கோவை இந்து முன்னணி பிரமுகர் படுகொலை; பதற்றம், போலீஸ் குவிப்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கோவை இந்து முன்னணி பிரமுகர் படுகொலை; பதற்றம், போலீஸ் குவிப்பு

Updated : செப் 23, 2016 | Added : செப் 23, 2016 | கருத்துகள் (138)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

கோவை: கோவையில் இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் நள்ளிரவில் படுகொலை செய்யப்பட்டார். இதனால் பதற்றம் ஏற்பட்டதையடுத்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அவரது இறுதி ஊர்வலத்தில் போலீஸ் ஜீப்புக்கு தீ வைக்கப்பட்டது. தொடர்ந்து பல இடங்களில் பதட்டம் நிலவுகிறது. கோவை இந்து முன்னணியின் செய்தி தொடர்பாளர் சசிகுமார், தனது பணிகளை முடிந்து நள்ளிரவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். கோவை சுப்பிரமணியம்பாளையம், சர்க்கரை விநாயகர் கோயில் அருகே அவர் வந்தபோது, அப்பகுதியில் பதுங்கியிருந்த மர்ம நபர்கள் சிலர் அவரை வழிமறித்து ஆயுதங்களால் தாக்கியதாக கூறப்படுகிறது. பலத்த காயமடைந்து உயிருக்கு பேராடிய சசிகுமாரை மீட்ட அப்பகுதியினர், அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சசிகுமார் பலியானார். இச்சம்பவத்தையடுத்து அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. பதற்றத்தை தணிக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.பஸ்கள் இயக்கப்படவில்லை:கோவை - மேட்டுப்பாளையம் புறநகர் மற்றும் நகரப் பேருந்துகள் இயக்கப்படவில்லை. கவுண்டம்பாளையம், சுப்ரமணியம்பாளையம், துடியலூர் உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டன. கோவை - மேட்டுப்பளையம் சென்ற தனியார் பஸ் கண்ணாடி உடைக்கப்பட்டது.திருப்பூரில் பஸ் கண்ணாடி உடைப்பு:திருப்பூரிலும் கல்வீசி பஸ் கண்ணாடி உடைக்கப்பட்டது. பெரும்பாலான பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. பல்லடம் ரோடு, ஊத்துக்குளி ரோடு, கொங்கு மெயின்ரோடு, அவினாசி ரோடுகளில் தனியார் பஸ்கள் எதுவும் இயக்கப்படவில்லை.

கோவையில் இந்து முன்னணி நிர்வாகி மர்ம நபர்களால் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தால் பதற்றம் ஏற்பட்டுள்ளதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (138)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Arasu - Madurai,இந்தியா
24-செப்-201600:21:53 IST Report Abuse
Arasu அக்னி சிவா குஜராத் மாடலை எடுத்து பார்
Rate this:
Share this comment
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
23-செப்-201623:04:08 IST Report Abuse
மலரின் மகள் மதியத்திற்கு பிறகு கோவையில் பள்ளிகள் இயங்க வில்லையாம். சட்டம் ஒழுங்கு பாழ்பட்டு இருக்கிறது. காவல்துறை அமைச்சர் திறனற்றவராக தெரிகிறார். அவர் உடனடியாக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து திறமையானவர்களை வழி விட வேண்டும். அவர் விலகவில்லை என்றால் முதலமைச்சர் அவரை பதவியிலிருந்து தூக்கிக் கடாச வேண்டும் அவர் அம்மாவாகவே இருந்தாலும் சரி, அப்போலோவில் இருந்தாலும் சரி. திறனற்றவர் விலகுவது தான் சரி. கொள்ளை சம்பவம் சாதாரணமாக இருந்த தமிழ் நாட்டில் கொலைக்கு குற்றங்கள் நித்த நிகழ்வுகளாகின்றன. அதுவும் நாடு ரோட்டில் மக்கள் பார்க்கும் வண்ணமே நடை பெறுகின்றன. கயவர்களுக்கு அச்சம் விட்டு போனதற்கு யார் காரணம். வெளியே போகட்டும் காவல்துறை திறனற்ற அதிகாரிகளும் அமைச்சரும்.
Rate this:
Share this comment
Cancel
ravi - chennai,இந்தியா
23-செப்-201622:44:21 IST Report Abuse
ravi இது போன்று ஏதாவது செய்து தமிழகத்தில் இருக்கும் அமைதியை கெடுக்க பார்க்கிறார்கள் சமூக விரோதிகள்.இங்கே அனைத்து மதத்தினரும் சகோதரர்கள் தான்.உளவுத் துறை கலவரத்தை தூண்டும் கயவர்களை அம்பலப் படுத்த வேண்டும்.காவல் துறையையே தாக்கும் குண்டர்கள் ஒடுக்கப் பட வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X