தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பை நிறுத்தியது கர்நாடகா| Dinamalar

பொது செய்தி

இந்தியா

தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பை நிறுத்தியது கர்நாடகா

Updated : செப் 18, 2016 | Added : செப் 18, 2016
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பை நிறுத்தியது கர்நாடகா

பெங்களூரு: சம்பா சாகுபடிக்காக காவிரியில் வரும் 20ம் தேதி வரை 12 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்க வேண்டும் என கர்நாடகாவுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து கர்நாடகாவில் கலவரம் வெடித்தது. தமிழக பதிவெண் கொண்ட வாகனங்கள் தாக்கப்பட்டன. தமிழர்கள் தாக்கப்பட்டனர். இதனால் பல தமிழர்கள் கர்நாடகவிலிருந்து வெளியேறினர். பெங்களூருவில் 144 தடை உத்தரவும், ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. அமைதி திரும்பியதை தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டது. 144 தடை உத்தரவு தொடர்ந்து அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்திலும், கர்நாடகாவுக்கு எதிரான முழு அடைப்பு போராட்டம் அமைதியாக நடந்தது. சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி காவிரி கண்காணிப்பு குழுவிலும் தமிழக அரசு முறையீடு செய்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் காவிரி கண்காணிப்பு குழு கூடி ஆலோசனை நடத்தியது. இந்நிலையில், தமிழகத்துக்கு திறக்கப்படும் தண்ணீர் இரண்டு நாட்களுக்கு முன்பாகவே நிறுத்தப்பட்டு விட்டது. பெங்களூரு குடிநீருக்கும் அம்மாநில விவசாயத்திற்கும் திறக்கப்பட்ட தண்ணீரும் நிறுத்தப்பட்டுள்ளதாக அம்மாநில செய்திகள் தெரிவிக்கின்றன. கே.ஆர்.எஸ்., அணையின் மொத்த கொள்ளளவு 124.80 கன அடி. அணையின் தற்போதைய நீர்மட்டம் 84.94 கன அடி. அணைக்கு நீர் வரத்து 9,540 கன அடி ஆகும். பாசனத்திற்கு தண்ணீர் நிறுத்தியதை கண்டித்து போராட்டம் நடத்த மாண்டியாவில் விவசாய அமைப்புகள் முடிவு செய்துள்ளது.

இதனிடையே, காவிரி நீர் விவகாரத்தில், காவிரி கண்காணிப்பு குழு மீண்டும் கூட உள்ளதாலும், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு விசாரணை நடைபெற உள்ளதாலும், மாண்டியா மாவட்டத்தில் 7 தாலுகாவில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X