முன்னதாகவே துவங்குது பார்லி., | புதுமை!: முன்னதாகவே துவங்குது பார்லி., குளிர்கால கூட்டத்தொடர்: ஜி.எஸ்.டி., மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு தீவிரம் Dinamalar
பதிவு செய்த நாள் :
புதுமை!
முன்னதாகவே துவங்குது பார்லி., கூட்டதொடர்:
ஜி.எஸ்.டி., மசோதா நிறைவேற்ற அரசு தீவிரம்

புதுடில்லி:ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவை நிறைவேற்றும் வகையில், பார்லிமென்டின் குளிர்கால கூட்டத் தொடரை முன்னதாகவே கூட்டுவதற்கு, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

 புதுமை!: முன்னதாகவே துவங்குது பார்லி., குளிர்கால கூட்டத்தொடர்: ஜி.எஸ்.டி., மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு தீவிரம்

வரும், நவம்பர், 16 முதல், ஒரு மாதத்துக்கு பார்லி., கூட்டத்தை நடத்த, பார்லிமென்ட் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

பார்லிமென்ட் கூட்டத் தொடர், பட்ஜெட், மழை காலம், குளிர் காலம் என, மூன்று கூட்டத் தொடர்களாக நடக்கும். பல்வேறு நிர்வாக சீர்திருத்தங்களை மேற்கொண்டு வரும் மத்திய அரசு, ரயில்வே பட்ஜெட்டை, பொது பட்ஜெட் டுடன் இணைத்துள்ளது.

மேலும் ஏப்ரல், 1ம் தேதி முதல், பட்ஜெட்டை செயல்படுத்தும் வகையில், பட்ஜெட் கூட்டத் தொடரை, பிப்ரவரிக்கு பதிலாக, ஜனவரி இறுதியிலேயே நடத்துவதற்கு திட்டமிடப் பட்டுள்ளது.

டில்லியில் கூட்டம்:


இந்நிலையில், பார்லிமென்ட் விவகாரங்களுக் கான மத்திய அமைச்சரவை கூட்டம், டில்லி யில் நேற்று நடந்தது. வழக்கமாக நவம்பர் மூன்றாவது அல்லது நான்காவது வாரத்தில் நடக்கும் குளிர்கால கூட்டத் தொடரை, முன்ன தாகவே நடத்துவது குறித்து, இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.அதைத் தொடர்ந்து,

நவம்பர், 16 முதல், டிசம்பர், 16 வரை, குளிர்கால கூட்டத் தொடரை நடத்துவது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்படும்.

நாடு முழுவதும் ஒரே சீரான வரிவிதிப்பை ஏற்படுத் தும் வகையில், ஜி.எஸ்.டி., வரி விதிப்பை கொண்டு வரும் பணிகள் தீவிரமாகநடந்து வருகின்றன.

அடுத்த ஆண்டு, ஏப்ரல், 1 முதல், இதை அமல் படுத்துவதற்கு, இரண்டு மசோதாக்களுக்கு, பார்லி மென்ட் ஒப்புதல் அளிக்க வேண்டும்.

அதற்காகவே, குளிர்கால கூட்டத் தொடர், வழக்கத் துக்கு மாறாக, முன்னதாக கூட்டப் படுவதாக, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வேகமெடுக்கும் பணிகள்

* ஜி.எஸ்.டி., வரி விதிப்பை கொண்டு வருவதற்காக, அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்வதற் கான மசோதா, கடந்த கூட்டத் தொடரில், அனைத்து கட்சிகள் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப் பட்டது
* அதைத் தொடர்ந்து, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைமையிலான, ஜி.எஸ்.டி., கவுன்சில் அமைக்கப்பட்டுள்ளது
* ஜி.எஸ்.டி., வரி விகிதம் எவ்வளவு, எந்தெந்த பொருட்களுக்கு விலக்கு அளிப்பது உள்ளிட்ட வற்றை முடிவு செய்யும் இந்த கவுன்சிலில், மாநில நிதியமைச்சர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்
* அடுத்ததாக, மத்திய, ஜி.எஸ்.டி., மற்றும் ஒருங் கிணைந்த,ஜி.எஸ்.டி., என்ற இரண்டு மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட வேண்டும். பார்லிமென்ட் ஒப்புதல் அளித்ததும், ஜனாதிபதியின் ஒப்புதல் பெற வேண்டும்
* அதன்பின், மாநில, ஜி.எஸ்.டி., மசோதாவை, அனைத்து மாநிலங்களும் சட்டசபைகளில் நிறை வேற்ற வேண்டும்
* அதைத் தொடர்ந்து, நிர்வாக ரீதியிலான நடவடிக்கைகளுக்குப் பின், ஜி.எஸ்.டி., வரி விதிப்பு நடைமுறைக்கு வரும்
* இந்த நடைமுறைகளுக்காகவே, பார்லி மென்ட்

Advertisement

கூட்டத் தொடர் முன்னதாகவே கூட்டப்படுகிறது.

எதிர்நோக்கும் பிரச்னைகள்


ஜி.எஸ்.டி., மசோதாவுக்காக பார்லிமென்ட் கூட் டத் தொடரை முன்னதாகவே நடந்த முடிவு செய்தாலும், பல்வேறு பிரச்னைகளும், வரும் கூட்டத் தொடரில் எழுப்பப்படும். ஜம்மு - காஷ் மீர் விவகாரம், பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ராணுவம் நடத்திய தாக்குதல் குறித்து, எதிர்க்கட்சிகள் பிரச்னை எழுப்பும்.

'ராணுவ நடவடிக்கையில் ஆதாயம் பார்க்கிறது, பா.ஜ.,அரசு' என, எதிர்க்கட்சிகளும்,'இந்த பிரச் னையை எதிர்க்கட்சிகள் அரசியலாக்குகின்றன' என,ஆளும்கட்சியும்,ஏற்கனவே கடும் விவாத த்தில் ஈடுபட்டுள்ளன. அடுத்த ஆண்டு துவக்கத் தில், உத்தர பிரதேசம் உட்பட, ஐந்து மாநிலங் களில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலை யில், பார்லிமென்ட் கூட்டத் தொடரில் நடக்கும் விவாதமும், மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத் தும் சாத்தியமும் உள்ளது.


Advertisement

வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
18-அக்-201612:50:45 IST Report Abuse

Sampath Kumarபார்த்தா நீ சோழரை காலம் இப்போ இல்லை தமிழ் மட்டும் இல்லை ஹிந்தி இங்கிலீஷ் என்று போலந்து காட்டும் ஆட்களும் உண்டு .என்ன கத்தினாலும் தமிழன் என்ற முத்திரை வடகத்திக்காரனுக்கு புடிக்காத சொல் அவர்கள் தமிழனை பார்க்கும் பார்வை இவன் அசுரன் என்று ராமனை எதிர்த்த கூட்டம் என்று ஆக தமிழன் இந்தியாவின் இரண்டாம் குடி மகனே

Rate this:
K.Sugavanam - Salem,இந்தியா
14-அக்-201618:02:47 IST Report Abuse

K.Sugavanamபுதுமையா ப்ரம்மமுகூர்த்தத்தில் தினமும் கூட்டத்தை கூட்டி காலை 11 மணிக்கு முடித்து விடலாம்.. அனைவருக்கும் க்ஷேமம் உண்டாகும்.

Rate this:
udaya - chennai,இந்தியா
14-அக்-201612:09:56 IST Report Abuse

udayaபுதுமை: முன்னதாகவே துவங்குது பார்லி., எதுக்கு " தூங்கவா "

Rate this:
மேலும் 4 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X