பாக்.,கிற்கு அளிக்கப்பட்ட வர்த்தக அந்தஸ்து தொடருமா? | பாக்.,கிற்கு அளிக்கப்பட்ட வர்த்தக அந்தஸ்து தொடருமா? Dinamalar

பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
பாக்.,கிற்கு அளிக்கப்பட்ட
வர்த்தக அந்தஸ்து தொடருமா?

புதுடில்லி: பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டுள்ள, எம்.எப்.என்., எனப்படும் வர்த்தகத்துக்கு உகந்த நாடு என்ற அந்தஸ்தை, மறுபரிசீலனை செய்வதற்காக நடக்க இருந்த கூட்டம், திடீரென ஒத்திவைக்கப்பட்டுஉள்ளது.

பாக்.,கிற்கு அளிக்கப்பட்ட வர்த்தக அந்தஸ்து தொடருமா?

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் யூரியில், ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை தொடர்ந்து, இந்தியா - பாகிஸ்தான் உறவு மோசமடைந்துள்ளது. பாகிஸ்தானுக்கு,

1996ல், நல்லெண்ண அடிப்படையில், எம்.எப்.என்., அந்தஸ்தை, இந்தியா வழங்கியது. இந்த அந்தஸ்தை மறுபரிசீலனை செய்ய, இந்தியா திட்ட மிட்டுஉள்ளது.

இதற்காக, பிரதமர் மோடி தலைமையில், டில்லியில் நேற்று கூட்டம் நடக்க இருந்தது. இந்நிலையில், திடீரென இந்த கூட்டம், அடுத்த வாரத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட்டுள்ள வர்த்தக அந்தஸ்து தொடருமா அல்லது ரத்து செய்யப்படுமா என்பதில், 'சஸ் பென்ஸ்' நீடிக்கிறது.
'இந்தியாவுக்கு இழப்பில்லை' :

இந்திய தொழில் மற்றும் வர்த்தக கூட்டமைப்பான, 'அசோசெம்' வெளியிட்டுள்ள அறிக்கை: பாகிஸ் தானுக்கு வழங்கியுள்ள அந்தஸ்தை ரத்து செய்வ தால், இந்தியாவுக்கு எந்த இழப்பும் இல்லை.

Advertisement

அந்த நாட்டுடன், நமக்கு உள்ள வர்த்தக நடவடிக்கைகள், நம் மொத்த வர்த்தக நடவடிக்கைகளில் மிகக் குறைவு. அதே நேரத்தில், பாகிஸ்தானுக்கு பெரும் இழப்பு ஏற்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Advertisement

வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
இளங்கோ - chennai,இந்தியா
30-செப்-201612:49:43 IST Report Abuse

இளங்கோபாகிஸ்தான் கேட்காமலே நல்லெண்ணத்தில் இந்த அந்தஸ்து கொடுக்க பட்டுள்ளது. மேலும் இதே அந்தஸ்தை பாகிஸ்தான் இந்தியாவுக்கு கொடுக்க வில்லை. இதை உடனே நிறுத்த வேண்டும்?

Rate this:
anbu - London,யுனைடெட் கிங்டம்
30-செப்-201611:27:21 IST Report Abuse

anbuஏன் பிரம்பு கொடுத்து அடி வாங்க வேண்டும்?, சிந்திப்பீர் செயல்படுவீர், மானம் ஒன்றே முக்கியம். பணம் எல்லாம் அப்புறம். வேண்டுமானால் அவன் இலங்கை வழியாக வாங்கட்டும். எது இலாபம், எது வாழும் வழிமுறை என்பதை புரிந்துகொள்ளட்டும் .

Rate this:
S. Jayakkannu - pune,இந்தியா
30-செப்-201610:05:52 IST Report Abuse

S. Jayakkannuஇந்திய பாதுகாப்பு வீரகளுக்கு என் உயிர் கலந்த வாழ்த்துக்கள் . இந்தியன் டா.

Rate this:
மேலும் 10 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X