அறிவியலின் ஆராய்ச்சிக்கூடம் கோயில்| Dinamalar

அறிவியலின் ஆராய்ச்சிக்கூடம் கோயில்

Added : செப் 27, 2016 | கருத்துகள் (11)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
அறிவியலின் ஆராய்ச்சிக்கூடம் கோயில்

கோயில்கள் பிரபஞ்சத்தின் ஆற்றலை பூமியில் சேகரிக்க நம் முன்னோர்களால் உருவாக்கப்பட்டது என்றால் அது மிகையாகாது. கிரகங்களின் மின்காந்த அதிர்வலைகள் பூமியை வந்தடையும் போது, மனித உயிரினங்களின் மீது பாய்கிறது. இது 24 மணி நேரமும் நடக்கிறது. இந்நிகழ்வின் போது, நமது முன்னோர்கள் மின்காந்த அலைகளை சேமிக்கும் அறிவியல் தளமாக கோயிலை உருவாக்கினர். கருங்கல்லால் கோயில்களில் சிலைகள் உருவாக்கப்பட்டது. கருங்கல் மந்திர ஒலி அலைகளை உள்வாங்கி சேமித்து வைத்து கொள்ளும். உள்வாங்கப்படும் ஒலி அலைகள் கோயில் முழுவதும் மின்காந்த அலைகளாக பரவி நிற்கும். அபிேஷகம் செய்யப்படுகின்ற பால், எண்ணெய், நெய் போன்ற பொருட்கள் ஆகர்ஷண சக்தியை உள்வாங்கி கொள்கிறது. சிலையை சுற்றி அலங்கரிக்கப்படுகின்ற மலர்களானது, நல்ல மின் காந்த அலைகளை அப்பகுதியில் பரவி நிற்க உதவுகின்றது. மூலவரை நாம் தரிசிக்கும் போது, அங்கு பரவியுள்ள மின்காந்த அலைகள் நமது கண்களின் வழியாக உடல் முழுவதும் பரவுகிறது. தீபம் பார்த்தால் புண்ணியம் என்று சொல்வார்கள். தீபத்தை தொட்டு வணங்கும்போது, மூலவரின் அருகில் உள்ள மின்காந்த அலைகள், நம் கைகளின் வழியாக உடல் முழுவதும் பரவுகின்றது. அதே போல்தான் திருநீறு, குங்குமம் மூலம் கோயிலில் உறைந்திருக்கின்ற பிரபஞ்ச ஆற்றலான கிரக சக்திகள் நம் உடலில் இணைகிறது.
மனதின் நிலைப்பாடு : முழுமையான நல்ல மின்காந்த அலைகள் உடலில் சேர்வதன் மூலம் பல்வேறு நலன்களை அடையலாம். அதே நேரத்தில் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்கின்ற அனைவரும் துன்பம் இல்லாமல் வாழ்கின்றனரா? என்ற ஐயப்பாடு எழக்கூடும்.ஒரு மாணவன், தன்னுடைய பாடத்திட்டம் 100 சதவீதம் இருந்தாலும், 25 சதவீத மனதை நிலைப்படுத்தி படித்தால், 25 மதிப்பெண்ணும். 50 சதவீதம் நிலைப்படுத்தி படித்தால் 50 சதவீத மதிப்பெண்ணும், 100 சதவீதம் மனதை நிலைப்படுத்தி படித்தால் நுாறு மதிப்பெண்களும் பெறுகிறான்.அதே போல் தான் கோயிலுக்கு செல்கின்ற மக்கள், கோயிலில் தன் சிந்தனைகளை வேறு இடத்தில் வைத்தால் ஆலயம் சென்றும் பலன் இல்லை. ஒருவர் புதிய காலணியை வாங்கி கோயில் வாசலில் போட்டுவிட்டு, உள்ளே சென்று இறைவனை வணங்கும்போது, ஆழ்மனதானது இறைவன் மீது இல்லாமல், தான் வாங்கிய காலணி மீது இருந்தால், மின்காந்த அதிர்வலைகள் உடலில் இணையாது. இதன் அடிப்படை தத்துவம் என்னவென்றால், ஆழ்மனதை ஒரு நிலை படுத்தாவிட்டால், பிரபஞ்ச பேராற்றலான கிரக சக்திகள் அந்த மனித உயிருக்கு கிடைக்காது.
