பயங்கரவாதிகளுக்கு உரிய பதிலடி; ராஜ்நாத்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

பயங்கரவாதிகளுக்கு உரிய பதிலடி; ராஜ்நாத்

Added : அக் 03, 2016 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
பயங்கரவாதிகளுக்கு உரிய பதிலடி; ராஜ்நாத்

புதுடில்லி: எல்லையில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கு ராணுவத்தினர் உடனடியாக தக்க பதிலடி கொடுத்துள்ளதாக, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
இந்திய அதிரடி தாக்குதலை தொடர்ந்து, இந்தியா பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் நிலவுகிறது. தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் காஷ்மீர் செல்ல உள்ளார். இந்நிலையில், நேற்று இரவு பாரமுல்லாவில் இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவமும், பயங்கரவாதிகளும் தாக்குதல் நடத்தினர். இதில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். ஒரு வீரர் வீரமரணம் அடைந்தார். இதனை தொடர்ந்து, பூஞ்ச் அருகே ஷாபூர் பகுதியில் எல்லைக்கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்தினர்.
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், எல்லையில் இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் மீது இந்திய ராணுவத்தினர் தக்க பதிலடி கொடுத்துள்ளதாக கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
$$$$ - $$$$,இந்தியா
03-அக்-201613:32:07 IST Report Abuse
$$$$ சின்ன ரக ஏவுகணைகளை பயன்படுத்தி தாக்கினால் என்ன? இதை நமது எல்லைக்குள் இருந்துகொண்டே செய்யலாமே?
Rate this:
Share this comment
Cancel
Chandramoulli - Mumbai,இந்தியா
03-அக்-201613:11:33 IST Report Abuse
Chandramoulli இவர் மறுபடியும் அங்கு சென்று உள்ளது அடுத்த தாக்குதலுக்கு இந்தியா தயார் ஆகிறதோ என்று நினைக்க தோன்றுகிறது. தீரவிரவாதம் முழுமையாக ஒழிக்க பட வேண்டும்.எல்லை தாண்டும் நபருக்கு மரண தண்டனை தான் சரியான தீர்வு
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X