2015ல் இந்தியாவில் 45 ஆயிரம் பிரசவ மரணங்கள்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

2015ல் இந்தியாவில் 45 ஆயிரம் பிரசவ மரணங்கள்

Added : செப் 23, 2016 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
2015ல் இந்தியாவில் 45 ஆயிரம் பிரசவ மரணங்கள்

புதுடில்லி : கடந்த 2015ம் ஆண்டு உலகில் நிகழ்ந்த பிரசவ மரணங்களில் மூன்றில் ஒருபங்கு இந்தியாவில் நடந்துள்ளதாக இங்கிலாந்து மருத்துவஇதழ் நடத்திய ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்திலிருந்து வெளிவரும் லேன்செட் எனும் மருத்துவ வார இதழ் நடத்திய ஆய்வறிக்கை முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த 2015ல் பிரசவத்தின் போது உயிரிழந்த தாய்மார்களில் உலக அளவில் மூன்றில் ஒருபங்கு இறப்பு இந்தியாவில் நிகழ்ந்துள்ளது. அக்காலகட்டத்தில் இந்தியாவில் 45 ஆயிரம் பேர் பிரசவத்தின்போது உயிரிழந்துள்ளனர். இப்பட்டியலில் நைஜீரியா 58 ஆயிரம் உயிரிழப்புடன் முதலிடத்தில் உள்ளது.

மேலும் உலகில் நடக்கும் பிரசவங்களில் 25 சதவீத பிரசவங்கள் சரியான டாக்டரின் துணையின்றியே நடக்கின்றன. ஆண்டுதோறும் 210 மில்லியன் பெண்கள் தாய்மையடைந்து, 140 மில்லியன் குழந்தைகள் பிறக்கின்றன. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kanna - Chennai,இந்தியா
23-செப்-201615:56:23 IST Report Abuse
Kanna அந்த 45 ஆயிரத்துல, குஜராத்ல மட்டும் எவ்வளவுன்னு சொன்னா மோடி ஒன்னும் கோவுச்சிக்க மாட்டாரு.
Rate this:
Share this comment
Cancel
அம்பை சுதர்சனன் - கொடைக்கானல் ,இந்தியா
23-செப்-201614:47:48 IST Report Abuse
அம்பை சுதர்சனன் அறுவை சிகிசிச்சை மூலம் குழந்தை பெத்துக்க முயற்சிக்காமல் இருந்தாலே முக்கால் பேரின் சாவுகளை தடுக்கலாம்.
Rate this:
Share this comment
Cancel
Chandramoulli - Mumbai,இந்தியா
23-செப்-201610:15:05 IST Report Abuse
Chandramoulli சுகாதாரத்தில் இன்னமும் நாம் பின்தங்கி உள்ளோம் . அறிவியல் வளர்ச்சி கிராமப்புறங்களை சென்று அடைய வில்லை . மருத்துவ உதவி மனிதனுக்கு எவ்வளவு முக்கியம் என்று நாம் உணரவில்லை. வருத்தப்பட வேண்டிய நிகழ்வு. 45000 உயிர்கள் பலி ஆகியுள்ளனர் என்பது பெரிய இழுக்கு. பிரசவ நேரத்தில் உயிர் இழப்பு ஏற்று கொள்ள முடியாது .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X