காளியாகுடியில் ரிக் வேத பாடசாலை துவக்கம் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

காளியாகுடியில் ரிக் வேத பாடசாலை துவக்கம்

Added : அக் 11, 2016 | கருத்துகள் (19)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
காளியாகுடியில் ரிக் வேத பாடசாலை துவக்கம்

மயிலாடுதுறை: கொல்லுமாங்குடி அருகே, காளியாகுடி கிராமத்தில், கமலாம்பாள் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில், ரிக் வேத பாடசாலை நேற்று துவக்கப்பட்டது. திருவாரூர் மாவட்டம், கொல்லுமாங்குடியை அடுத்த காளியாகுடி கிராமத்தில், ஸ்ரீ கமலாம்பாள் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில், விஜயதசமி நாளான நேற்று, ரிக் வேத பாடசாலை துவங்கப்பட்டது. அதையொட்டி, நேற்று முன்தினம் ஆவஹந்தி ஹோமம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. நேற்று காலை, 6:00 மணிக்கு, கணபதி ஹோமம் நடைபெற்றது. ஹோமத்தை ராஜேஷ் மற்றும் கிருஷ்ணன் கனபாடிகள் தலைமையிலானோர் நடத்தினர். அதைத் தொடர்ந்து, வேதபாராயணம் மற்றும் ரிக் வேத பாடசாலை துவுக்க விழா நடைபெற்றது. காளியாகுடி நடராஜன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், கமலாம்பாள் சாரிட்டபிள் டிரஸ்ட் ரவி நாராயணன், சுரேஷ் சுப்பிரமணியன் மற்றும் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அருகில் உள்ள பிரசித்தி பெற்ற, கமலாம்பாள் சமேத காளீஸ்வரர் சுவாமி கோவிலில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RAMASWAMY S - CHENNAI,இந்தியா
12-அக்-201621:31:40 IST Report Abuse
RAMASWAMY S CONGRATES. GOVT SHOULD PROVIDE SUBSIDIES AND HELPING HAND TO THE STUDENTS WHO ARE STUDYING . ALL PEOPLE SHOULD HELP IN THE GROWTH OF THIS INSTITUTION
Rate this:
Share this comment
Cancel
Kannadasan - Singapore,சிங்கப்பூர்
12-அக்-201615:27:04 IST Report Abuse
Kannadasan நன்று. நல்லது நடக்கட்டும்.
Rate this:
Share this comment
Cancel
Thanjai puthiyavan - Jeddah,சவுதி அரேபியா
12-அக்-201611:45:15 IST Report Abuse
Thanjai puthiyavan ரிக் வேதத்தில் இறைவனை குறித்து என்ன சொல்லப்பட்டுள்ளது? ஒருவனா? உருவம் உள்ளவனா? சிலை வழிபாடு கூடுமா? ராமன் யார்?
Rate this:
Share this comment
Ganapathy - India,இந்தியா
12-அக்-201618:43:59 IST Report Abuse
Ganapathyரிக் வேதத்தில் நிறைய கர்மா உபாசனைகள் பற்றி கூறப்பட்டுள்ளதாக படித்திருக்கிறேன். கர்மா உபாசனைகள் என்றால் பூஜை, யாகம், தர்ப்பணம் போன்றவற்றை செய்யும் முறைகள் ஆகும். அதை செய்பவர்கள், அதில் பங்கு பெறுபவர்கள் பாவங்கள் நீங்கி, உள்ளம் சுத்தம் அடைகிறது, அதனால் நல்ல சிந்தனை எழுந்து, நல்ல காரியம் செய்ய தோன்றுகிறது. இறைவன் ஒருவன் தான், பல ரூபங்களை தரித்தவன். ராமன் விஷ்ணுவின் அவதாரம். சிலை வழிபாடு தன்னை உணரும் வரையில் கூடும். அதற்குப்பிறகு, அனைத்தும் இறைவனாக தெரியும். சிலையும் இறைவனாக தெரிவதால்...அந்த வழிபாடும் தொடரும். இறைவன் உருவம் இல்லாதவன், உருவம் உள்ளவன் கூட....
Rate this:
Share this comment
கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா
12-அக்-201619:37:31 IST Report Abuse
கதிரழகன், SSLCவேத காலம் புராண காலத்துக்கு முந்தியது. அதனால ரிக் வேதத்துல ராமர் பத்தி வராது. வேதத்துலே வருகிற தேவர்கள் இந்திரன், வருணன், ருத்திரன் ஆகியோர். வேதம் நமக்கும் பாரசீகத்துக்கும் பொது. அவிங்க அரபி மதத்துக்கு மாறுமின்ன சவுராஸ்டிரியர்ஆ இருந்தாக. அதுக்கு மின்ன வருணன், இந்திரன், ருத்திரன், மித்திரன் இவிங்களதான் கும்பிட்டாக. புராண காலத்துல பிரிஞ்சிட்டோம். நாம சிந்து ஆயிட்டோம் அவிங்க சவுராஷ்டிரர் ஆயிட்டாக. நாம அசுரன் ன்னு சொல்லுறது அவிங்களத்தான். நம்ம சா பாரசீகத்துல ஹா. சிந்து = ஹிந்து. அசுரன் = அஹுரன். சவுராஷ்டிரர் தெய்வம் அஹுரா மாஸ்தா. அவிங்க சரித்திரப்படி "அஹுரர்/அசுரர் நல்லவங்க. தேவர்கள் கெட்டவங்க. சண்டை போட்டு தோத்து போயி கிழக்கே ஓடிட்டாங்க" நம்ம சரித்திரப்படி அசுரர் கெட்டவங்க. அவுங்கள நாம தோக்கடிச்சு மேக்க தொரத்திட்டோம். நம்ம குலம் சூரா குலம். பாரகீகர்கள் அ+சூரா சூரர் அல்லாதவர்கள். (இப்ப இந்தியாவுல இருக்கிற புலம் பெயர்ந்த குஜராத்திக்கள் முன்னொரு காலத்துல சவுராஷ்டிரியரா இருந்தவுக. ஆனா இப்ப அவிங்க வழிபாடு மாறிட்டு) உருவ வழிபாடு, பலி எல்லாம் வேதத்துல உண்டு....
Rate this:
Share this comment
Thanjai puthiyavan - Jeddah,சவுதி அரேபியா
13-அக்-201613:58:51 IST Report Abuse
Thanjai puthiyavanகணபதி & கதிரழகன், ரிக் வேதத்தின் படி தமிழர்கள் யார்? தமிழ் மொழி ஏன் வேத மொழிகளிலிருந்து மாறுபட்டுள்ளது?...
Rate this:
Share this comment
குறையொன்றுமில்லை - குன்றக்குடி,இந்தியா
19-அக்-201613:34:35 IST Report Abuse
குறையொன்றுமில்லைபழசு , கேள்விகள் நல்ல கேட்க்குறீங்க .......
Rate this:
Share this comment
Cancel
Bakthavathsalam Vathsalam - Chennai,இந்தியா
12-அக்-201610:56:28 IST Report Abuse
Bakthavathsalam Vathsalam ரொம்ப நல்ல விஷயம்.
Rate this:
Share this comment
Cancel
குரங்கு குப்பன் - chennai,இந்தியா
12-அக்-201610:25:14 IST Report Abuse
குரங்கு குப்பன் இந்தியா முழுவது ஒவ்வொரு தொகுதிக்கும் 20 என்ற எண்ணிக்கையில் தொடங்கப்படவேண்டும்
Rate this:
Share this comment
Cancel
Raj Pu - mumbai,இந்தியா
12-அக்-201608:32:04 IST Report Abuse
Raj Pu பிராமணர்கள் அனைவரும் இந்த பாடசாலையில் சேர்ந்து மற்ற கல்லூரி தொழிற்படிப்புகள் மற்ற ஜாதியினர் சேர்ந்து படிக்கலாம்
Rate this:
Share this comment
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
12-அக்-201600:52:19 IST Report Abuse
மலரின் மகள் அனைவரும் சேரலாமா???
Rate this:
Share this comment
ravi kumar - Hamamatsu,ஜப்பான்
12-அக்-201608:24:50 IST Report Abuse
ravi kumarநல்ல கேள்வி .......
Rate this:
Share this comment
Yogesh - India,இந்தியா
12-அக்-201608:37:43 IST Report Abuse
Yogeshவர்ணாஸ்ரம தர்மத்தின் படி, மூன்று பிரிவினர் வேதம் ஓதி கொண்டு தான் இருந்தார்கள். காலப்போக்கில் பிராமணர்களின் ஒரு பிரிவினரும், வெவ்வேறு தொழில்களுக்கு சென்று விட்டார்கள்....
Rate this:
Share this comment
raja - chennai,இந்தியா
12-அக்-201608:45:12 IST Report Abuse
rajaஅது எப்படி ??...
Rate this:
Share this comment
abu lukmaan - trichy,இந்தியா
12-அக்-201609:23:58 IST Report Abuse
abu  lukmaanஆதியாகமம் என்று அழைக்க படுகின்ற ரிக் வேதம் சமஸ்கிருதமா ? தமிழா ? ....
Rate this:
Share this comment
முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
12-அக்-201609:57:37 IST Report Abuse
முக்கண் மைந்தன் ஆமாம், அனைத்து பிராமணர்களும் சேரலாம்.......
Rate this:
Share this comment
Siva - India,இந்தியா
12-அக்-201613:45:11 IST Report Abuse
Sivaசமூகத்தில் ஒரு பிரிவினருக்கு ஆன்மீகம், வேதம் ஓதுதல் மட்டுமே தொழில். அவர்கள் முடிந்த வரை எளிமையாக இருந்தால் இந்த கேள்விகள் எழாது. இதை போன்ற பாட சாலைகளை பணம் கொடுத்து ஆதரிப்பதும் அந்த பிரிவினர் தான். பல கோவில்களில், வேறு ஜாதியை சேர்ந்தவர்கள் வேத பாட சாலை அமைத்தது, அது சரியாக இயங்குவதற்கு நிலம் தானம் செய்தது போன்ற பல குறிப்புகள் உள்ளன. கலியுகத்தில் இறைவனின் இருப்பை புரிந்து கொண்டு, தன் மனத்தால் தன உள்ளே கவனத்தை பார்வையை செலுத்துவது மிக கடினம். ஏனெனில் மனம் பலவற்றை பார்த்து, செய்து, கவனித்து....அலைந்து கொண்டே இருக்கும். அதன் விளைவாக அனைத்தையும் கேள்வி கேட்கும் போக்கும் இருக்கும். எளிமை என்பது ஏளனமாக பார்க்கப்படும். நேர்மை, உண்மை பிழைக்கத்தெரியதாவன் செயல் அல்லது நடிப்பு என்று கருதப்படும். நாணயம் வியாபார தந்திரம் ஆகும். அன்பு சுயநல உருவம் பெரும். பக்தி வேஷம் ஆகும். ஆனால் இறைவன் யாரவது ஒரே ஒருவன் தன்னை நினைத்து அன்புடன் ஒரு துளி கண்ணீர் சிந்துகிறானா/ளா என்று எப்போதும் காத்து கொண்டிருக்கிறான்...
Rate this:
Share this comment
Raj Pu - mumbai,இந்தியா
12-அக்-201615:15:54 IST Report Abuse
Raj Puமூன்று பிரிவினர் சரி அந்த நாலாவது பிரிவு பஞ்சமர் நிலை என்ன ஆயிற்று யோகேஷ்...
Rate this:
Share this comment
Yogesh - India,இந்தியா
12-அக்-201618:17:00 IST Report Abuse
Yogeshஎன்ன ஆயிற்று என்றால் என்ன சொல்வது?...... இந்த காலத்தில் யாரோ வர்ணாஸ்ரம தர்மத்தை கடைப்பிடிப்பவர்கள் மாதிரி பேசுகிறீர்கள். அது எல்லாம் இந்த காலத்தில் நடக்குமா....ஏதோ ஒரு பிரிவினர் தங்கள் சுய தர்மத்தை கடைப்பிடித்து வருகிறார்கள். வர்ணாஸ்ரம தர்மம் கடைப்பிடித்து வந்த காலத்தில், நான்காம் பிரிவினர் லேபர் க்ளாஸாக இருந்தார்கள். ஒரு பிரிவினர் நாட்டை நிர்வகித்தல், போர் வீரர்களாக இருந்தார்கள், மற்றோரு பிரிவினர் வணிகத்தில் ஈடுபட்டார்கள், மற்றோரு பிரிவினர் விவசாயம் உள்ளிடட பல தொழில்கள்களுக்கு, லேபர்களாக இருந்தார்கள். பிரமானார்கள் வேதம், ஸ்ம்ருதியில் கூறப்பட்டுள்ளதை அனைவருக்கும் உபதேசம் செய்து, பூஜை, யாகங்கள், கோவில் பராமரிப்பு போன்ற பணிகளை செய்தார்கள். அவர்களை மற்ற பிரிவினர்கள் அனைவரும் பொருள் உதவி கொடுத்து ஆதரித்தார்கள். முக்கியமாக அப்போது எளிமையாக இருந்தார்கள். அதனால் பல கேள்விகள் எழவில்லை. கலியுகத்தில் பெரும்பாலும் அனைவரும் லேபர் க்ளாஸ் தான். கல்கி அவதாரத்தின் போது, பகவான் மீண்டும் வர்ணாஸ்ரம தர்மத்தை ஸ்தாபிப்பார். உலகம் என்றும் அழியாது பிரளயகாலத்தில் இறைவனிடம் ஒடுங்கும். மீண்டும் தோன்றும். ஒவ்வொரு ஜீவனும் இறைவனை அடையும் வரை, இந்த உலகம் இருக்கும். இது இறைவன் நடத்தும் ஒரு விளையாட்டு. உலகம் அழிவது எல்லாம் சினிமாவில் தான் இயறக்கை சீற்றத்தால் சேதம் நிகழும். அவை அழிவு அல்ல. இது அனைத்தும் ஹிந்து மத கோட்பாடுகள்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை