உள்ளிட்ட ஏரிகள் சேதமடைந்தன. அதில் சேதமடைந்த ஏரிகளை பொதுப்பணித்துறையினர் தற்காலிகமாக சீரமைத்தனர். இருந்த போதும் முழுமையாக இந்த ஏரிகள் சீரைமைக்க வேண்டியுள்ளது.

மழைக்காலத்திற்குள் ஏரி கரைகள், மதகுகள், கலங்கல், கால்வாய்கள் உள்ளிட்டவற்றை சீரமைத்து பலப்படுத்த வேண்டும் என விவசாயி கள் எதிர்பார்க் கின்றனர். வட கிழக்கு பருவ மழைக்கு இந்த ஏரிக்கரைகள் தாங்குமா எனவும் சந்தேகம் எழுந்துள்ளது.

கைவிடப்பட்டஊத்துக்காடு ஏரி!மாவட்டத்தில் மிகப்பெரிய ஏரிகளில், இரண்டாவது ஏரியாக தென்னேரி ஏரி திகழ்கிறது. இங்கு, மேட்டு மதகு மற்றும் பாசன கால்வாய்கள் ஆங்காங்கே துார்ந்து போயிருப்பதால், மேட்டு பகுதி நிலங்கள் பாசனம் பெறுவது கேள்விக்குறியாக உள்ளது. ஊத்துக்காடு ஏரி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உடைந்தது.

அதை பொதுப்பணி துறை நிர்வாகம் கரை வயல் வரப்பு போல் கட்டி உள்ளது. இந்த கரை போதிய பலமின்றி உள்ளதாக கிராமவாசிகள் புகார் தெரிவிக்கின்றனர். அடுத்த மாதம் துவங்கும் வட கிழக்கு பருவ மழையில் உடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. சின்னிவாக்கம், நாயக்கன்குப்பம், புத்தகரம், நத்தாநல்லுார், பரந்துார், ஏனாத்துார், கரூர் ஆகிய ஏரிகளில் ஏற்பட்ட உடைப்புகளை அதிகாரிகள் தற்காலிகமாக சீரமைத்தனர்.

அந்த தடுப்பு மூட்டைகளை அகற்றி, கரையை நிரந்தரமாக பலப்படுத்தாமல் உள்ளனர். இதே போல், கொட்டவாத்தான் ஏரி மதகு கரை உடைப்பு

Advertisement

ஏற்பட்டு இன்னமும் சீரமைக்கப்படவில்லை.

ஏரிகள் உடைந்ததால் ஓ.எம்.ஆர்., போச்சு!திருப்போரூர் தாலுகாவில், பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில், 63 ஏரிகள் உள்ளன. அவற்றில், கொண்டங்கி, தையூர், சிறுதாவூர், மானாம்பதி ஏரிகள் மிகவும் முக்கிய ஏரிகள்.கடந்த ஆண்டில் பெய்த கன மழையின் போது, இந்த ஏரிகள் முழுவதுமாக நிரம்பி, ஏரிக்கரை உடைந்து, அனைத்து நீரும் வீணாகி வெளியேறியது.

இதனால், பழைய மாமல்லபுரம் சாலை அரிக்கப்பட்டு, முழுவதும் போக்குவரத்து துண்டானது. கிராமங்கள் நீரில் மூழ்கின.ஏரிகளை துார் வாராதது, கரைகளை வலுப்படுத்தாதது, கலங்கல்கள், ஷட்டர்களை சீரமைக்காமல் இருந்ததால், ஏரி நீர் வீணாய் போனது. அப்போது, மானாம்பதி, தையூர், தண்டலம் உள்ளிட்ட ஏரிக்கரைகள் உடைந்து, ஊருக்குள் நீர் புகுந்ததால், கிராம மக்கள் மிகவும் சிரமப்பட்டனர்.

இந்த நிலை மீண்டும் ஏற்படாமல் இருக்க, வட கிழக்கு பருவ மழை துவங்கும் முன், மேற்கண்ட ஏரிகளை சீரமைக்க வேண்டும் என, கிராமவாசிகள் எதிர்பார்த்துள்ளனர்.

தண்ணீர் தேங்க வாய்ப்பில்லைகாஞ்சிபுரம் ஓரிக்கையில் உள்ள ஏரியில், கடந்த ஆண்டு பெய்த மழைக்கு கரை உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் வீணாக ஆற்றில் கலந்தது. அதன் பின் பல மாதம் கழித்து, உடைந்த இடம் சீரமைக்கப்பட்டது. பருவ மழை துவங்கும் முன், ஏரிக்கரை பகுதியின் சிமென்ட் பூச்சு உடைந்துள்ளது.

