கோவில் பணியாளர் ஓய்வூதியம் உயர்வு : முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

கோவில் பணியாளர் ஓய்வூதியம் உயர்வு : முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

Added : செப் 19, 2016 | கருத்துகள் (4)
Advertisement
கோவில் பணியாளர் ஓய்வூதியம் உயர்வு : முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

சென்னை: 'ஓய்வு பெற்ற, கோவில் பணியாளர்களுக்கு வழங்கப்படும் மாத ஓய்வூதியம், 1,000 ரூபாயில் இருந்து, 2,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்' என, முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
கோவில்களை சார்ந்து செயல்பட்டு வந்த சிற்பிகள் முதல் பூமாலை கட்டி விற்போர் வரை, காலப்போக்கில் போதிய ஆதரவு இன்றி நலிவடைந்து உள்ளனர்; அவர்களிடம் இருந்த திறன், மறைந்து போகும் நிலை உள்ளது. அவர்களின் வாழ்வாதார வாய்ப்புகளை விரிவுபடுத்தி, திறன்களை மேம்படுத்தும் திட்டம், ஐந்து கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும்● கோவில்களில் உள்ள விக்கிரகங்கள், சிலைகள், நிலம் உள்ளிட்டவற்றின் தகவல் தொகுப்பு உருவாக்கப்பட்டு, கம்ப்யூட்டர் மயமாக்கப்படும். கோவில் சொத்துக்கள் அமைந்துள்ள இடங்கள், புவியியல் தகவல் முறையான, ஜி.பி.எஸ்., மூலம் முறையாக அளவை செய்து ஆவணப்படுத்தப்படும்● கோவில் குறித்த முழுமையான தகவல்களைப் பெற, இணையதளங்கள் உருவாக்கப்படும். கோவில்களின் நிர்வாகத்தை மேம்படுத்த, ஒரு கோடி ரூபாய் மதிப்பில், தனி மென்பொருள் தயாரிக்கப்படும்● 'ஒரு கால பூஜை வைப்பு நிதி திட்டம்' இந்த ஆண்டு, 241 கோவில்களுக்கு விரிவுப்படுத்தப்படும்; 10 ஆயிரம் சிறு கோவில்களில் முறையாக பூஜை செய்ய ஏதுவாக, இரண்டரை கோடி ரூபாயில் உபகரணங்கள் வழங்கப்படும்● சேலம், கோட்டை அழகிரிநாத சுவாமி கோவில்; நாகப்பட்டினம், சிக்கல் நவநீதேஸ்வர சுவாமி கோவில்; ஆரணி கைலாசநாதர் கோவில்; சத்திய விஜயநகர் முத்துமாரியம்மன் கோவில்களுக்கு, 80 லட்சம் ரூபாயில், புதிய மரத்தேர் உருவாக்கப்படும்● கடலுார் மாவட்டம், பென்னாடம் பிரளயகாலேஸ்வரர் கோவில்; மதுரை மாவட்டம், தல்லாகுளம் அய்யப்பன் கோவில்; கோவை மாவட்டம், உக்கடம் லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் மற்றும் கடலுார் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமி கோவில்களில், இரண்டு கோடி ரூபாய் மதிப்பில் அன்னதானக் கூடம் கட்டப்படும்● திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை மேட்டுத்திடல் சுவாமி நெல்லையப்பர் அன்பு ஆசிரம பள்ளி மற்றும் திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பெரியநாயகியம்மன் மகளிர் மேல்நிலைப் பள்ளியில், 1.5 கோடி ரூபாயில், கூடுதல் வகுப்பறைகள், அறிவியல் ஆய்வகமும் கட்டப்படும்● குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லுாரியில், 45 லட்சம் ரூபாயில் மேம்பாட்டு பணிகளும், தேனி மாவட்டம், குச்சனுார் சுயம்பு சனீஸ்வரபகவான் கோவிலில், 69 லட்சம் ரூபாய் செலவில், மகா மண்டபமும் கட்டப்படும்● நாகப்பட்டினம் மாவட்டம், எட்டுக்குடி சுப்பிரமணிய சுவாமி கோவிலில், 95 லட்சம் ரூபாய் செலவில், திருமண மண்டபம்; திருநெல்வேலி மாவட்டம், பண்பொழி திருமலைக்குமார சுவாமி கோவிலில், 60 லட்சம் ரூபாய் செலவில், பக்தர்கள் ஓய்வுக்கூடம் கட்டப்படும்● இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில், பணியாற்றி ஓய்வு பெற்றோருக்கான மாதந்திர ஓய்வூதியம், 1,000 ரூபாயில் இருந்து, 2,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
20-செப்-201617:37:37 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் சில கோவில்களில் வருமானம் இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள் என்பது உண்மை தான். ஆனால் பல பெரிய கோவில்களில் மாதம் லட்ச ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கிறார்கள், அதற்கு வருமான வரி கட்டுவது இல்லை. அனைத்தும் கருப்பு பணமாக போகிறது. தக்ஷிணை போடுவதை தடை செய்து விட்டு. உண்டியல் மூலம் பணம் பெற்று சம்பளத்தை உயர்த்தினால் தான் அனைவருக்கும் சரிசமமாக கிடைக்கும்.
Rate this:
Share this comment
Cancel
Raj - bangalore,இந்தியா
20-செப்-201613:25:36 IST Report Abuse
Raj 42 சிங்கப்பூர் டாலர்
Rate this:
Share this comment
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
20-செப்-201612:40:35 IST Report Abuse
Pasupathi Subbian அநேக கோவில்களில் அர்ச்சகர்கள், ஸ்தானிகர், பட்டர்கள் இவர்களுக்கு சம்பளம் இல்லை. இவர்களின் வருமானமே தட்டில் போடப்படும் தட்சிணை மட்டுமே. அவர்களுக்கு வருமானம் போதாமல் சிரமப்படும் நேரத்தில், கோவிலில் வரும் வருமானத்தை அரசாங்க ஊழியர்களுக்கு, சம்பளம், செலவு, மற்றும் ஓய்வூதியம் இவற்றை கொடுத்தல் அனாவசியம்.
Rate this:
Share this comment
Cancel
Krishna Sreenivasan - singapore,சிங்கப்பூர்
20-செப்-201605:57:10 IST Report Abuse
Krishna Sreenivasan வெறும் 2000/- ரூபாயிலே என்ன கிடைக்கும் ,
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை