இறந்து 13 நாட்களுக்கு பிறகு ராம்குமார் உடல் பிரேத பரிசோதனை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இறந்து 13 நாட்களுக்கு பிறகு ராம்குமார் உடல் பிரேத பரிசோதனை

Added : அக் 01, 2016 | கருத்துகள் (7)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
இறந்து 13 நாட்களுக்கு பிறகு ராம்குமார் உடல் பிரேத பரிசோதனை

சென்னை : சென்னையில் பொறியாளர் சுவாதி கொலை வழக்கில், புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் தற்கொலை செய்து கொண்டார். உயிரிழந்த 13 நாட்களுக்கு பிறகு ராம்குமாரின் உடல் இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி டில்லி எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் 5 பேர் அடங்கிய குழு இந்த பிரேத பரிசோதனையை செய்து வருகிறது. சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் 5 பேர் குழு பிரேத பரிசோதனையை செய்து வருகிறது. தடயவியல் துறை தலைவர் செல்லக்குமார் தலைமையில் நடக்கும் ராம்குமார் உடல் பிரேத பரிசோதனையை, திருவள்ளூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி தமிழ்செல்வி ஆய்வு செய்து வருகிறார். ராம்குமாரின் பிரேத பரிசோதனை நடப்பதால் ராயப்பேட்டை மருத்துவமனையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.சென்னை புழல் சிறையில் தற்கொலை செய்துகொண்ட ராம்குமாரின் உடல் பிரேத பரிசோதனை காலை துவங்கியது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Barathan - Melbourne ,ஆஸ்திரேலியா
02-அக்-201611:21:31 IST Report Abuse
Barathan போகிற போக்கில், இந்த மனிதனுக்கு சிலை வைத்து, சிலையை சுற்றி ஸ்டீல் க்ரில் இல் பென்சிங் போட்டு ஒரு கூட்டம் வழி படுவதல்லாமல், வசூல் வேட்டையிலும் இறங்கிவிடுவார்கள். கலப்பு காதல்.கலப்பு கல்யாணமென்றால் கட்ட பஞ்சாயத்துதான் இந்த கூட்டம் பின்பற்றும் வழி. மக்கள் வரிப்பணம் எப்படியெல்லாம் தேவையில்லாமல் செலவு செய்யப்படுகிறதென்பதற்கு இந்த ராம்குமார் கேஸ் ஒரு நல்ல உதாரணம்.
Rate this:
Share this comment
Cancel
Rajunadar Rangaraj - Erode,இந்தியா
01-அக்-201620:08:01 IST Report Abuse
Rajunadar Rangaraj எம தர்மன் ஏற்பாட்டில் கொலை நடந்து விட்டதாக உச்ச நீதி மன்றத்தில் ஒரு வழக்கு தொடரலாமா ?
Rate this:
Share this comment
Cancel
$$$$ - $$$$,இந்தியா
01-அக்-201619:16:01 IST Report Abuse
$$$$ பொணத்தை வைத்து அரசியல் பிழைப்பு.. மற்றும் வக்கீல் தொழில் சிறக்க ஒரு நாலு பேரு ..ஜாதியின் அடிப்படையில் நடத்தும் நாடகம்..........பாவம் இந்த கொமாரோட அப்பா.. அம்மா... ஜாதீய உணர்வினால் மிகவும் நன்றாக தூண்டப்பட்டு மீண்டும் மீண்டும் பலி கடாவாக ஆக்கப்படுகிறார்கள்....அவர்களின் பணம் தான் வீண்...பிளேடால் கழுத்தை அறுத்தது போலீஸ் என்று தகப்பனும் சேர்ந்துகொண்டு சொன்னது அப்பட்டமான பொய்.. சுவாதியின் கொலையாளியும் வேறு யாரும் இல்லை...முற்பகல் செய்தது பிற்பகல் விளைந்து விட்டது....... குமாரின் தகப்பன் ... திருமாவுடன் நடக்கும் போது அவரின் முகத்தில் கர்வம் தெரிகிறது.. தான் தன் ஜாதி தலைவருடன் நடப்பது அவருக்கு கர்வமாக இருக்கலாம்..... இந்த உணர்வு தான் இவ்வளவு மோசமான பின் விளைவுகளுக்கும் காரணம்...அந்த உணர்வில் தான் அரசியல் லாபம் விளைகிறது...அந்த உணர்வு தான், தன்னை ஏமாளி யாக மாற்றுகிறது என்று தெரியாமலே அந்த அப்பாவி தகப்பனும் இவர்கள் இழுத்த இழுப்புக்கு செல்கிறார்....பரிதாபப்படுவதை தவிர வேறு என்ன சொல்ல...?
Rate this:
Share this comment
Cancel
Shanu - Mumbai,இந்தியா
01-அக்-201618:42:56 IST Report Abuse
Shanu ஸ்வாதி என்கிற பெண் இறந்த போது துடிக்காத இதயங்கள், ஜாதியை வைத்து இவனுக்காக துடிக்கின்றது. இவன் கொலைகாரனாக ஆவதற்கு இவனது தந்தையின் வளர்ப்பு காரணமாக இருக்கலாம். இவன் இறந்த பின்னும் அரசியல் பண்ணி கொண்டு இருக்கிறான் இவனது தந்தை. இவனது தந்தைக்கு இப்போ வேண்டியது 5 -25 லட்சம் பணம். ஸ்வாதியின் கொலையை நிரூபித்து, அதற்குரிய தண்டனையை, இவனது தகப்பனுக்கு வழங்க வேண்டும். இவனது தகப்பன், பரம சிவத்தை சும்மா விட கூடாது. பரமசிவம் இப்போ துள்ளுவதற்கு, குற்றத்தை நிரூபித்து, தூக்கு தண்டனை வழங்க வேண்டும். ஜாதியின் பெயரால், இங்கு உள்ளவர்கள் இந்த கொலைகாரனுக்கு சப்போர்ட் செய்யாமல் இருங்கள். உங்கள் வீட்டில், ஒரு பெண் பிள்ளைக்கு இந்த கதி நேர்ந்தால் எப்படி இருக்கும் என்று ஒரு முறை யோசித்து விட்டு, கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.
Rate this:
Share this comment
Cancel
Cheran Perumal - Radhapuram,இந்தியா
01-அக்-201615:55:46 IST Report Abuse
Cheran Perumal இறந்தும் அந்த ஆத்மாவுக்கு நிம்மதியில்லை. அதற்கு காரணம் சுற்றத்தார்.
Rate this:
Share this comment
Cancel
Barathan - Melbourne ,ஆஸ்திரேலியா
01-அக்-201615:39:40 IST Report Abuse
Barathan இந்த மனிதனால் போலீஸ், சுகாதார துறை, நீதித்துறை எல்லாம் அரசு பணத்தை சரமாரியாக செலவு செய்கிறார்கள். போதாதற்கு இந்த மீடியாக்கள் வேறு சுறுசுறுப்பாகிவிட்டார்கள்.
Rate this:
Share this comment
Cancel
மோகன் வைத்தியநாதன் - சுலவ்,யுனைடெட் கிங்டம்
01-அக்-201612:51:13 IST Report Abuse
மோகன் வைத்தியநாதன் என்ன பிரயோஜனம்... ஏற்கனவே சொன்னதை தான் சொல்லு போறாங்க. எல்லாமே தேர்ச்சியாக நடத்தப்படுகிற நாடகம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை