கறுப்பினத்தவர் கொலை; அமெரிக்காவில் பதற்றம்| Dinamalar

கறுப்பினத்தவர் கொலை; அமெரிக்காவில் பதற்றம்

Added : செப் 23, 2016
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
கறுப்பினத்தவர் கொலை; அமெரிக்காவில் பதற்றம்

சார்லோட்: அமெரிக்காவில் கறுப்பினத்தவரை போலீசார் சுட்டுக் கொன்றதால் பல இடங்களில் வன்முறை வெடித்தது. இதனால் அமெரிக்காவில் பதற்றம் நிலவி வருகிறது.

அமெரிக்காவின் சார்லோட் நகரில், குற்றவாளி ஒருவனை கைது செய்வதற்காக குடியிருப்பு பகுதிக்கு போலீசார் சென்றனர். அப்போது, ஆப்ரிக்க வம்சாவளியைச் சேர்ந்தவரும், அமெரிக்க குடியுரிமை பெற்று கறுப்பினத்தவராருமான ஸ்காட், 43, என்பவர் கையில் துப்பாக்கியுடன் நின்றதாகக் கூறப்படுகிறது. துப்பாக்கியை கீழே போடும்படி போலீசார் கூறினர்; துப்பாக்கியை கீழே போடாததால், போலீசார், ஸ்காட்டை சுட்டுக் கொன்றனர்.
இதை கண்டித்து, அங்கு வசிக்கும் கறுப்பினத்தவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பல இடங்களில் வன்முறை வெடித்தது. வாகனங்களை அடித்து நொறுக்கிய கலவர கும்பல், சாலை மறியலிலும் ஈடுபட்டது. வன்முறையை கட்டுப்படுத்த, சார்லோட் நகரில் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது; போராட்டம் நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X