டிரம்ப் ஆபத்தானவர்: ஐநா மனிதஉரிமை தலைவர்| Dinamalar

டிரம்ப் ஆபத்தானவர்: ஐநா மனிதஉரிமை தலைவர்

Added : அக் 12, 2016 | கருத்துகள் (12)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
டிரம்ப் ஆபத்தானவர்: ஐநா மனிதஉரிமை தலைவர்

ஜெனீவா : அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டால், சர்வதேச நாடுகளின் பார்வையில் அது மிக ஆபத்தானதாக கருதப்படும் என ஐநா மனித உரிமைகள் அமைப்பின் தலைவர் ஜெயித் ராட் அல் ஹூசைன் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில் பேசிய அவர், டிரம்ப்பின் நடவடிக்கைகள் மிகவும் அதிருப்தி அடையவும், வேதனை அடையவும் வைத்து விட்டது. குறிப்பாக அவரது ஆபாச பேச்சுக்கள், அடக்குதல் பேச்சுக்கள் ஆகியன மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தி விட்டன. அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டால் , எவ்வித சந்தேகமும் இல்லாமல் உலக நாடுகளின் பார்வையில் அது அபாயகரமானதாக பார்க்கப்படும்.
நான் எந்த ஒரு நாட்டின் அரசியல் பிரசாரத்திலும் ஈடுபட மாட்டேன். தேர்தல் குறித்த கருத்துக்களின் அடிப்படையிலும், அவர்களுக்கு எதிரான பேச்சுக்கள் அடிப்படையிலும் இதை கூறுகிறேன். பதவிக்கு வருவதற்கு முன் ஒரு குறிப்பிட்ட இன மக்களுக்கு எதிராக பேசப்படும் வார்த்தைகள் மனித உரிமைகளை பாதிப்பதாகும். மனித உரிமைகள் கழகத்தில் இருப்பதால் இதை சொல்ல வேண்டியது எனது கடமையும் கூட என்றார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Durai Ramamurthy - Virudhachalam,இந்தியா
13-அக்-201611:43:44 IST Report Abuse
Durai Ramamurthy அதென்னவோ, டிரம்ப் மீது குற்றம் சுமத்தி நீங்கள் அவரை இழிவுபடுத்த இழிவுபடுத்தத்தான் ஒவ்வொரு இந்தியனுக்கும் டிரம்ப் தான் வரவேண்டும் என்ற எண்ணத்தை அதிகப்படுத்திக்கொண்டேயிருக்கிறது.
Rate this:
Share this comment
Cancel
Durai Ramamurthy - Virudhachalam,இந்தியா
13-அக்-201611:39:42 IST Report Abuse
Durai Ramamurthy நான் எந்த ஒரு நாட்டின் அரசியல் பிரசாரத்திலும் ஈடுபட மாட்டேன், ஆனால்,டிரம்ப் ஆபத்தானவர், அவர் அதிபராக வரக்கூடாது, வந்துவிடவே கூடாது, இனத்தை இழிபடுத்துபவர், ஆபாசமாக பேசுபவர், ஆபத்தாக நடந்துகொள்பவர், அடக்கி ஒடுக்கும் சர்வாதிகாரியாக இருப்பார், அபாயகரமானவர் என்று ஹிலாரி கூட வைத்திராத குற்றச்சாட்டுகளை சுமத்தி ஹிலாரியைவிட கூடுதலாக பிரச்சாரம் செய்துவிட்டு, நான் நடுநிலைத்தவறாத யோக்கியன் என்று கூறுகிறீர்களே, மற்றவர்களையெல்லாம் அவ்வளவு முட்டாளாகவா கருதிகிறீர்.
Rate this:
Share this comment
Cancel
K.Senthil - Toranto,கனடா
13-அக்-201606:42:35 IST Report Abuse
K.Senthil சவூதி அரேபியாவை தலைமையாக கொண்ட ஐநா மனித உரிமை கழகமே ஆபத்தானது.
Rate this:
Share this comment
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
13-அக்-201601:34:14 IST Report Abuse
வெகுளி உங்களிடையே இருக்கும் பயங்கரவாதிகளை நீங்களே முன்வந்து காட்டிக்கொடுங்கள் என்று ட்ரம்ப் கூறுவது தவறா ஹூசைன் பாய்?
Rate this:
Share this comment
Cancel
Namasivayam Chokkalingam - Appleton, WI ,யூ.எஸ்.ஏ
12-அக்-201623:03:31 IST Report Abuse
Namasivayam Chokkalingam ஐ. நா. சபையின் மனித உரிமைக் கழகத்தின் தலைவராக இவர் இருப்பது எவ்வளவு விசித்திரம்
Rate this:
Share this comment
Cancel