இதேபோல், ஐயங்கார்குளம் சித்தேரியும் கடந்த மழைக்கு மதகு உடைப்பு ஏற்பட்டு இன்னும் சீரமைக்கப்படவில்லை. வரும் பருவ மழைக்கு அந்த ஏரியில் தண்ணீர் தேங்க வாய்ப்பில்லை என, அப்பகுதி விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

வரும் மழைக்கும் சிக்கல் தான்உத்திரமேரூர் ஒன்றியத்தில், கடந்த ஆண்டு பெய்த பருவ மழையால் மலையாங்குளம், சிறுபினாயூர், சித்தனக்காவூர் ஆகிய பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரிகள் சேதமடைந்து, அவற்றின்கரை பகுதிகள் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறியது.

அச்சமயம், அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு, அப்பகுதி வாசிகள் உதவியோடு உடைப்பு ஏற்பட்ட பகுதிகளில் மணல் மூட்டை களால் கரைகளை பலப்படுத்தினர். அதன் பின், முழு சீரமைப்பு பணியை இதுவரை மேற்கொள் ளாததால் உடைப்பு ஏற்பட்ட ஏரிகள் அதே நிலையில் கிடக்கின்றன.

இதனால், விரைவில் துவங்க இருக்கும்பருவ மழைக்கு இந்த ஏரிகளில் நீர் சேகரமாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் துரித நடவடிக்கை மேற்கொண்டு ஏரிக்கரைகளை சீரமைக்க விவசாயிகள் எதிர்ப்பார்த்துள்ளனர்.

மேலும் விரிசலாகும் மணமை பகுதிமாமல்லபுரம் அடுத்த மணமையில் பெரிய ஏரி மதகு பகுதி, கடந்த ஆண்டு மழையில் உடைந்து, மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டன. ஏரியிலிருந்து முற்றிலும் நீர் வெளியேறிய நிலையில், இதுவரை சீரமைப்பு இல்லை.

கடம்பாடி, மேலகுப்பம் ஏரியின் கலங்கல் பகுதி, பையனுார் ஏரியின் கரைப்பகுதி மற்றும் செம்பூர் பல்லவன்குளம் ஏரியின் கரைப்பகுதி என, மேற்கண்ட மூன்று ஏரிகளின் உடைந்த பகுதிகள் இன்னமும் சீரமைக்கப்படவில்லை. இதனால், வட கிழக்கு பருவ மழையில், மேலும் விரிசல் அதிகமாகும் அபாயம் உருவாகியுள்ளது.
- நமது நிருபர் குழு -

Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kuppuswamykesavan - chennai,இந்தியா
16-செப்-201600:12:37 IST Report Abuse

kuppuswamykesavanஇப்படிப்பட்ட அருமையான மிக அத்தியாவசியமான செய்திய முதல்வர்,மந்திரிகள்,எம் ல் எ - படிக்காமலா இருப்பார்கள்?

Rate this:
v.r.sounder rajan - chennai,இந்தியா
16-செப்-201600:03:55 IST Report Abuse

v.r.sounder rajanஇப்பதான் ரமணன் இல்லையே மழை வரும்னு CONFIRM பண்ணது . காஷ்மீர் பியூடிபியுல் காஷ்மீர் WONDERFUL (இதை தமிழ்னு கேட்டா அசிங்கமா வருது ) நீங்க நல்ல இருக்கோணும் நாடு முன்னேற நாடும் வீடும் உங்களை நம்பி நீங்கள் தானே அண்ணனின் தம்பி பாட்டு பாடி மழையை நிறுத்திடுவோம்

Rate this:
Thiagarajan - Chennai,இந்தியா
15-செப்-201618:50:18 IST Report Abuse

Thiagarajanஎன்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் ஏன் கையை ஏந்த வேணும் வெளி நாட்டில் எனும் பாடலுக்கு ஏற்ப செயல்களை செய்ய வேண்டும். மழை நீர் சேகரிப்பு திட்டம் என்ன ஆனது? தேவையான அளவு மழை பெய்கிறது. முந்தைய காலங்களில் மராமத்து பணிகள் நடைபெற்றன. தற்பொழுது அவ்வாறு நடை பெறுவது இல்லை.

Rate this:
christ - chennai,இந்தியா
15-செப்-201613:46:32 IST Report Abuse

christமுந்தய காலங்களில் அரசர் மாறுவேடம் இட்டு மக்களை நேரில் சென்று பார்த்து அவர்களின் குறைகளை நிவர்த்திசெய்வர் என கேள்விப்பட்டு இருக்கிறோம் .அதுபோல இன்றய முதல்வர் மக்களை நேரில் சந்தித்து அவர்களின் அடிப்படை தேவைகள், அரசுப்பணிகள் சரியானவகையில் நிறைவேற்றுப்படுகிறதா என கண்காணிக்கலாம் . ஏரிகள் ,கால்வாய்கள் ,அணைகள் ,சாலைகள் போன்றவைகளை மாதத்தில் ஒருமுறை நேரில் சென்று ஆய்வு நடத்தலாம் .(இவையெல்லாம் பணிச்சுமை என காரணம் என சொல்லி தட்டிக்கழிக்கமுடியாது தேர்தல் நேரங்களில் மட்டும் வாகனத்தை எடுத்துக்கொண்டு ஊர் ஊராக, தெருத்தெருவாக ஒட்டு கேட்பதற்கு செல்லும் இவர்கள் பதவிக்கு வந்தபின் மக்களை நேரில் சென்று சந்திக்க மறந்து ஏனோ ?)

Rate this:
Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
15-செப்-201606:47:29 IST Report Abuse

Mirthika Sathiamoorthiநாற்பது ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் 39,202 ஏரிகள் இருந்தன என்றும், தற்போது இவற்றில் பல ஆயிரம் ஏரிகள் வீடுகளாக, அரசு அலுவலகங்களாக மாற்றப்பட்டுவிட்டன என்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறுகின்றனர். 39,202 ஏரிகள் மூலம் தமிழ்நாட்டில் 390 டி.எம்.சி. தண்ணீர் தேக்கி வைத்து விவசாயிகள் பயனடைந்தனர். ஆனால் தற்போதுள்ள ஏரி குளங்கள் மூலம் 250 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே சேமிக்க முடிகிறது. அதாவது 140 டி.எம்.சி. தண்ணீரை நாம் ஆக்கிரமிப்பால் இழந்துவிட்டோம். இப்போது காவிரியில் 209 டி.எம்.சி.யும் முழுமையாக கிடைக்கவில்லை என்று போராடிக்கொண்டிருக்கிறோம். ஆனால், முழுமையான தண்ணீர் கர்நாடகத்தால் தரப்படுமானால் அதை சேமித்து வைக்க நம்மால் முடியாது என்பதுதான் உண்மை. தற்போது தமிழக அரசு செய்ய வேண்டியதெல்லாம், நீர்நிலை ஆக்கிரமிப்பில் இருப்பவை அரசு வளாகங்கள் அல்லது மாற்றிடம் பெறக்கூடிய அரசு கட்டடங்கள் என்றால் அவற்றை இடம் மாற்றி, மீண்டும் அதே இடத்தில் அதே பகுதி மக்களைக் கொண்டு ஏரி குளங்களை, மகாத்மா காந்தி வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் உருவாக்குதல் வேண்டும். இயலாவிட்டால் அருகிலேயே அதே கொள்ளளவு உள்ள நீர்நிலைகளை உருவாக்க வேண்டும்...நீர்நிலைப் பகுதிகள் வீட்டுமனைகளாக மாறாதபடி தடுத்தல், நீர்நிலை ஆக்கிரமிப்புகளை மீட்டெடுத்தல், ஏரிகளை பழைய எண்ணிக்கையில் மறுகட்டமைப்பு செய்தல் ஆகியவைதான் தமிழகத்தில் வறட்சியும் குடிநீர் தட்டுப்பாடும் ஏற்படாமல் காக்கும்முன்னேற்பாடுகள். இன்னொரு தகவல்..அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் மனை வணிகம் தற்போது மீண்டும் முழுவீச்சில் நடைபெறத் தொடங்கியிருக்கிறது. உள்ளூர் மற்றும் மாநில அளவில் விளம்பரங்களும், தொலைக்காட்சி பரிந்துரைகளும் பரவலாகி வருகின்றன. யூ-ட்யூப் போன்ற சமூக வலைதளங்களிலும் அதிக காட்சித்தொகுப்புகள் இடம் பெறுகின்றன...இப்பொழுது மனை மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு வாங்கும் எண்ணம் உள்ளவர்கள் மிகவும் கவனத்துடன் இருக்கவேண்டிய கட்டாயம்..ஏனென்றால் மத்திய அரசினால் அண்மையில் கொண்டுவரப்பட்ட மனை வணிக சட்டம் இன்னும் மாநில அளவில் அமலுக்கு வரவில்லை என்பதுதான் மத்திய அரசின் மனை வணிகச் சட்டத்தை அந்தந்த மாநில அரசுகள் ஏற்று வழிமொழிந்து, இந்த சட்டத்தின்படி மாநில அளவிலான வீடு, மனை ஒழுங்காற்று ஆணையம் உருவாக்கப்பட்டு, 500 சதுர அடி அல்லது எட்டு அடுக்குமாடிகளுக்கு அதிகமாக வீடுகட்டும் திட்டங்கள் அனைத்தும் இந்த ஆணையத்தில் பதிவு செய்யப்படும் என்கிற நிலைமை வந்தால், தற்போது சந்தையில் உள்ள பல வீட்டுமனை நிறுவனங்களால் அந்த நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யவே முடியாது...வீடு, மனை வணிக ஒழுங்காற்று ஆணையம் நடைமுறைக்கு வந்தால், அந்த திட்டத்துக்கான வரைபடங்கள், சந்தை மதிப்பு, பெறப்பட்ட டெபாசிட் என பல்வேறு நிபந்தனைகள் நுகர்வோருக்கு சாதகமாக இருக்கிறது என்பதோடு, நிலத்தின் உண்மையான சொந்தக்காரர் யார் என்பதைத் தெளிவாக காட்ட வேண்டிய கட்டாயம் ஏற்படும். இந்த சிக்கல் ஏற்படும் முன்பாக அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி அவற்றை விற்று விடுவதில் தீவிரம் காட்டப்படுகிறது. தமிழ்நாட்டில் வீடு, மனை வணிக ஒழுங்காற்று ஆணையம் அமையும் முன்பாகவே, குறிப்பாக உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாக, அனைத்து மனைகளையும் விற்றுவிட வேண்டும் என்பதிலும், பெருவாரியான பணத்தை திரட்டி எடுத்துவிட வேண்டும் என்பதிலும் மிகப்பெரிய வருவாய் ஈட்டிவிட வேண்டும் என்பதிலும் நிறுவனங்கள் முனைப்பு காட்டுகின்றன. வீடு, மனை வணிகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் மிகப்பெரிய அளவில் மோசடிகள் நடக்கின்றன. அரசாணையை மீறி, நீர்நிலைகள் பலவும் வீட்டுமனைகளாக மாற்றப்பட்டுள்ளன. உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, வேறு பெயரில் பதிவு செய்யப்படுகின்றன. உரிமையாளர்களை மாற்றி மாற்றி, அரசை ஏமாற்றும் நடவடிக்கைகள் நடைபெறுகின்றன. அதனால் கவனத்துடன் செயல்பட்டு தகுந்த கட்டுமான நிறுவங்களை பார்த்து விட்டு மனை மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு வாங்குங்கள்.

Rate this:
Sundaresan Ramanathan - Bangalore,சிங்கப்பூர்
15-செப்-201615:33:05 IST Report Abuse

Sundaresan Ramanathanகவலையே படாதிங்க. மீண்டும் ஒரு முறை மனித நேயத்தை பற்றி பேசுவோம் வரும் டிசம்பர் 1 அன்று, சென்னை முழுகிய பின்னர். பின்னர் அவரவர் வேலைய பாக்க போயிடுவோம். போன டிசம்பர் 1 - இன்னைக்கு வரைக்கும், தமிழ்நாடு அரசு என்ன செய்தது இந்த பிரச்னைக்கு. அவ்வப்போது செய்திகளில் படிக்கச் முடிந்தது இதுதான் - காஞ்சிபுரம் கலெக்டரின் அதிரடி, கடலூர் கலெக்டரின் துணிச்சலான செயல், .... கடைசியில நடந்தது என்ன?...

Rate this:
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
15-செப்-201604:44:53 IST Report Abuse

Kasimani Baskaranஎல்நினோ கோட்பாட்டின் படி மழை அதிகம் பெய்தால் இவர்களால் ஒன்றும் செய்யமுடியாது... அதிலும் ஆக்கிரமிப்புகளை ஒன்றும் செய்யாமல் விட்டால் என்னவாகும்?

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement