அனைத்து கட்சி கூட்டம் ஸ்டாலின் வலியுறுத்தல் | அனைத்து கட்சி கூட்டம் ஸ்டாலின் வலியுறுத்தல் Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
அனைத்து கட்சி கூட்டம்
ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை:''காவிரி விவகாரத்தில், தமிழக அரசு, அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டவில்லை என்றால், அடுத்தகட்டம் குறித்து விவாதிக்கப் படும்,'' என, தி.மு.க., பொருளாளர், ஸ்டாலின் கூறினார்.

சென்னை, அண்ணா அறிவாலயத்தில், ஸ்டாலின் தலைமையில், விவசாய சங்க பிரதி நிதிகள் பங்கேற்ற கலந்துரையாடல் கூட்டம், நடந்தது.பின், ஸ்டாலின் அளித்த பேட்டி:

காவிரியில் தண்ணீர் திறக்காத கர்நாடகாவை கண்டித்தும், மத்திய அரசின் போக்கை எதிர்த் தும், விவசாய சங்கத்தினர் போராட்டங்களை அறிவித்துள்ளனர். அதற்கு, தி.மு.க., ஆதர வளிக்க வேண்டும் என்றனர்; அந்த கோரிக்கை ஏற்கப்பட்டு, போராட்டத்துக்கு ஆதரவளிக்கி றோம். முக்கிய விவசாய சங்கங்களை

அழைத்து கூட்டம் நடத்தினோம். அதில், காவிரி பிரச்னையில், மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்தில், 'அந்தர் பல்டி' அடித்ததை கண்டித்துள்ளோம்.

 அனைத்து கட்சி கூட்டம் ஸ்டாலின் வலியுறுத்தல்

தமிழக அரசு, உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்;சட்டசபையை கூட்டி, சிறப்பு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அனைத்து கட்சித் தலைவர்களையும், டில்லிக்கு அழைத்துச் செல்ல வேண்டும்; அங்கு, பிரதமர், ஜனாதிபதி உள்ளிட்டவர்களை சந்திக்க ஏற்பாடு செய்ய

Advertisement

வேண்டும்.இவற்றை தீர்மானங்களாக நிறை வேற்றி, அரசுக்கு அனுப்புகிறோம்.

அரசின் பதில் கிடைத்ததும், அடுத்தகட்ட நட வடிக்கை எடுக்கப்படும். அரசு எதுவும் செய்ய வில்லை என்றால், 18-க்கு பின், மீண்டும் விவ சாய சங்க பிரதிநிதிகளை அழைத்து பேசு வோம். இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Girija - Chennai,இந்தியா
15-அக்-201600:28:32 IST Report Abuse

Girijaபாக்கு ஏற்றி செல்லும் கப்பலில் பயணம் சென்ற ஒருவன் ஒரே ஒரு களி பாக்கை மென்று கடித்து கடித்து அதில் பாதியை துப்பிவிட்டு , எல்லோரிடமும் கப்பலில் பாதி பாக்கு என்னுடையது என்றானாம் . அதுபோல் உள்ளது இந்த கலர் சட்டை ஸ்டாலினின் பேச்சு (எலெக்ஷனுக்கு அப்புறம் அந்த டிரஸ் எல்லாம் போடறது இல்ல இப்போ நிம்மதி) தீயசக்தி தி மு க எப்போதுமே காரியம் கைகூடும் நேரம் அதை தன் சுயநலத்தினால் கெடுக்கும். இது நாள் வரையில் காவேரி விஷயத்தில் கெடுதல் செய்துவிட்டு, இப்போதும் நானும் ரவுடிதான் ஜெயிலுக்கு போறேன் என்கிற காமெடி மாதிரி, இவர் கூட்டம் கூட்டி பிரதமரை சந்திக்க டெல்லிக்கு போகப்போகிறாராம்? வழிச்சிகிட்டு சிரிப்பாக அவிக ராஜிவ் கொலையாளிகளை தமிழக அரசு விரும்பினால் விடுவிக்கலாம் என்று சதாசிவம் சொன்ன போது , தேர்தல் நேரத்தில் சதாசிவம் உள்நோக்கத்தோடு பேசுகிறார் என்று , அவர்கள் விடுதலையில் மண் அள்ளிப்போட்டது கருணாநிதி. இப்படிப்பட்ட ஆளுங்க சகவாசம் எங்களுக்கு தேவை இல்லை.

Rate this:
kravi - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
14-அக்-201619:20:51 IST Report Abuse

kraviஇப்படி ஆளும் கட்சிக்கு அதி மு க விற்கு துதிபாடியே நாட்டை நாசம் பண்ணீட்டீங்க. முதல்ல தி மு க, அ தி மு க கம்பேர் பண்ணுறத விடனும். கருத்து சொல்லுறவங்க ஏதோ ஒரு கட்சிக்கு எதுத்துக்கிட்டு பேசுற மாதிரியா கருத்து சொல்லுறது? கேவலமான தமிழ்நாடு.

Rate this:
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
14-அக்-201619:20:16 IST Report Abuse

Nallavan Nallavanஅனைத்துக் கட்சிக் கூட்டத்தில் உங்களுடன் சேர எத்தனை கட்சிகள் தயாராக உள்ளன ???? ஏதோ, எதிர்க்கட்சிப் பொறுப்பில் தேமுதிக சொதப்பியதால் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் உங்களுக்கு அதிக இடங்கள் கிடைத்தன .... எதிர்க் கட்சி என்றாலே எதிரிக் கட்சி என்று எண்ணி வீணான காரியங்களை செய்து வந்தால் அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலில் பூஜ்ஜியம்தான் .....

Rate this:
மேலும் 21 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X