அங்கீகாரமற்ற மனை விற்பனை பதிவு : உயர் நீதிமன்ற தடையை மீறி தாராளம் Dinamalar

எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
தாராளம்!
அங்கீகாரமற்ற மனை விற்பனை பதிவு
உயர் நீதிமன்ற தடையை மீறி தாராளம்

உயர் நீதிமன்ற தடையை மீறி, அங்கீகாரம் இல்லாத மனை விற்பனை பத்திரங்கள் பதிவு செய்யப்படும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அங்கீகாரமற்ற மனை விற்பனை பதிவு : உயர் நீதிமன்ற தடையை மீறி தாராளம்

விவசாய நிலங்களை, வீட்டு மனைகளாக விற்பதை தடுக்க கோரிய வழக்கை, சென்னை உயர் நீதிமன்றம் விசாரித்தது; அந்த வழக்கில், அங்கீகாரம் இல்லாத மனை விற்பனை பத்திரங்களை, பதிவு செய்ய தடை விதித்தது; இதை அமல்படுத்த, அனைத்து சார் பதிவாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பவும், பதிவுத் துறை தலைவருக்கு உத்தரவிட்டது.

குழப்பம் :இதன்படி, சுற்றறிக்கை தயாரிக்க, பதிவுத்துறை முன்வந்தது. இதுதொடர்பாக நடந்த கூட்டத்தில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக, கிடப்பில்

போடப்பட்டது; இதனால், உயர் நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்துவது தொடர்பாக, சார் பதிவாளர் களுக்கு, இதுவரை எந்த உத்தரவும் அனுப்பப் படவில்லை.

இதை பயன்படுத்தி, சார் பதிவாளர் அலுவலகங் களில், அங்கீகாரம்இல்லாத மனை விற்பனை பத்திரங்கள் பதிவு, தடையின்றி நடந்து வருகிறது. உயர் நீதிமன்ற உத்தரவு அமலுக்கு வருவதற்குள், அங்கீகாரமற்ற மனைகளை பதிவு செய்து விடும் நடவடிக்கைகள், மிக தீவிரமாக நடப்பதாக கூறப்படுகிறது.

குறிப்பாக, கும்பகோணம், முதலாவது இணை பதிவாளர் அலுவலகம்; தஞ்சை மாவட்டம், அய்யம்பேட்டை; பட்டுக்கோட்டை பதிவு மாவட்டம், அதிராம்பட்டினம்; தென் சென்னை பதிவு மாவட்டம், நீலாங்கரை, தாம்பரம் ஆகிய சார் பதிவாளர் அலுவலகங்களில், நுாற்றுக்கணக்கில் இத்தகைய பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக,தகவல்கள் வந்துள்ளன.

கட்டுப்பாடில்லை :இதுகுறித்து, சார் பதிவாளர் ஒருவர் கூறியதாவது: உயர் நீதிமன்ற உத்தரவை, நேரடியாக பின்பற்ற வேண்டும் என்ற கட்டுப்பாடு, சார்

Advertisement

பதிவாளர் களுக்கு இல்லை. இந்த வழக்கில், உயர் நீதிமன்றம் கூறியபடி, பதிவுத்துறை தலைவர் சுற்றறிக்கை பிறப்பித்தால் தான், இது நடைமுறைக்குவரும்.பதிவுத்துறை தலைவர், எந்த உத்தரவையும் பிறப்பிக்காத நிலையில், அங்கீகாரமற்ற மனை விற்பனை பத்திரங்களை பதிவு செய்ய, எங்களுக்கு எந்த தடையும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

உயர் நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தும் விஷயத்தில், பதிவுத் துறைக்கு, அரசிடம் இருந்து முறையான, 'சிக்னல்' வராததே, இந்த குழப்பத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
- நமது நிருபர் -

Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
JUNAITH HUSSAIN - Nagercoil,இந்தியா
27-செப்-201600:04:34 IST Report Abuse

