F-16 fighter jets seen flying over Islamabad | வான் தாக்குதலுக்கு தயாராகிறதா பாக்.,: டுவிட்டரில் மூத்த பத்திரிகையாளர் வெளியிட்ட பரபரப்பு தகவல்| Dinamalar

வான் தாக்குதலுக்கு தயாராகிறதா பாக்.,: டுவிட்டரில் மூத்த பத்திரிகையாளர் வெளியிட்ட பரபரப்பு தகவல்

Added : செப் 23, 2016 | கருத்துகள் (23)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
வான் தாக்குதலுக்கு தயாராகிறதா பாக்.,:  டுவிட்டரில் மூத்த பத்திரிகையாளர்  வெளியிட்ட பரபரப்பு தகவல்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் இஸ்லாமாபாத் நகர் மீது அந்நாட்டு போர் விமானங்கள் பறந்ததாகவும் இதனால் பீதியில் மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறியதாகவும் பாக்., மூத்த பத்திரிகையாளர் ஒருவர் டுவிட்டரில் செய்தியை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

ஐ.நா.,சபை பொதுக்கூட்டத்தில் பங்கேற்க நியூயார்க் சென்றிருந்த பாக்.பிரதமர் நவாஸ் ஷெரீப், காஷ்மீர் விவகாரத்தில் ஐ.நா., தலையிட வேண்டும் என, ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கீ மூனிடம் வலியுறுத்தினார். இதனை ஏற்காத பான் கீ மூன் இந்த விவகாரத்தில் நாங்கள் தலையிட முடியாது. உங்கள் பிரச்னையை இந்தியாவிடமே பேசி தீர்த்துக்கொள்ளுங்கள் என திட்டவட்டமாக தெரிவித்தார்.
இதற்கிடையே காஷ்மீரின் யூரி ராணுவ முகாம் மீது நடந்த தாக்குதலால் கடுங்கோபம் அடைந்துள்ள இந்தியா, பாக்., மீது எந்நேரமும் வான் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சம் பாகிஸ்தானுக்கு ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சூழ்நிலையில் பாக். மூத்த பத்தரிகையாளர் ஹமீத் மிர், சமூக வலைதளமான டுவிட்டரில் பரபரப்பு செய்தியை வெளியிட்டார்.
அதில், பாகிஸ்தானின் விமானப்படைக்கு சொந்தமான எப்.16 ரக ஜெட் போர் விமானங்கள் , இஸ்லாமாபாத் நகரில் வானில் வட்டமிட்டு பறந்து தயார் நிலையில் உள்ளன. இதனால் இஸ்லாமாபாத் நகரில் உள்ள பொதுமக்கள் பீதியில் வீட்டை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு சென்றனர். போர்விமானங்கள் தயார்நிலையில் உள்ளதையடுத்து இஸ்லாமாபாத், பெஷாவர் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டது. வடக்கு மாகாணங்களிலும் விமானபடை தளங்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு டுவிட்டரில் ஹமித் மிர் செய்தி வெளியிட்டு பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Durai Ramamurthy - Virudhachalam,இந்தியா
23-செப்-201618:21:07 IST Report Abuse
Durai Ramamurthy இவ்ளோ பயம் உள்ளவன் எதற்கு இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட வேண்டும். ஐ .நா சபை தான் மூஞ்சியில் கரியப்பூசி அனுப்பிவிட்டது. இதன் பிறகாவது காஷ்மீர் விவாகரத்தில் மூக்கை நுழைக்காமல் இருங்கள். அது தான் உங்களுக்கும் உங்கள் மக்களுக்கும் பாதுகாப்பு.
Rate this:
Share this comment
Cancel
Lakshmanan Iyengar - MADURAI,இந்தியா
23-செப்-201614:36:55 IST Report Abuse
Lakshmanan Iyengar இந்தியர்கள் இந்தியாவில் தயாராகும் செல்போன் லேப்டாப் வாங்கினால் சீனா காலி. பாக் பின்னே சீனா.நவாஸ் காலில் குழி பறிக்கும் பாக் ராணுவம்
Rate this:
Share this comment
Cancel
ravi - chennai,இந்தியா
23-செப்-201612:55:40 IST Report Abuse
ravi நாட்டை இவ்வளவு காலம் அழித்துக்கொண்டிருந்த காங்கிரஸ் காரர்களை எல்லையில் நிற்கவையுங்கள் - அவர்களை முடிந்தால் பாகிஸ்தானுக்கு அனுப்புங்கள் - தமிழகத்தில் ஒருவர் அவர்களுக்கு துணையாக தூதராக அனுப்பலாம் - வாயாலேயே வடை சுட்டு விடுவார்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X