கோயில் கோபுரம் : கோயிலின் உள்ளே நுழையும்போது, கோபுரம் பிரபஞ்ச சக்தியை உள்ளே இழுக்கிறது. கோபுர கலசத்தில் வரகு என்ற தானியம் கொட்டப்படுகிறது. அந்த தானியத்தின் மின்காந்த ஆற்றல், மின்னலால் ஏற்படும் மின் சக்தி, கோயிலை தாக்காமல் பாதுகாக்கிறது. கோயிலின் ஈசான்ய பகுதி, பிரபஞ்ச ஆற்றல் நுழையும் பகுதியாக இருக்கின்றது. ஈசான்ய பகுதியில், நவக்கிரகங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இதனால் ஒன்பது நவகிரகத்தின் சக்திகளும், கோயில் முழுவதும் பரவுகிறது. பிரபஞ்சத்திற்கும் மூலவருக்கும் இணைப்பு பாலமாக கொடிமரம் அமைக்கப்பட்டிருக்கிறது. வான் மண்டல மின்காந்த சக்தி, கோயிலின் கொடிமரம் மூலமே மூலவருக்கு அனுப்பப்படுகிறது. அதனால் தான் நம் முன்னோர்கள், கொடிமரம் அருகே சென்று நம் கோரிக்கைகளை சொன்னால், அவை வான் மண்டலத்தில் உள்ள பிரபஞ்சத்தின் மூலம் இணைவு ஏற்பட்டு, அக்கோரிக்கை நிறைவேறும் என்றனர். அதே போல் ஒவ்வொரு கிரகமும் ஒவ்வொரு தெய்வ சக்தியின் மீது உறைகின்றது. பிரபஞ்சத்தில் கலந்து வருகிற ஒன்பது சக்திகள் உறையக்கூடிய இடமாக கோயில்களை முன்னோர்கள் அமைத்தனர்.
ராகங்கள் : பக்தி, ஞானம், கலை, இலக்கியம், வேதம் போன்ற பல்வேறு தன்மைகளை ஒரே இடத்தில் கொண்டுவரக்கூடிய ஒரே இடமாக கோயில் திகழ்கிறது. இலக்கியமும், பண்பாடும் ஆலயத்தின் துாண்களாக உள்ளது. நமது முன்னோர்கள் கர்நாடக இசை ராகங்களை மனம் குளிர கேட்டால் மனதளவில் பல நல்ல மின்காந்த அதிர்வுகள் இணைந்து, ஆயுளை நீட்டிக்க முடியும், என்பதை கண்டறிந்து இசை கச்சேரிகளை நடத்தும் இடமாக கோயில்களை தேர்வு செய்தனர்.அமிர்தவர்ஷினி என்ற ராகம் மழைபொழியவும், 'ஹம்சானந்தி' மனஅழுத்தம் தீரவும், 'கேதாரம்' ஆஸ்துமா, தலைவலி, இருமல் போன்ற நோய்களை நீக்கவும், 'விஜயஸ்ரீ' வெற்றி கிடைக்கவும், 'அகிர் பைரவி'உயர் ரத்த அழுத்தம் தீரவும், 'ராமகளி' ராகம் அல்சர் தீரவும், 'கோலா ஹலம்' என்ற ராகம் மகிழ்ச்சியை ஏற்படுத்தவும் பாடினர். இவ்வாறு அறிவியல் உண்மைகள் அடங்கிய இசை, கோயில்களில் இசைக்கப்படுகிறது. இது மட்டும் இல்லாமல் இன்னும் 70-க்கும் மேற்பட்ட ராகங்களை பயன்பாட்டில் குறிப்பிடலாம். கணவன், மனைவி உறவின் அறிவியல் உண்மைகளை தெரிந்து கொள்ள கூடிய சிற்பங்கள் கோயில்களில் அமைக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் அறிவியல் சிறப்பம்சம் பொதிந்து கிடக்கும் ஓர் ஆராய்ச்சி கூடம் கோயில்.