JUNAITH HUSSAINஅன்றாட உழைப்பில் சிருக சிருக சேமித்து கையிலிருக்கும் காசை,நகைகளை ஈடு வைத்து, இல்லை விற்று வரும் பணத்தை வைத்து கூழோ கஞ்சியோ குடித்தோமோ குடிக்கவில்லையோ தனக்கென தன் குடும்பத்திற்கென எத்தனை பேர் அடைந்து கிடக்க ஒரு வீட்டிற்கு ஏங்குகிறார்கள். எத்தனை பேருடய கனவு நனவாகிறது தனது சக்திக்கு தக்க அன்றாட வாழ்க்கைக்கு தக்க இடம் பார்த்து, இடத்தை வாங்கி, பண வசதி உள்ளவர்கள்,பேங்கில் லோன் வாங்கி கட்ட வசதி உள்ளவர்கள் வீட்டை கட்டுகிறார்கள். இடத்தை வாங்கிய பின் குழந்தைகளின் படிப்பு செலவுக்காக,திருமண செலவுக்காக விற்கிறார்கள்.யாரையும் ஏமாற்றவில்லை களவு செய்யவில்லை தனது உழைப்பின் வியர்வையை முதலாக்குகிறார்கள் மூலதனமாக்குகிறார்கள். அங்கீகாரமற்ற நிலம் என எப்படி கூற முடியும் நகராட்சி,பஞ்சாயத்து,சார்பதிவாளர் உரிம சான்றிதழுடன் தானே விற்றார்கள்,வாங்கினார்கள். நிலத்தை விற்றவனும் பருவ மழையின்றி, நிலம் காடாகி விவசாயத்தில் பலனில்லை லாபமில்லை என்று தானே விற்றான். விற்பவர்களிடம் தானே வாங்கினார்கள் அதுவும் நகராட்சி,பஞ்சாயத்து உரிமம் வழங்கிய பின். 100 வீடுகள் கட்டி குடியிருக்கும் இடத்தில் எஞ்சி உள்ள 5இடத்தை விற்க வாங்க தடை. வீடு கட்ட நகராட்சி அனுமதி வழங்க தடை என்றால் இது பொதுமக்களுக்கு எந்த வகையில் நியாயம்.விரலில் புண் வந்தால் எப்படி, எப்போது, என்ன மருந்து போட்டு குணமாக்க வேண்டுமோ அதை செய்வதை விட்டு விட்டு விரலை வெட்டு என்பது எந்த விதத்தில் நியாயம். ஏழைகளின் தற்போதய அவல நிலைக்கு ஒரு உதாரணம் உங்கள் முன் வைக்கிறேன். இது போல் நமக்கு தெரியாத எத்தனை குடும்பங்கள் இருக்கும். எந்த சட்டமும் வசதி படைத்தவர்களை பாதிக்காது, ஏழைகளை வாழவிட வேண்டுமல்லவா. மனிதாபிமானம் உள்ளவர்களே பாதிக்க படும் ஆயிரமாயிரம் குடும்பங்களை இந்த சட்டத்திலிருந்து பாதுகாக்க உங்களால் முடிந்த பயனளிப்பை உங்கள் உறவாக எண்ணி உதவுங்கள் ://keelakaraitimes.com/klk-real-estate/ ஹமீதாபானு என்பவர் கூறுகையில்…. நான் இரண்டு வருடங்களுக்கு முன் பத்திரபதிவு அலுவலகத்தில் வில்லங்க சான்று பெற்று வாங்கிய இரண்டு இடத்தில் தற்போது எனது மகள் திருமணத்திற்காக ஒரு இடத்தை விற்பனை செய்து பணம் பெற்றுக் கொண்டு பதிவு செய்வதற்காக வந்தேன் பதிய முடியாது என்று சொல்வதால் எனது மகள் கல்யாணத்தை எப்படி செய்வதென்று அறியாது இருக்கின்றேன். ஆகவே தமிழக முதல்வர் அம்மா அவர்கள் இதில் தலையிட்டு ஏழைமக்களாக உள்ள எங்களுக்கு வழியை காட்ட வேண்டும் என்றார்.

Rate this:
ramasamy naicken - Hamilton,பெர்முடா
23-செப்-201602:06:34 IST Report Abuse

ramasamy naickenஎது முக்கியம் இவனுகளுக்கு? பதிவுதான் மூலம் வரும் லஞ்சமா? இல்லை சல்லிக்காசுக்கு உதவாத நீதிமன்ற உத்தரவா?

Rate this:
Sathiamoorthy.V - Kalpakkam,இந்தியா
17-செப்-201613:04:24 IST Report Abuse

Sathiamoorthy.Vஅங்கீகரிப்படாத வீட்டு மனை பிரிவுகளை அரசாங்கமே தத்து எடுத்து சாலைகளை அபிவிருத்தி ஆக்கி மக்களிடம் அதற்கும் சேர்த்து கப்பம் வாங்கி பணம் சம்பாதித்தால் தமிழ் நாட்டின் மீது இருக்கும் கடனை அடைக்கலாம். ஆனால் அதிகாரிகள் செய்ய மாட்டார்கள். விளைநிலங்களுக்கு தண்ணீர் மற்றும் வேலை ஆட்கள் இல்லாததாலும் மற்ற துறையில் அதை விட லாபம் உள்ளதாலும் மனைப்பிரிவுகள் அதிகமாக உள்ளன. இதில் உண்மையான பொது மக்கள் தான் பயன் பெற வேண்டும். பில்டர்களை நுழைய விடக்கூடாது. ஆனால் அரசாங்கம் அவர்கள் கையில்.

Rate this:
S.M. SUNDARAM - CHENNAI,இந்தியா
17-செப்-201611:57:08 IST Report Abuse

S.M. SUNDARAMசும்மா பொத்தாம் பொதுவாக செய்தி போடக்கூடாது. அப்படி பதிவு செய்யப்பட்டிருந்தால் அதன் Document Numberஐ தினமலர் வெளியிட வேண்டும்.

Rate this:
நக்கீரன் - திருநெல்வேலி சீமை,இந்தியா
17-செப்-201610:47:40 IST Report Abuse

நக்கீரன்வெளிப்படையாகவே கொள்ளை அடிக்கும் அளவுக்கு வளர்ந்து விட்டனர் இந்த கொள்ளையர்கள். அரசு மக்களின் நலனை காப்பதற்கு பதில், கொள்ளையில் பங்கு கொள்கிறது. அதனால்தான் வெளிப்படையாக எந்த உத்தரவுகளையும் உடனடியாக பிறப்பிப்பதில்லை. இந்த தமிழ்நாட்டு மடப்பய மக்களும் இன்னும் விழித்துக்கொள்ளவில்லை. அல்லது அவர்களும் ஊழலுக்கு துணை போகிறார்கள். நல்லவனாகவும் நேர்மையாகவும் வாழ நினைத்தால் கஷ்டம்தான்.

Rate this:
Ramesh Sundram - Muscat,ஓமன்
17-செப்-201607:55:49 IST Report Abuse

Ramesh Sundramஎன்றைக்கு தமிழ்நாடு அரசு கோர்ட் உத்தரவை பின் பற்றி இருக்கிறது. எத்தனை முறை குட்டு வாங்கினாலும் அறிவு இருப்பதில்லை இந்த சார் பதிவாளர்களுக்கு லஞ்சம் மட்டுமே பிரதானம். நாளைக்கு இந்த பத்திர பதிவுகள் செல்லாது என்று அறிவித்து விட்டால் ஏமாற போவது அப்பாவி மக்களே தவிர நீங்கள் இல்லை அல்லது வாங்கிய லஞ்சத்தை திருப்பி கொடுக்க போவதில்லை .சென்னைக்கு அருகே தாளம்பூர் பகுதியில் உள்ள அங்கீகாரமற்ற மனைகளை ரியல் எஸ்டேட் அதிபர்கள் அக்டோபர் 21 வரும் தீர்ப்பிற்கு தடை உத்தரவு வாங்கி விடுவோம் என்று அப்பாவி மக்களை ஏமாற்றி லஞ்சத்தில் ஊறிய சார் பதிவாளர்களை வைத்து கொண்டு பத்திர பதிவு செய்கின்றனர். அப்பாவி மக்களே ஏமாறாதீர்கள் என்று எந்த அரசியல் கட்சியும் சொல்ல மாட்டார்கள் என் என்றால் இந்த மோசடியை நடத்துவதே இவர்கள் தான் கட்சி பேதம் இன்றி

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement