பாக்.,கில் இருந்து பறந்து வந்த ‛மிரட்டல்' புறா: மோடிக்கு வந்தது கடிதம் | Dinamalar

பொது செய்தி

இந்தியா

பாக்.,கில் இருந்து பறந்து வந்த ‛மிரட்டல்' புறா: மோடிக்கு வந்தது கடிதம்

Updated : அக் 03, 2016 | Added : அக் 03, 2016 | கருத்துகள் (28)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
மோடிஜிக்கு வந்தது ஒரு கடிதம்

பதன்கோட்: பாகிஸ்தானில் இருந்து, மிரட்டல் கடிதத்தை சுமந்தபடி பறந்த வந்த புறாவை பஞ்சாப் எல்லை போலீசார் பிடித்து கூண்டுக்குள் அடைத்தனர். பஞ்சாப் மாநிலம் பதன்கோட் எல்லை பகுதியில் ஒரு புறா பறந்து வந்து அமர்ந்தது. இந்த புறாவின் காலில் ஏதா இருப்பதை பார்த்த நமது படையினர் இந்த புறாவை லாவகமாக பிடித்தனர். புறாவின் காலில் இருந்த ஒரு சிறிய காகிதத்தில் உருது மொழியில் வாசகம் எழுதப்பட்டிருந்தது. இதில் " மோடி ஜி ! கடந்த 1971ல் ( இந்தியா- பாக்., போர் ) இருந்ததைப் போன்ற மக்கள் இப்போது இருப்பதாக நினைக்க வேண்டாம், இப்போது ஒவ்வொரு குழந்தையும் கூட இந்தியாவுக்கு எதிராக போராட தயாராகவுள்ளது" என கூறப்பட்டுள்ளது. சமீபத்தில் (ஞாயிற்றுக்கிழமை ) , இதே போன்ற தகவல் அடங்கிய 2 பலூன்கள் இந்திய எல்லைக்குள் வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.கடந்த வாரம் 28ம் தேதி பாகிஸ்தான் எல்லைக்குள் இந்திய படை நுழைந்து அங்கிருந்த பயங்கரவாத முகாம்களை அழித்தது. இது பாகிஸ்தானை அதிர்ச்சி அடைய செய்தது. மேலும் இரு நாட்டின் எல்லையில் படைகள் குவிக்கப்பட்டதால் பதட்டம் ஏற்பட்டது.



Advertisement




வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா
03-அக்-201620:16:11 IST Report Abuse
Rajendra Bupathi அவுங்க ஒரு முடிவோடதான் இருக்கறாங்க போல ?ஆனா நாமதான் இன்னும் ரெடியாகல?>
Rate this:
Share this comment
Cancel
karthi - MADURAI,இந்தியா
03-அக்-201618:15:05 IST Report Abuse
karthi பாகிஸ்தான் என்ன பண்ணாலும் வேஸ்ட். எப்படி பண்ணாலும் waste
Rate this:
Share this comment
Cancel
manju - bangalore,இந்தியா
03-அக்-201617:37:08 IST Report Abuse
manju அதனால தான் நாம் செவ்வாய்க்கிரகம் பிடித்து விட்டோம், இவர்கள் கஸ்மீரை பிடிக்க ட்ரை pannikondirukkiraargal
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X