நான் எப்போதும் ஜாலி கேரக்டர் : சின்னத்திரை ஸ்ரித்திகா கலகல...| Dinamalar

நான் எப்போதும் ஜாலி கேரக்டர் : சின்னத்திரை ஸ்ரித்திகா கலகல...

Added : அக் 10, 2016 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
நான் எப்போதும் ஜாலி கேரக்டர் : சின்னத்திரை ஸ்ரித்திகா கலகல...

சின்னத்திரையில் உயிரோட்டமான நடிப்பால் பெண்களின் மனதை கவர்ந்தவர் ஸ்ரித்திகா. மலேசிய தமிழ் பெண்ணான இவர் 'ஹோம்லி' கேரக்டர்களில் அசத்தும் அழகு பதுமை. தொலைக்காட்சியில் 'குல தெய்வம்' சீரியலில் 'அலமுவாக' நடிக்கிறார்.அவர் நம்மிடம்...பிறந்து, வளர்ந்ததெல்லாம் மலேசியாவில். சினிமாவில் நடிக்க சென்னை வந்தேன். முதலில் நான் தொகுப்பாளினியாக இருந்தேன். 'மதுரை டூ தேனி' படத்தில் நாயகியாகவும், 'வேங்கை,' 'வெண்ணிலா கபடிக்குழு' போன்ற படங்களில் அழுத்தமான கதாபாத்திரங்களிலும் நடித்தேன்.அதே சமயத்தில் சின்னத்திரையிலும் வாய்ப்பு கிடைத்தது. நாதஸ்வரம் சீரியலில் 'மலர்' கேரக்டர் தான் என்னை உயர்ந்த இடத்திற்கு கொண்டு சென்றது. இதற்கு இயக்குனர் திருமுருகனை தான் பாராட்ட வேண்டும்.சின்னத்திரையில் நடிப்போரிடம் குடும்ப உறுப்பினர் போல் பழகுகிறேன். இதனால் தானோ என்னமோ எனது நடிப்பு இயல்பாக உள்ளது. சினிமாவிற்கும், சின்னத்திரைக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. சினிமாவை பொறுமையாக எடுப்பர். சீரியல் அந்த மாதிரி எடுக்க முடியாது; எப்போதும் தயாராகவே இருக்க வேண்டும்.மொழி பெயர்ப்பு சீரியல் வந்தால் சின்னத்திரை ஊழியர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும். அவற்றிற்கு தடை விதிக்க வேண்டும். எனக்கு 'சாப்ட்' கேரக்டர் தான் பொருத்தம் என, எல்லோரும் கூறுகின்றனர். நான் அனைத்து கதாபாத்திரங்களிலும் நடிக்க ஆசைப்படுகிறேன். இதற்கு எனது முகபாவம் சரியாக வருமா என்று தெரியவில்லை.நான் எப்போதும் 'ஜாலி' கேரக்டர். சினிமா, சின்னத்திரை மட்டுமின்றி எந்த துறையாக இருந்தாலும் பெண்களுக்கு தொந்தரவு இருக்கும். நாம் எப்படி நடந்து கொள்கிறோமோ; அப்படியே ஆண்களும் பழகுவர். அனைத்து துறையிலும் பெண்கள் சாதிக்க வேண்டும் என்பது ஆசை. எங்களை போன்றோர் வெளியே செல்லும் போது முக்கியத்துவம் கிடைக்கிறது.சில நேரங்களில் தனித்துவம் பாதிக்கிறது. எனக்கு தகுந்த கேரக்டர் கிடைத்தால் சினிமாவிலும் நடிப்பேன். கவர்ச்சியாக நடிக்க மாட்டேன், என்றார்.srithika_22@yahoo.com

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
selvaraj - mumbai,இந்தியா
20-அக்-201614:23:02 IST Report Abuse
selvaraj அன்பு அலமேலு .. எங்கள் நெஞ்சில் நிறைந்த எங்கள் பாசமலரே .. எங்கள் மலர் கொடியே ... நீ என்றும் எங்கள் மலர்தான் . மலராகத்தான் எங்கள் நெஞ்சில் நிறைந்து இருக்கிறாய் .மறக்க முடியாத மலர் எப்படி உன்னை மறக்க முடியும் . நீ மீண்டும் பிறந்து அலமேலுவாக எங்கள் இதயங்களில் வளம் வருகிறாய் . நீ எங்கள் வீட்டு பெண் . உன்னை மறக்க முடியுமா மலரே எங்கள் அலமுவே .. உங்கள் பதிலுக்காக காத்திருக்கும் உங்கள் அன்பான ரசிகன் அன்பு அலமேலு .. எங்கள் நெஞ்சில் நிறைந்த எங்கள் பாசமலரே .. எங்கள் மலர் கொடியே ... நீ என்றும் எங்கள் மலர்தான் . மலராகத்தான் எங்கள் நெஞ்சில் நிறைந்து இருக்கிறாய்.மறக்க முடியாத மலர் எப்படி உன்னை மறக்க முடியும். நீ மீண்டும் பிறந்து அலமேலுவாக எங்கள் இதயங்களில் வளம் வருகிறாய் . நீ எங்கள் வீட்டு பெண் . உன்னை மறக்க முடியுமா மலரே எங்கள் அலமுவே ,Hi , Srithika , நீங்கள் தற்சமயம் நடித்து கொண்டிருக்கும் குலதெய்வம் தொடர் தவறாமல் பார்த்து வருகிறேன் . உங்கள் நடிப்பு அருமை. உங்கள் குரல் ,முகம், உடை அலங்காரம் எல்லாம் மிகவும் அழகு. நீங்கள் மேலும் வளர என் வாழ்துக்கள்.இரண்டு வாரங்கள் முன்பு சன் டிவி நிகழ்ச்சி ஒன்றில் நீங்கள் வந்தபோது ஒங்களுக்காகவே நான் அந்த நிகழ்ச்சி முழுவதும் பார்த்தேன். அவ்வளவு அழகு நீங்கள்.நான் ஒரு Mumbai வாசி. நான் குடும்பதோடு மும்பையில் வசிக்கிறேன் . ஆகவே உங்களோடு பேச ஆசைப்படுகிறேன்.முடியுமா ???. என் பெயர் selvaraj. உங்களிடம் யிருந்து பதில் வந்தால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன் உங்கள் பதிலுக்காக காத்திருக்கும் உங்கள் அன்பான ரசிகன் Selvaraj. Thanks & Regards, Selvaraj.
Rate this:
Share this comment
Cancel
selvaraj - mumbai,இந்தியா
20-அக்-201614:19:41 IST Report Abuse
selvaraj அன்பு அலமேலு .. எங்கள் நெஞ்சில் நிறைந்த எங்கள் பாசமலரே .. எங்கள் மலர் கொடியே ... நீ என்றும் எங்கள் மலர்தான் . மலராகத்தான் எங்கள் நெஞ்சில் நிறைந்து இருக்கிறாய் .மறக்க முடியாத மலர் எப்படி உன்னை மறக்க முடியும் . நீ மீண்டும் பிறந்து அலமேலுவாக எங்கள் இதயங்களில் வளம் வருகிறாய் . நீ எங்கள் வீட்டு பெண் . உன்னை மறக்க முடியுமா மலரே எங்கள் அலமுவே .. உங்கள் பதிலுக்காக காத்திருக்கும் உங்கள் அன்பான ரசிகன் , Thanks Selvaraj.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X