Subburamu Krishnaswamy - Coimbatore,இந்தியா
12-அக்-201620:13:52 IST Report Abuse
Subburamu Krishnaswamy மனிதஉரிமை அமைப்புகள் எப்போதும் நேர்மையாக நடந்து கொள்வதில்லை. அதில் உள்ளவர்கள் தங்கள் விருப்பம் போல் செயல்படுகிறார்கள். ஒருசிலர் பாதிக்கப்பட்டால் குரல் கொடுக்கும் இவர்கள் மற்றவர்களுக்கு குரல் கொடுப்பதில்லை. சுயநலமில்லா அமைப்புகளை பார்ப்பது அரிதாக உள்ளது. ஐநா சபையே வளர்ந்த நாடுகளின் அமைப்பாக உள்ளது. சிறிய நாடுகளின் குரலை ஒலிப்பதில்லை
Rate this:
Share this comment
Cancel
Thanjai puthiyavan - Jeddah,சவுதி அரேபியா
12-அக்-201617:33:34 IST Report Abuse
Thanjai puthiyavan ஹிலாரி வெற்றிக்காகத்தான் டிரம்ப் பும் போட்டியிடுகிறார். போராடுகிறார். அமெரிக்க ஜனநாயகம் வினோதமானது.
Rate this:
Share this comment
கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா
12-அக்-201619:11:51 IST Report Abuse
கதிரழகன், SSLC@Thanjai puthiyavan - Jeddah,சவுதி அரேபியா: இது என்ன புது கதையா இருக்கு? அப்பால ஜெயலலிதா வெற்றிக்கு கலைஞர் உழைக்கிறார் ன்னு சொல்லுவீக போல? ஒரு வேளை மெய்யாவே இருக்குமோ? யாரு கண்டா?...
Rate this:
Share this comment
Cancel
Krishnan (Sarvam Krishnaarpanam....) - Chennai,இந்தியா
12-அக்-201617:21:26 IST Report Abuse
Krishnan (Sarvam Krishnaarpanam....) தற்போதைய ஐநா மனித உரிமைகள் அமைப்பின் தலைவர் ஜெயித் ராட் அல் ஹூசைன், சவுதியை சார்ந்தவர். அரபு நாடுகளில் சம்பளம் கிடைக்காமல் கஷ்டப்படும் தொழிலாளர்களுக்கு ஆதரவாக ஒரு வார்த்தை கூட பேசாதவர். ஏமனில் சவுதியால் கொல்லப்படும் அப்பாவிகளுக்கு (இதுவரை 12,000 அப்பாவிகள் கொல்லப்பட்டுள்ளார்கள் ) ஆதரவாக குரல்கொடுக்க மறுத்தவர். ஹில்லாரி கிளிண்டனின் அறக்கட்டளைக்கு, மிகப்பெரிய நிதியை கொடுத்துள்ள அரபு நாடுகள், அவர் தோற்றால் என்ன ஆகும் என்கிற அச்சத்தில் இருக்கிறார்கள். டிரம்ப் வெற்றிபெற்றால், அமெரிக்காவுடன் மேற்கத்திய மற்றும் ரஸ்சியாவின் உறவு மேம்படும், ஈராக்கில் போர் நிற்கும். ஹில்லாரி வென்றால், மத்தியகிழக்கு நாடுகளுடன் இருக்கும் தீவிரவாத உறவு மேம்படும், மென்மேலும் சிரியா அகதிகள் உலகம் முழுக்க அலைக்கழிக்கப்படுவார்கள்.
Rate this:
Share this comment
பச்சகிளி - சிலுக்குவார்பட்டி,இந்தியா
12-அக்-201617:55:05 IST Report Abuse
பச்சகிளி சரியான கருத்து. பாகிஸ்தான் மீது கருத்து தெரிவிக்க துப்பில்லை, ஸ்ரீலங்கா இனவெறிமீது குரல் கொடுக்க தைரியமில்லை. சிரியா செத்தபோது நாதி இல்லை. இப்போ வந்துட்டான். வேண்டாததற்கு எல்லாம் வாய் இருக்கும், மனித உரிமைக்கு பேச மாட்டான். அமெரிக்காவில் எவன் ஜெயித்தால் இவனுக்கு என்ன. இசுலாமிய பாசம், வேற என்ன?...
Rate this:
Share this comment
Krishnan (Sarvam Krishnaarpanam....) - Chennai,இந்தியா
12-அக்-201621:11:11 IST Report Abuse
Krishnan (Sarvam Krishnaarpanam....)பச்சை தீவிரவாதிகளும், அவரது ஆதரவாளர்களும் நேரடியாக விசயத்திற்கு வாருங்கள். கறுப்பின குழந்தைகளை 'சூப்பர் பிரிடேட்டர்ஸ்' என்று கூறியவர் ஹில்லாரி. அவருக்கு கறுப்பர்கள் ஆதரவு தெரிவிப்பது என்பது, கேரளாவில் ஜீஷா என்கிற தலித் பெண்ணை கொடூரமாக கொன்ற மூன்று முஸ்லீம்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் தலித் அமைப்புகளை போல தான்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை