பெரிய அளவில் தெற்கு ஆசிய கூட்டமைப்பு; இந்தியாவுக்கு போட்டியாக பாக்., திட்டம்| Dinamalar

பெரிய அளவில் தெற்கு ஆசிய கூட்டமைப்பு; இந்தியாவுக்கு போட்டியாக பாக்., திட்டம்

Added : அக் 12, 2016 | கருத்துகள் (18)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
பெரிய அளவில் தெற்கு ஆசிய கூட்டமைப்பு; இந்தியாவுக்கு போட்டியாக பாக்., திட்டம்

வாஷிங்டன்: சார்க் கூட்டமைப்பில் இந்தியாவால் தனிமைப்படுத்தப்பட்ட பாகிஸ்தான், பதிலடி கொடுக்கும் வகையில் சீனா, ஈரானை சேர்த்து, மிகப்பெரிய தெற்காசிய பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

யூரி தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தானில் நடக்க இருந்த சார்க் மாநாட்டை புறக்கணிக்க போவதாக இந்தியா அறிவித்தது. இந்தியாவிற்கு ஆதரவாக, வங்கதேசம், பூடான், ஆப்கன் நாடுகளும் மாநாட்டை புறக்கணித்தன. இதனையடுத்து மாநாடு ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், சார்க் அமைப்பில் ஆதிக்கம் செலுத்தும் இந்தியாவிற்கு போட்டியாக தெற்காசிய அளவில், சீனா, ஈரான் மற்றும் மத்திய ஆசிய நாடுகளை இணைத்து பெரிய பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பை உருவாக்க பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த வாரம் அமெரிக்கா வந்த பாகிஸ்தான் குழுவினர் கூறுகையில், மிகப்பெரிய தெற்காசிய அமைப்பு உருவாகி வருகிறது. இந்த அமைப்பில் சீனா, ஈரான் மற்றும் மத்திய ஆசிய அண்டை நாடுகள் இருக்கும். சீனா - பாகிஸ்தான் இடையேயான பொருளாதார ஒத்துழைப்பு திட்டம், தெற்கு ஆசியா மற்றும் மத்திய ஆசியாவை இணைக்கும். சீனாவுக்கு மட்டுமல்லாமல், மத்திய ஆசிய நாடுகளுக்கும் குவாடர் துறைமுகம் எளிதாக அணுகுவதாக இருக்கும். இந்த அமைப்பில் இந்தியா இணைய வேண்டும் எனக்கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
N.K - Hamburg,ஜெர்மனி
13-அக்-201601:26:51 IST Report Abuse
N.K ஈரான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான் போன்ற நாடுகள் ஏற்கனவே இந்தியாவுடன் நல்ல நட்பு கொண்டுள்ளன. சீனாவை இவ்வளவு தூரம் பாக் நம்புவதை பார்த்தால் பாவமாக இருக்கிறது.
Rate this:
Share this comment
Cancel
மணிமேகலை - paris ,பிரான்ஸ்
12-அக்-201621:22:18 IST Report Abuse
மணிமேகலை  உங்க நாட்டில் ஏற்றுமதி செய்ய தீவிரவாதம் தவிர வேற என்ன இருக்கு ?
Rate this:
Share this comment
Cancel
Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா
12-அக்-201616:45:57 IST Report Abuse
Agni Shiva புலியை பார்த்து பூனை உடம்பில் சூடு போட்டு கொள்ளுமாம். அது போல இருக்கிறது, பக்கியின் இந்த முயற்சி. எழும்பி நிற்கவே வக்கில்லையாம். இந்த நிலையில் 17 பொண்டாட்டியை கேட்கிறதாம். கோல மயிலாட ஆட, ஆடுமாம், வான்கோழியும் தோகை விரித்து.
Rate this:
Share this comment
Selvaraj - Nagercoil,இந்தியா
12-அக்-201620:34:50 IST Report Abuse
Selvarajஅக்னி சிவா சார், சரியான கமெண்ட். கலக்கல், அதேநேரம் நிஜமும் தான்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X