'ஒலிம்பிக், பாரா ஒலிம்பிக் வீரர்களிடையே பாகுபாடா?'| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'ஒலிம்பிக், பாரா ஒலிம்பிக் வீரர்களிடையே பாகுபாடா?'

Added : செப் 18, 2016 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 'ஒலிம்பிக், பாரா ஒலிம்பிக்  வீரர்களிடையே பாகுபாடா?'

சென்னை:''ஒலிம்பிக், பாரா ஒலிம்பிக் வீரர்களிடையே எந்த பாகுபாடும் பார்க்கப்படவில்லை,'' என, மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் விஜய்கோயல் கூறினார்
சென்னை விமான நிலையத்தில், அவர் அளித்த பேட்டி:
பாரா ஒலிம்பிக் வீரர்கள் சிறப்பாக விளையாடியதால், இந்தியாவிற்கு நான்கு பதக்கங்கள் கிடைத்துள்ளன. ஒலிம்பிக், பாரா ஒலிம்பிக் வீரர்களிடையே எந்த பாகுபாடும் பார்க்கப்படவில்லை; அவர்களுக்கு சரிசமமான கவுரவமும், மரியாதையும் தரப்பட்டுள்ளது.
'ஒலிம்பிக் போட்டியில், குடிக்க தண்ணீர் தரவில்லை' என்ற, தடகள வீராங்கனையின் புகார் குறித்து விசாரித்து வரும், மத்திய அரசு குழு, ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்யும்; அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
விளையாட்டுத் துறை சார்பாக, ஒரு தனி இணையதளம், நான்கு வாரத்தில் துவங்கப்பட இருக்கிறது. இதில், நாடு முழுவதும் உள்ள விளையாட்டு வீரர்கள், எட்டு வயது முதலே, தங்களது விளையாட்டின் சாதனைகளை பதிவு செய்து கொள்ளலாம். இதன்மூலம் சிறந்த விளையாட்டு வீரர்கள் அடையாளம் காணப்படுவர். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
19-செப்-201604:12:10 IST Report Abuse
Kasimani Baskaran வெறுமனே பதிவு செய்து என்ன செய்வது... போதுமான அடிப்படை வசதிகளை பள்ளியில் இருந்து ஆரம்பிக்க வேண்டும்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X