இலாக்கா மாற்ற கோப்புக்களில் ஜெயலலிதா கையெழுத்திட்டாரா: கருணாநிதி சந்தேகம் - Jayalalitha | Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

இலாக்கா மாற்ற கோப்புக்களில் ஜெ., கையெழுத்திட்டாரா: கருணாநிதி சந்தேகம்

Added : அக் 12, 2016 | கருத்துகள் (185)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
இலாக்கா மாற்ற கோப்புக்களில் ஜெ., கையெழுத்திட்டாரா: கருணாநிதி சந்தேகம்

சென்னை : முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவர் வகித்து வந்த இலாக்காக்களை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம் கூடுதலாக ஒப்படைக்கப்படுவதாக கவர்னர் மாளிகை நேற்று அறிவிப்பு வெளியிட்டது. இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்ட விஷயங்களை குறிப்பிட்டு திமுக தலைவர் கருணாநிதி சில கேள்விகளை எழுப்பி உள்ளார்.
இது தொடர்பாக டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கை விபரம் : தமிழக ஆளுநர் அவர்கள் நேற்றிரவு வெளியிட்ட அறிவிப்பில், முதல் அமைச்சர் ஜெயலலிதா நிர்வகித்து வந்த அனைத்துத் துறைகளும், இந்திய அரசியல் சாசனத்தின் 166 (3) ம் ஷரத்தின்படி நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்துக்குஆளுநர் ஒதுக்கி உத்தரவிட்டுள்ளார் என்றும், அமைச்சரவைக் கூட்டங்களுக்கு நிதியமைச்சரே தலைமை வகிப்பாரென்றும், இந்த ஏற்பாடுகள் அனைத்தும் முதல் அமைச்சரின் அறிவுரையின் பேரில் செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட ஓர் அரசின் நிர்வாகச் செயல்பாடுகள் எக்காரணம் கொண்டும் தேக்க நிலையில் இருந்திட அனுமதிக்காமல் தொடர்ந்து அரசு இயங்கிட வேண்டும் என்ற நோக்கில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவே கருதுகிறேன்.
கடந்த 19 நாட்களாக, முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருவதுடன், மேலும் நீண்ட நாட்கள் மருத்துவ மனையிலேயே இருந்திட வேண்டும் என்ற நிலையில், அவரது உடல் நிலை பற்றி அரசுத் தரப்பில் எந்த விதமான அதிகாரப் பூர்வமான அறிக்கைகளும் இதுவரை வராத நிலையில், பல்வேறு வதந்திகள் உலவிட நேரிட்ட பிறகு, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் "அப்பல்லோ" மருத்துவ மனை சென்ற போது, சிகிச்சை பெற்று வரும் முதல் அமைச்சரை நேரில் பார்க்கவோ நலம் விசாரிக்கவோ வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இச்சூழ்நிலையில், நேற்று தமிழக ஆளுநரால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை முதல் அமைச்சரின் அறிவுரையின் பேரில் செய்யப்பட்டுள்ளது என்பது வியப்பைத் தருகிறது. ஏனென்றால் முதல் அமைச்சர் தனது இலாக்களை, அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கவனிப்பார் என்று கோப்பிலே கையெழுத்திட்டு அறிவுரை வழங்கியுள்ளாரா என்ற கேள்வி சிலரிடையே எழுந்துள்ளது.

முதல்வர் ஜெயலலிதாவின் அறிவுரையின் பேரில் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டதாக தமிழக கவர்னர் வெளியிட்ட அறிக்கை வியப்பைத் தருகிறது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

மேலும், அ.தி.மு.க. வின் சார்பில் மாநிலங்களவையில் அண்மைக் காலம் வரை உறுப்பினராக இருந்த ஒரு அம்மையாரே முதல் அமைச்சரின் கையெழுத்தைப் போலியாகப் போட்டு காரியங்கள் நடப்பதாகக் குற்றஞ்சாட்டி யிருக்கிறார். பல்வேறு தரப்பிலும் விவாதிக்கப்படும் இந்தக் குற்றச்சாட்டிற்கு எந்தவிதமான பதிலும் அரசின் சார்பாக இதுவரை தெரிவிக்கப்படவில்லை. எப்படியிருந்த போதிலும், தாமதமாகவேனும், முதலமைச்சரின் இலாகாக்களை அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இனி கவனிப்பார் என்று ஆளுநர் செய்துள்ள அறிவிப்பு நிர்வாக வசதிக்கான ஏற்பாடு என்ற வகையில் ஏற்றுக் கொள்ளலாமே தவிர, பொறுப்பு ஆளுநர், புதிய ஏற்பாட்டிற்கு ஒப்புதல் வழங்குவதற்கு முன்பு, அரசியல் சட்டத்தின் பரிமாணங்கள் அனைத்தையும் இந்தக் குறுகிய இடைவெளியில் முழுமையாகப் பரிசீலித்திருப்பாரா என்று எழுந்துள்ள அய்யப்பாட்டினை அறவே புறக்கணித்து விட முடியாது. இவ்வாறு கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (185)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
16-அக்-201620:26:17 IST Report Abuse
மதுரை விருமாண்டி கேக்குறவன் கேனையன் என்றால் கேழ்வரகில் நெய் வழியுமல்லவா? அதை தான் சொல்கிறார்கள் அதிமுக கொள்ளையர்கள்.
Rate this:
Share this comment
Cancel
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
16-அக்-201603:15:56 IST Report Abuse
மதுரை விருமாண்டி கையெழுத்து தனது கையெழுத்து இல்லைன்னு சொல்ல ஆயாம்மா வர மாட்டாங்க என்கிற தைரியமும்.. அப்படியே வந்தால் கூட கேள்வியை கருணாநிதி எழுப்பியிருப்பதால் கையெழுத்து தனது தான் என்று சொல்லி விடுவார் என்ற தைரியமும் இருக்கும் கூட்டத்திடம் இந்த கேள்வியை எழுப்பி எந்த பயனும் இல்லை. என்ன, அந்தம்மா அப்படியே வந்துட்டாலும், இந்த கேப்பில் அடித்த கொள்ளையெல்லாம் பிதுக்கி பிடுங்கிக்குவார் என்ற பயம் மட்டும் இருக்கும் பன்னீருக்கு.. 45% சசிகலாவுக்கு கொடுத்து சமாளித்துக் கொள்வார்.
Rate this:
Share this comment
Cancel
Tamilachi - crawley,யுனைடெட் கிங்டம்
13-அக்-201617:20:45 IST Report Abuse
Tamilachi என் தந்தையார் சிறு வயது முதலே MGR விசுவாசி. அவர் அறிஞர் அண்ணா காலத்தில் இந்த கபடதாரியின் நய வஞ்சகமே அவரை அவ்வளவு சீக்கிரம் கொன்றது என்று சொல்வார்...ஒரு முறை பொது கூட்டம் ஒன்றில் இந்த கருணாநிதி அண்ணா அவர்களுடன் கலந்து கொண்டார்.. அப்போது பேசிய இந்த கட்டுமரம் தனக்கு பின் அண்ணா அவர்கள் உரை ஆற்றுவார் என்று சொல்லி அவரை எழுப்பி விட்டது... அப்போதுதான் அண்ணா அவர்களுக்கு தொண்டையில் புற்று நோய் அறுவை சிகிச்சை செய்திருந்தனர்.. மேலும் அவர் பொது கூட்டங்களில் உரை ஆற்ற கூடாது என்றும் மீறினால் சிகிச்சை பலன் அளிக்காது என்றும் சொல்லி இருந்தனர். அதனை தெரிந்து கொண்டே இந்த கட்டுமரம் அவரை பேசுமாறு அழைத்தது. அண்ணா அவர்களும் இதனை தட்ட முடியாமல் பேசினார்... அதன் பின்புதான் அவர் நோய் வாய் பட்டு இறந்தார் என்று கூறினார்.. அப்போதே இந்த கட்டுமரம் நாவலர் மற்றும் சம்பத் போன்றோரை ஓரம் கட்டி தன் குள்ளநரித்தனத்தால் தான் கட்சியை குறுக்கு வழியில் கைப்பற்றியது..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X