முடிவெடுக்கப்படாமல் முடிந்த காவிரி கூட்டம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

முடிவெடுக்கப்படாமல் முடிந்த காவிரி கூட்டம்

Updated : செப் 29, 2016 | Added : செப் 29, 2016 | கருத்துகள் (23)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
Advertisement
முடிவெடுக்கப்படாமல் முடிந்த காவிரி கூட்டம்

புதுடில்லி:காவிரி விவகாரம் தொடர்பாக டில்லியில் மத்திய அமைச்சர் உமாபாரதி தலைமையில் நடந்த கூட்டம் முடிவு எடுக்கப்படாமல் முடிவடைந்தது.


தொடர்ந்து அமைச்சர் உமாபாரதி கூறுகையில், கர்நாடகாவில் காவிரி நீர் இருப்பு குறித்து ஆய்வு செய்ய தமிழக அரசு ஒப்புக்கொள்ளவில்லை. தமிழக்திற்கு தண்ணீர் திறக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. இரு தரப்பு கருத்துகளும் கேட்கப்பட்டுள்ளன. இரு தரப்பு கருத்துகளும் சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்கப்படும். சுப்ரீம் கோர்ட் அறிவுரைப்படி அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறினார்.


சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி டில்லியில் மத்திய அமைச்சர் உமாபாரதி தலைமையில் காவிரி கண்காணிப்பு குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கர்நாடக முதல்வர் சித்தராமையா, தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தலைமைச்செயலாளர் ராமமோகன் ராவ் ஆகியோர் கலந்து கொண்டனர்.


தமிழகத்திற்கு கர்நாடகாக தண்ணீர் தர மறுப்பது அரசியல் சாசனத்தை மீறும் செயல் என்று முதல்வர் ஜெயலலிதா கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்த கூட்டத்தில் கர்நாடக முதல்வர் சித்தராமையா பேசுகையில், தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது. உண்மை நிலையை அறிய மத்திய அரசு நிபுணர் குழுவை அனுப்பி ஆராய வேண்டும். கடந்த 2015-16ம் ஆண்டு நீர் பருவ ஆண்டு மோசமானதாக இருந்தது. தண்ணீர் திறந்தால் கர்நாடகாவில் குடிநீருக்கு பற்றாக்குறை ஏற்படும் எனக்கூறினார்.


முதல்வர் ஜெ., உரையை வாசித்த தலைமைச்செயலாளர் ராமமோகன் ராவ், தமிழகத்திற்கு காவிரியில், தண்ணீர் தர மறுப்பது அரசியல் சாசனத்தை மீறும் செயல்: தமிழக அரசு

காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும். டெல்டா பகுதியில் ஒரு போக சம்பா பயிரையாவது காப்பாற்ற தண்ணீர் திறப்பது அவசியமாகும்.

சுப்ரீம் கோர்ட் உத்தரவை கர்நாடக அரசு மதிக்கவில்லை. நீர் தர மறுப்பதை நீதிமன்ற அவமதிப்பாக கருதப்பட வேண்டும். சட்டம் ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்த கர்நடகா அனுமதித்துள்ளது. கர்நாடகாவில் தமிழர்கள் அவமதிக்கப்படுகின்றனர். கோர்ட் உத்தரவுப்படி தண்ணீர் தருவதை உறுதிப்படுத்த வேண்டும் எனக்கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Barathan - Melbourne ,ஆஸ்திரேலியா
01-அக்-201610:05:13 IST Report Abuse
Barathan தவறான செய்தி. " முடிவெடுக்கபடாமல் முடிந்த காவிரி கூட்டம்" என்பதை "முடிவெடுக்க கூடாத காவிரி கூட்டம்" என்று இருந்திருக்க வேண்டும். கர்நாடகாவை பொறுத்தவை சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு ஜுஜுபி, "நீங்கள் (தமிழக அரசு) இன்டர்நேஷனல் கோர்ட்டுக்கே சென்றாலும், நாங்கள் தண்ணீர் கொடுக்க மாட்டோம்" என்றும் கர்நாடக முதல்வர் சொல்லுவார்.இதான் எங்க தீர்ப்பு என்று கர்நாடக முதல்வர் அறிக்கை விடுவார். இதே ஒரு தனி மனிதன் என்றால் சுப்ரீம் கோர்ட் "contempt of court order" உள்ளே (ஜெயிலில்) தள்ளி இருப்பார்கள். இந்த காவிரி பிரச்சனையை வைத்துக்கொண்டு சுமார் 30 வருடங்களுக்கு முன் அப்பாவி தமிழர்கள் வீடு, கடை இவற்றையெல்லாம் கொளுத்தி சூறையாடி பங்காரப்பா ஆட்சியில் நடந்தேறியது. அதைத்தான் இப்பவும் சீத்தராமையா ஆட்சியில் நடத்தியிருக்கிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel
s t rajan - chennai,இந்தியா
29-செப்-201621:21:17 IST Report Abuse
s t rajan அட கடவுளே.... இந்த கருணையில்லா மாகாணம் தான் கர்நாடகவா
Rate this:
Share this comment
Cancel
தமிழர்நீதி - சென்னை ,இந்தியா
29-செப்-201619:00:52 IST Report Abuse
தமிழர்நீதி ஆண்டிகள் கூடுவார்கள் தினம் தினம் .ஆனால் முடிவு எதுவும் எடுக்கமாட்டார்கள் . இங்கு ஆண்டி தலைமையில் கூட்டம் . முடிவு வராது . தமிழக முதல்வருக்கு உடம்பு சரியில்லை . மோடிக்கு வெளிநாட்டில் வேலை .இதுல விவசாயிகளை யார் கவனிப்பது . அசந்தால் நிலம் எடுக்கும் சட்டம் கொண்டு வராமலிருந்தால் சரி .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X