காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு எதிர்ப்பு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு எதிர்ப்பு

Added : அக் 03, 2016 | கருத்துகள் (247)
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு எதிர்ப்பு

புதுடில்லி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது.
காவிரி தொடர்பான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் நாளைக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க உத்தரவிட்டது. இந்த குழுவில் இடம்பெறும் நிபுணர்களின் பெயர்களை பரிந்துரை செய்ய தமிழகம், புதுச்சேரி, கேரளா, கர்நாடகா மாநிலங்கள் தெரிவிக்க உத்தரவிட்டது. தமிழகம், புதுச்சேரி மாநிலங்கள் தங்களது தரப்பு நிபுணர்களின் பெயர்களை பரிந்துரை செய்துள்ளது.
இந்நிலையில், மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு தாக்கல் செய்த மனுவில், 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு வாரியத்தை அமைக்க உத்தரவிட முடியாது. வாரியம் என்பது பரிந்துரை மட்டுமே. காவிரி மேலாண்மை வாரியத்தை தற்போது அமைக்கும் சாத்தியமில்லை. வாரியம் அமைக்க வேண்டும் என்ற உத்தரவில் திருத்தம் செய்ய வேண்டும் எனக்கூறப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை நாளை பிற்பகல் 2 மணிக்கு நடக்க உள்ளது.
இந்நிலையில், காவிரியில் தமிழகத்திற்கு எவ்வளவு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது என்ற விபரத்தை நாளை பிற்பகல் 2 மணிக்குள் தெரிவிக்க கர்நாடக அரசுக்கு சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X