- டி.ஐங்கரன்விஞ்ஞான ஜோதிடர்

காரைக்குடி. 82208 87335.-----------

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
04-அக்-201601:13:17 IST Report Abuse
மதுரை விருமாண்டி கோவில்கள் அன்றைய காலகட்டத்தில் இருந்த கட்டிடவியலின் உச்சநிலை. நாகரிகத்தை, பண்பாட்டை, கலை, காவியம் இவைகளை பறை சாற்றும் கலாச்சார சின்னம்..அதை காலகட்டத்தில் திரித்து, ஆக்கிரமித்து ஆதிக்கம் செலுத்தும் குல, ஜாதீய நடைமுறைகளை திணித்து ஆட்டம் போடுபவன் இன்றைய மனிதன்.. அன்றைய கோவில்களில் உள்ளது போன்ற கலை நயத்துடன், நுணுக்கங்களுடன் ஒரு தூணை கூட செய்யத் துப்பில்லாமல், "விஞ்ஞான ஜோதிடர்"ன்னு அஞ்ஞான பேத்தல்களை கொட்டியுள்ளார் இவர்..
Rate this:
Share this comment
Cancel
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
04-அக்-201601:00:05 IST Report Abuse
மதுரை விருமாண்டி விஞ்ஞான ஜோதிடர்.. அட்ரா, அட்ரா, அட்ரா, அட்ரா, அட்ரா, அட்ரா.. அண்ணனுக்கு இயற்பியலில் டாக்டர்ர்ர் பட்டம் போலிருக்கே.. இந்த சாத்து சாத்துறாரு..
Rate this:
Share this comment
Cancel
Muthu Kumarasamy - Mettupalayam, Coimbatore Dist.,இந்தியா
27-செப்-201611:42:35 IST Report Abuse
Muthu Kumarasamy டி.ஐங்கரன் அவர்களின் கட்டுரை, இந்து மதத்தில் நம்பிக்கை உடையவர்களுக்கு, நாம் சரியான மார்க்கத்தில் தான் சென்று கொண்டிருக்கிறோம் என்பதை உறுதி செய்யும். நம்பிக்கை இல்லாதவர்கள், பிற மதத்தவர்கள், மற்ற மதத்தின் நம்பிக்கையை விமர்சனம் செய்ய வேண்டியது இல்லை. இது ஜனநாயகம் கொடுக்கும் அளவற்ற சுதந்திரம். கட்டுரையாளர் ஒரு ஜோதிடராக இருப்பதால், அவருடைய கட்டுரையை சந்தேக பட தேவை இல்லை. எந்த நம்பிக்கையும், யாரையும் பாதிக்கத்தவரை குறை சொல்ல தேவை இல்லை. இந்து மதத்தவர்களிடம், களையப்பட வேண்டிய மூட பழக்க வழக்கங்கள் நிறைய உண்டு. மூட நம்பிக்கைக்கும், பாதிப்பில்லாத மத நம்பிக்கைக்கும் உள்ள வித்தியாசத்தை பகுத்து அறிய வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
27-செப்-201609:38:52 IST Report Abuse
A.George Alphonse This author is mixing every thing and making every one to belive his theory. His theory is totally wrong.In temples and churches we can't store or divert the radiation which are emitted by sun,moon,stars and so many other planets d by God.In olden days our ancestors constructed temples and churches to pray together and get the blessing from God.But people are interpreting according to their own way in order to make the people to belive in their theory. According to this articles how the radiation emitted by such planets can only be stored in temples and not in any other palaces and tall buildings.So let us not belive all these man made theories and belive only the creator and protector of God to save us with good health and long life.Every day and every man will give every new new thing which can not be accepted in this present day scientific era.Things are changing as human beings are also changing day by day.Let us all not waste our valuable time by such theories and live together with brotherhood love and affection and help each and live happily forever.
Rate this:
Share this comment
Cancel
adithyan - chennai,இந்தியா
27-செப்-201609:11:06 IST Report Abuse
adithyan கோவில் கோபுரங்களில் உள்ள கலசங்களின் கூர் முனை மூலம் பிரபஞ்ச சக்தி நேரே கீழே உள்ள சிலை மீது விழுகிறது. மேலும் கோபுரத்தின் மீது பரவி அங்கே நிற்கும் மக்களின் உடலிலும் பரவுகிறது. இதனால் தான் கோவிலுக்கு சென்றால் ஒரு புத்துணர்வு. ஆனால் இன்றைக்கு கோவில்கள் கொள்ளைக்காரர்களின் கூடாரமாகிவிட்டபிறகு இந்த புத்துணர்வு இல்லை.காரணம், அங்கெ எதற்கு எடுத்தாலும் சீட்டு. குறைந்தது 50 ரூபாய். மக்கள் மனதில் எதோ இழந்து விட்டோம் என்று உணர்வே. கட்டிய மன்னர்கள் எதுவும் கொடுக்காமல் தொழுது சிறிது நேரம் ஒய்வு பெற்று செல்லவே. மலருக்கு நந்தவனம். படையலுக்கு நிலங்கள். இந்த தேங்காய் பழம், கற்பூரம், மலர்மாலை ஆகியவை சமீபத்தில் கோவில் பெருச்சாளிகளால் உருவாக்க பட்டவை. வெண்ணை சார்த்தல், எலுமிச்சை மாலை ஆகியவை எந்த ஆகமத்தில் சொல்லப்பட்டது. மனதில் உள்ள பாரங்களை இறக்கி வைக்க ஒரு இடம் வேண்டும். அதற்க்கு அமைதியான தனி இடம் வேண்டும். அதற்க்கு தான் கோவில். கார்த்திகை தீபம், மலை சுற்றுதல் அதனால் பணம் கிடைக்கும் என்ற பொய் பிரச்சாரத்தில் மயங்கி மக்கள் நெடுந் தூரத்தில் இருந்து வருகிறார்கள்.ஒரு பத்திரிக்கையில் ஒரு பலே செய்தி வந்தால் அதை நம்பி மக்கள் ஏமாறுகிறார்கள். திருமணஞ்சேரி சென்றால் கல்யாணம் விரைவில், திருக்கருகாவூர் சென்றால் சுக பிரசவம் என்றெல்லாம் மக்கள் ஏமாறுகிறார்கள். மனம் தான் எல்லாம். மண் குடிசையில் சுதந்திரமாக பட்டினி கிடந்தும் மகிழும். மாளிகையில் எல்லாம் இருந்தும் துக்கிக்கும். .உங்கள் மனதை சாந்த படுத்துங்கள். உங்களது வேண்டுகோளை மனதார 108 தரம் சொல்லுங்கள். அது மனா பாரத்தை இறக்கும். இருக்கும் இடத்திலேயே கோவிலையும் கடவுளையும் காணலாம்.
Rate this:
Share this comment
Cancel
Sithu Muruganandam - chennai,இந்தியா
27-செப்-201604:30:07 IST Report Abuse
Sithu Muruganandam கடவுளைக் கும்பிடுபவர்களும் ஜோசியத்தைப் பரப்புபவர்களும் தாராளமாகச் செய்யுங்கள். உங்கள் விருப்பம். ஆனால் அதற்கு ஆதாரமாக அறிவியலை இழுக்காதீர்கள். அதை கேவலப்படுத்தாதீர்கள். அறிவியலின் துணையுடன் தான் கடவுளையும் ஜோசியத்தையும் நிலைநிறுத்த முடியும் என்பது உங்கள் பலவீனத்தையே காட்டுகிறது. மின்சாரமும் காந்தமும் இருக்கின்றன என்பது ஆதிகாலத்திலிருந்து மனிதர்களுக்குத் தெரியும். ஆனால் அவை மின்காந்த அலைகளாக இருக்கின்றன என்பது 1871 ல் மாக்ஸ்வெல் என்ற அறிவியலாளர் சொன்ன பிறகுதான் உலகத்துக்குத் தெரியும். அதற்கான அவருடைய சமன்பாடுகள் உலகப் புகழ் பெற்றவை. மின்காந்த அலைகள் இந்தப் பேரண்டம் தோன்றிய காலத்திலிருந்து இருப்பவை.பற்பல நூற்றாண்டுகளாக பாடுபட்டு அறிவியலாளர்கள் கண்டுபிடித்ததை, நாங்கள்தான் முதன்முதலில் கண்டுபிடித்தோம், எங்களுக்கு முன்னமேயே இது தெரியும் என்று சொல்வது வடிகட்டிய ஈனத்தனம், திருட்டுத்தனம், அயோக்கியத்தனத்தின் உச்ச கடடம். அப்படி ஒருபோதும் செய்யாதீர்கள். நீங்கள் நீங்களாக இருங்கள். உங்கள் கொள்கை அதன் சுய வடிவத்தில் இருக்கட்டும். அப்போதுதான் அதற்கு உண்மையான மரியாதை கிடைக்கும்.
Rate this:
Share this comment
Premanathan S - Cuddalore,இந்தியா
27-செப்-201607:56:24 IST Report Abuse
Premanathan Sசித்து முருகானந்தம் மட்டுமே அடிக்கடி மிகச் சரியாக சிந்தித்து கருத்தை பதிவிடுகிறார். பாராட்டுக்கள்....
Rate this:
Share this comment
diamondu - Toronto,கனடா
27-செப்-201608:48:51 IST Report Abuse
diamondu"உலகம் தட்டையானது அது உருண்டை அல்ல" > இப்படி கூறிய மதங்களையெல்லாம் நம்பும் அடிமைதனம் ... :-) பின்பு, அவர்களே "புதிய ஏற்பாடு" (Revised version ) வெளியிட்டார்கள் :-) மின்காந்த அலைகளைப்பற்றி பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெரியும்... ஒரு சிறு உதாரணம் ... சோம்நாத் கோவில்... அனைவரும் தெய்வ செயல் என்று கூறிக்கொண்டிருந்தனர்... ஆனால் உங்கள் முதலாளிகள் ( மேற்கத்தியர்கள் ) அதே அந்த காலத்தில் செய்யப்பட்ட மேக்னெட்டிக் பீல்ட் சயின்ஸ் என்று கூறினர். ஆனால் நீங்கள் ஒத்துக்கொள்ளக்கூடாது... foreign யூனிவர்சிட்டி சொன்னால் மட்டும் நம்புங்கள்:-) (2) டெல்லி குதுப் மினார் ~2500 - ~3000 ஆண்டு பழமையானது.... இன்னமும் அது துருபிடிக்கவில்லை (டெல்லி pollution -இல் சொல்லவே வேண்டியது இல்லை) ... அனால் இதுவரை மாடர்ன் சயின்ஸ் அதை கண்டுபிடிக்கவில்லை... ஆனால் நீங்கள் ஒத்துக்கொள்ளக்கூடாது... foreign யூனிவர்சிட்டி சொன்னால் மட்டும் நம்புங்கள் :-) 3) "Holy Cow " என்று வெளிநாட்டினர் கூறுவார் அதற்கு அர்த்தம் தெரியுமா? இதை நீங்கள் நம்பலாம்... உங்கள் "foreign யூனிவர்சிட்டி" முதலாளிகள் சொல்லிவிட்டனர். "கோகுலத்தில் பசுக்களெல்லாம் .. நான்கு படி பால் கறக்கும்..." என்ற பாட்டுக்கு ... இந்து மத கடவுள்கள் மட்டும் இல்லை என்று கூறும் தி.க வினர் அமெரிக்காவில் மாடுகள் 20-30 படி பால் கறக்கும் என்கின்றனர்.... செம அறிவாளிகள் காசு கூடுது அவர்களை அப்படி கூற வைத்தது வெளிநாட்டினர்... ஏன் தெரியுமா.... நமது மாட்டினத்தை அழிப்பதற்காக... இப்பொழுது என்ன நடக்கிறது? அமெரிக்காவில் இயற்கையாக மாட்டை மேயவைத்து கறக்கும் பாலுக்கு 8 மடங்கு விலை தெரியுமா? நமது மாட்டை அளித்து நமக்கு நல்லது செய்ய நினைக்கும் உங்கள் முதலாளிகள் ... நமது மாட்டை ஆராய்ச்சி செய்து ...உலகத்திலேயே நமது மாடு மட்டும்தான் வைட்டமின் A2 கொடுக்கும் என்று உறுதி செயதுள்ளனர் ... ஆனால் நீங்கள் ஒத்துக்கொள்ளக்கூடாது... 3) கோவில் கோபுரத்தில் இருப்பது இரிடியம் என்று இப்பொழுது உறுதி செய்யப்பட்டுள்ளது ... நீங்கள் ஒத்துக்கொள்ளாவிட்டாலும் அது இப்பொழுது படங்கள் வரை வந்துவிட்டது... ஆனால்... foreign காரன் அதை சொல்லாததினால் ... அதுவும் இங்கிலீஷ்-இல் சொல்லவில்லை ... அதனால் நீங்கள் ஒத்துக்கொள்ளக்கூடாது... 4) "சரவணபவ" தெரியுமா? அது தமிழர்களுடையது என்று ஒப்புக்கொள்கிறீர்களா? இல்லை அதுவும் இல்லையா? அதில் வரும் ஆறு முகம் (நட்சத்திரம்) தெரியுமா? அது இங்கிருந்து எங்கு பரவியது தெரியுமா? ... யூதர்களின் சின்னமானது தெரியுமா? இல்லை என்பீர்களா? சேரி ஒகே :-) ஹிட்லரின் சின்னமும் இங்கிருந்தே எடுக்கப்பட்டது தெரியுமா? அதுவும் இல்லையா? சேரி ஒகே :-) அமெரிக்காவில் /Foreign -இல் காதில் கடுக்கன் போட்டால் "Gay " என்று அர்த்தம் அது தெரியுமா? ... நமது நாட்டில் இதெல்லாம் நலத்திற்காக செய்ய்கின்றனரோ ...அது எல்லாம் வெளிநாட்டினர் கையில் போகும்போது அவர்களுடையது ஆகிவிடுகிறது... ஆனால் நீங்கள் ஒத்துக்கொள்ளக்கூடாது... 5) 7-ம் அறிவு படம் வராவிட்டால் பலபேருக்கு எப்படி கராத்தே இங்கிருந்து போனது என்றே தெரியாது... ஹஹஹஹ ... "பாபநாசம்" படம் பாருங்கள்.... ஒரு பொய் பலமுறை சொல்லும்போது எப்படி உண்மையாகிறது என்று.... அதைபோல் அமெரிக்கா/பிரிட்டிஷ்/மேற்கத்தியர்கள் ... 40-50 வருடங்களாக நமது மாட்டை மட்டமாக நினைக்க வயித்து அரசியல்வாதிகளின் துணையோடு .... Foreign மாட்டை வயித்து செயற்கை கலப்பினம் மட்டும்தான் செய்யவேண்டும் என்று பரப்பினர் தெரியுமா ? (காலநடை மருத்துவமனையில் இதை இன்றும் பார்க்கலாம்)... ஜெர்சி மாட்டுப்பால் மூலம் தான் இந்தியாவில் சர்க்கரை முதல் அணைத்து நோய்களும் வந்தது என்று உறுதி செய்ததை இல்லை என்கிறீர்களா?...ஹஹஹஹ சேரி ஒகே :-) 6) "டிகட்டிய ஈனத்தனம், திருட்டுத்தனம், அயோக்கியத்தனத்தின் உச்ச கடடம். " > இதுதான் அடிமைத்தனம்.... கோவில் கட்டியவர்கள் என்ஜினீயர்கள் இல்லை... அதனால் நங்கள் தன 4000 வருடங்களுக்கு முன்பு கட்டினோம் என்று கூறாதீர்கள்.... வெளிநாட்டினர்தான் வந்து கட்டி கொடுத்தனர்... சேரி ஒகே :-) 7) மதுரை கோவிலில் ozone படலம் பற்றி உள்ள உண்மைகள் ஒருவேளை உங்கள் முதலாளிகள்தான் வந்து எழுதி வைத்துவிட்டு சென்றனர்? சேரி ஒகே :-) 8) உங்கள் ஆராய்ச்சியாளர்கள் "CERN reactor சுவிற்சர்லாந்து " நாட்டில் சிதம்பரம் நடராஜர் நடனமாடும் சிலையை வய்துள்ளனர் தெரியுமா? ஏன்? எனி ஐடியா? சொன்னாலும் ஒத்துக்கொள்ளமாடீர்கள் ... ஏனென்றால் ... மதம் மாறியவர்கள் அனைவரும் Zombie (மிருதன் தமிழ் படம்) போல மாறிவிடுவர் தெரியுமா? 8) "108" எங்கேயோ கேட்டது போல் இருக்கிறதா? ... அணைத்து தமிழ்/தேசிய மத கோவில்களில் நாடாகும் வழிபாடுகளில் கண்டிருப்பீர்..... அதற்கு அர்த்தம் தெரியுமா? அதன்பின் இருக்கும் அறிவியல் தெரியுமா? இல்லை அதுவும் தற்செயலாக அமைந்ததை? ஹாஹாஹா 9) இவளவு ஏன்.... "நிலவேம்பு கஷாயம்" உங்கள் முதலாளிகளால் (நீங்கெல்லாம் அடிமை மனம் உள்ளவர்கள்... ஒத்துக்கொள்ள வேண்டாம் அனால் மனசாட்சி குத்தும் கண்டீப்பாக) scientifically prove செய்யப்படவில்லை ...தெரியுமா? ஒருவேளை சும்மா குடிக்கிறார்களா? 10) பனை மரத்தை எதற்கு வெட்டினார்கள் தெரியுமா? அதற்கு பணம் வாங்கிக்கொண்டு .... அவ்வளவு பெரிய சொத்து உடைய நிறுவனமாக மாறியிருப்பது தெரியுமா? ... சேரி எதற்கு வெட்டினார்கள்? ஏன் கள் தடை செய்யப்பட்டுள்ளது ? கள்ளை விட சாராயம் நல்லதா? பகுத்தறிவு என்பது ... திருவள்ளுவர் 2400 வருடங்களுக்கு முன்பே கூறிவிட்டார்... நாம் படிக்கும் கல்வி பிரிட்டிஷால் புகுத்தப்பட்டது தெரியுமா? ... 11) ஆர்கானிக் ஆர்கானிக் என்கின்றனர் ... அப்படி என்றல் என்ன... ? இதை தானே நாம் 10000 வருடங்களுக்கு மேல் செய்துவந்தோம்.... மாடுகள் எங்கே வேண்டுமானாலும் செல்லும் (நம்மூர் மாடுகள்) ... அதற்கு பெயர் "GENETIC ADOPTION " ... அந்த மாடு ஒவொரு பாகங்களும் மனிதனுக்கு ..மற்றும் விவசாயத்திற்கும் உறுதுணையாக இருக்கும்...தெரியுமா? 12) கோவிலில் இருக்கும் "லிங்கம்" ... அர்த்தம் தெரியுமா? அதன் உண்மையான அர்த்தம் தெரியுமா? 13) வெளிநாட்டில் TRINITY (நமூரில் முமூர்த்திகள் ) அர்த்தம் தெரியுமா... நீங்கள் அறிவாளி... நான் முட்டாள் நன்றி...
Rate this:
Share this comment
parthiban - coimbatore,இந்தியா
27-செப்-201616:45:30 IST Report Abuse
parthibanமிகவும் நன்று ....உங்களை பாராட்ட வார்த்தைகளையே இல்லை ... இவ்வளவு சொல்லியும் இவர்கள் கேட்க மாட்டார்கள் ,, முதலில் NGO லிருந்து வரும் பணத்தை நிறுத்தினால் அல்லது மத்திய அரசு மூலமாக மட்டும் பணம் வர சட்டம் கொண்டு வர வேண்டும் , அப்போதுதான் சிந்திக்கவே தொடங்குவார்கள் ......
Rate this:
Share this comment
Cancel
Ngoyya - Ngoyya City,யூ.எஸ்.ஏ
27-செப்-201604:27:03 IST Report Abuse
Ngoyya இந்த ஐங்கரன் எந்த ஆராய்ச்சி பண்ணி மின் காந்த அலைகளை கண்டு பிடிச்சாராம்? இந்த ஜோதிட சிகாமணிகள் எல்லாம் இப்பிடி அறிவியல் பூர்வமாக நிரூபணம் ஆகாத கற்பனை கட்டுரை எழுதி காலத்தை கழிப்பதை விட்டு எப்ப தான் அறிவியல் பூர்வமாக நிரூபிச்சி இந்து மதத்தையும் அதன் பெருமைகளையும் உலகுக்கு பரப்புவார்களோ? இந்த கற்பனை கழிசடைகள் சொல்லும் கதை கேட்டு மக்களும் ஏமாந்து இதுங்கள பணக்காரர்களாகியது தான் மிச்சம்.
Rate this:
Share this comment
diamondu - Toronto,கனடா
27-செப்-201609:30:24 IST Report Abuse
diamonduஉங்கே பேரே சொல்லுதே நீங்க எவ்வளவு பெரிய "ங்கொய்யா" என்று....அறிவியல் பூர்வமாக நிரூபித்துக்கொண்டுதானே இருக்கின்றனர்? அமெரிக்காவில் /வெளிநாட்டில் உருவாக்கப்படும் அனைத்து உணவு/மருந்து களுமே 20-30 வருடங்களுக்கு பிறகு தீயவை என்று நிரூபிக்கப்பட்டுள்ளது....இந்தியாவில் உங்கள் வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்ட 2000 மருந்துகள் தடை செய்யப்பட்டன தெரியுமா? ஆனால் உங்களைப்போல் படித்த டாக்டர்கள்தான் அந்த மருந்தை எழுதிக்கொடுத்தனர் தெரியுமா? ஹஹஹஹஹ.... உலகம் உருண்டை என்று வெளிநாட்டினர்தான் கூறினர் எனும் அடிமைத்தனம் அதுவும் ஏதோ மதங்களை பின்பற்றுவதற்காக ... சொந்த நாட்டையே கேவலமாக நினைக்கும் செயல்..... சூப்பர் ... இந்தியாவில் நிறைய NGO .... இப்பொழுது செய்திகளில் வந்து நாறியது ...தெரியுமா? ஏன்... இதனை நாள் அவர்களை நல்லவர்கள் என்று நம்பினீர்கள்.... Anyhow .. உலகம் உருண்டையானது என்று பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பே நமது history (புராணம்) .. வந்துவிட்டது... ஆனால் நீங்கள் ஒத்துக்கொள்ளக்கூடாது... foreign யூனிவர்சிட்டி சொன்னால் மட்டும் நம்புங்கள்:-) ......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை