அறநெறி போதிக்கும் குருகுல கல்லூரி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அறநெறி போதிக்கும் குருகுல கல்லூரி

Added : அக் 17, 2016 | கருத்துகள் (14)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
அறநெறி போதிக்கும் குருகுல கல்லூரி

அதிகாலை பொழுது... பறவைகளின் ரம்யமான கீச்...கீச்... சப்தம்... எங்கிருந்தோ எழுந்து வரும் மெல்லிய குரலில் இன்னிசை காற்றில் கலந்து செவிக்கு விருந்தளித்து கொண்டிருக்க... சூரிய கதிர்கள் சுடர் விடுவதற்காக பூமியில் படரவிடும் நேரம் நெருங்க... கோயில் மணியின் ஓசை 'டாங்க்' என ஒலி எழுப்ப...அதிகாலை சரியாக 4:45 மணிக்கு மாணவர்கள் 1300, ஆசிரியர்கள் 90 பேர் என அனைவரும் ஒரே நேரத்தில் எழுந்து ஒரு சில நிமிட நேரங்கள் கண்களை மூடி அமைதி பிராத்தனை செய்கின்றனர். இப்படி துவங்கும் காலை பொழுது இரவு 9:30 மணி வரை பிரார்த்தனை, விளையாட்டு, பறவைகளுக்கு உணவளித்தல், ஆசனம், படிப்பு, நுாலகம், கலந்துரையாடல், கலந்துண்ணல் என வாழ்க்கை தத்துவம் செயல்வழி கற்றலாய், ஒவ்வொரு நொடிப்பொழுதும் இனிதே நகர்கிறது.
இப்படியொரு கட்டுக்கோப்பான, ஒழுக்கம் நிறைந்த, வாழ்க்கை முறையை மிக நேர்த்தியாக, சரியானபடி நெறிப்படுத்தும், தேச பற்றை வளர்க்கும், இந்தியாவின் முதல் குருகுல கல்லுாரி என மதுரை திருவேடகம் மேற்கு 'விவேகானந்த கல்லுாரி' பெயரெடுத்துள்ளது. திருச்சி திருப்பராயத்துறை ஸ்ரீராமகிருஷ்ண தபோவனத்தில், கிளை நிறுவனமாக மதுரை விவேகானந்த கல்லுாரியை சுவாமி சித்பவானந்த மகராஜ் 1971ல் நிறுவினார்.
அறச்சாலையே இங்கு வகுப்பறைஇக்கல்லுாரியை பொறுத்தமட்டில் வகுப்பறையும், விடுதியும் வெவ்வேறு அல்ல. பகலில் வகுப்பறையாகவும், இரவில் அறச்சாலையாகவும் பயன்படுகிறது. மாணவர்களும், ஆசிரியர்களும் ஒரே அறையில் துாங்குவது, பெற்றோர் இல்லாத குறையை போக்குகிறது. அறையின் ஒரு பகுதியில் மாணவர்களின் உடைமைகளை வைக்க, அடுக்கு மரப்பெட்டி வைக்கப்பட்டுள்ளன.
வகுப்பறைக்குள் காலணி கூடாது. மாணவர்களுக்கு மாணவர்களே உணவு பரிமாறுவர். தரையில் உட்கார்ந்து உண்பது உடலுக்கு வலு சேர்க்கிறது. காபி, டீ கிடையாது. 'மால்ட்' சத்து பானம் உண்டு. கல்லுாரியின் கோசாலை பசும்பால், இரவில் அனைவரும் உண்டு. கைக்குத்தல் அரிசி உடல் கட்டுக்கோப்பாக வைக்கிறது. சமையலுக்கு, இயற்கை முறை காய்கறிகள் பயன்படுத்துகின்றனர். அலைபேசி, 'டிவி' கூடவே கூடாது. வாரம் மூன்று நாள் வெள்ளை வேஷ்டி, வெள்ளை சட்டை சீருடை கட்டாயம். ஞாயிறு மட்டும் பெற்றோரை சந்திக்க அனுமதி உண்டு.அப்போ மாணவர் இப்போ பேராசிரியர்
''இக்கல்லுாரியில் பயின்ற மாணவர்கள் ஆண்டு தோறும் ராணுவம், போலீஸ் துறை உள்ளிட்ட பணிகளுக்கு தேர்வாகுகின்றனர். விளையாட்டுடன் கூடிய கல்வி அளிப்பதாலும், ஒழுக்கம், பொறுமை, அன்பு, பண்பை போதிப்பதால் கல்லுாரியை விட்டு வெளியேறும் மாணவர்கள் எத்தகையை சூழ்நிலையையும் சமாளிக்கும் திறனுடன் மிளிர்கின்றனர்.
கல்லுாரிக்கு வரும்போது மாணவர்களின் உடல் எடை, உயரம், மார்பளவு அளவெடுக்கப்படும்.படிப்பை முடித்து வெளியேறும் மாணவர்களின் உயரத்துக்கு ஏற்ற எடை, உயரம், மார்பளவு கட்டாயம் விரிவடைந்து இருக்கும். இதற்காக கல்லுாரி சான்றிதழ் வழங்குகிறது. முன்னாள் மாணவர்கள் பலர் இங்கு பேராசிரியர்களாக மாணவர்களை மெருகேற்றி வருகின்றனர்,'' என்றார் கல்லுாரி முதல்வர் ராமமூர்த்தி.
விருதுநகர் வி.எச்.என்.எஸ்.என்., கல்லுாரி உதவி பேராசிரியர் நுார்தீன் கூறியதாவது: விவேகானந்த கல்லுாரியில் 1996 - 2001 ஆண்டில் விலங்கியல் இளங்கலை, முதுகலை பட்டம் முடித்தேன். பின் டாக்டர் பட்டம் பெற்றேன். இங்கு கல்வி பயின்ற ஐந்தாண்டுகள், ஐம்பதாண்டு அனுபவத்தை கொடுத்தது. இக்கல்லுாரியின் ஒழுக்கம், தேசப்பற்று மிக்க மாணவர்களில் நானும் ஒருவன் எனும்போது பெருமையாக உள்ளது,'' என்றார்.
மாணவர் ஜெகதீஷ், ''பழநி அருகே சின்னாகவுண்டன் புதுார் எனது சொந்த ஊர். கடந்த ஜூனில், கல்லுாரியில் வேதியியல் முதலாண்டு மாணவராக சேர்ந்தேன். 104 கிலோ உடல் எடையுடன் நடக்க முடியாமல் சிரமப்பட்டேன். இங்கு அளிக்கப்படும் விளையாட்டு பயிற்சிகளால் உடல் எடை ஒன்பது கிலோ குறைந்துள்ளது. சுறுசுறுப்புடன் கல்வி பயின்று வருகிறேன்,'' என்றார்.
ஆற்றல், அன்பு, அறிவு''இங்கு மாணவர்களுக்கு நன்னெறி போதிக்கப்படுகிறது. பொருந்தா நடவடிக்கைகள் அறவே கூடாது. மாணவர், ஆசிரியர் ஒருங்கே வாழவும், சேர்ந்து உண்ணவும் செய்கின்றனர். புகட்டுபவர்களும் புகட்டப்பெறுபவர்களும் ஒன்று கூடி அலுவல்கள் அனைத்தையும் ஆற்றுகின்றனர். குருபக்தி குருகுல வாழ்விற்கு இன்றிமையாவது. மாணாக்கர்கள் வாழ்வைப் பண்படுத்துவது, இக்குருகுலத்தின் முதற் கடமையாகும். ஆற்றல், அன்பு, அறிவு எனும் முப்பொறிகளும் இனிது பேணப்பெறும்,'' என்றார் கல்லுாரி செயலர் சுவாமி நியமானந்த மகராஜ். தொடர்புக்கு 04543 - 258 234.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rangiem N Annamalai - bangalore,இந்தியா
18-அக்-201604:38:40 IST Report Abuse
Rangiem N Annamalai ஸ்வாமி சித்பாவானந்த அவர்களின் நேரடி கண்காணிப்பில் வளர்ந்த லக்ஷ கணக்கான மாணவர்களில் நானும் ஒருவன் . 24 மணி நேரம் அவருக்கு போதாது .அவர் எங்கள் விடுதியில் இருந்தால் எங்களுடன் தான் உணவு அருந்துவார் .மிக எளிமையான ,கண்டிப்பான ,நேர்மையான துறவி .அவரின் தமிழ்,ஆங்கிலம் ,சமஸ்க்ரித புலமை அபாரமானது .மிக கடுமையான உழைப்பாளி .மாணவர்களுடன் வாழ்ந்தவர் .அனைத்திலும் நேர்த்தி ,தூய்மை எதிர் பார்ப்பவர் .எழுதினால் இந்த இடம் போதாது .கட்டுரைக்கு நன்றி .
Rate this:
Share this comment
Cancel
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
17-அக்-201620:55:33 IST Report Abuse
Krishnamurthy Venkatesan எனது அண்ணன் திரு மஹாதேவன் அவர்கள் இந்த கல்லூரியில் தான் பி யு சி (1971 -1972 என்று நினைக்கிறேன்)படித்து,அரசு அதிகாரியாக இருந்து ஒய்வு பெற்றுள்ளார். நானும் இந்த கல்லூரிக்கு பலமுறை என் அண்ணனை சந்திக்க சென்றுள்ளேன்.
Rate this:
Share this comment
Cancel
மோகன் வைத்தியநாதன் - சுலவ்,யுனைடெட் கிங்டம்
17-அக்-201619:06:40 IST Report Abuse
மோகன் வைத்தியநாதன் இதுவரை நிறைய வாசகர் கருத்துக்கள் எழுதியிருக்கிறேன்... இன்று இந்த செய்திக்கு என்னுடைய கருத்து எழுதுவது மிகவும் பெருமையாக இருக்கிறது.. நான் இங்கு 1985-88 வரை இளங்கலை கணிதம் படித்தேன்.. (என்னுடைய பெயர் மோகன் வைத்தியநாதன்). இந்த கல்லூரியில் என் பெற்றோர்களால் சேர்க்கப்பட்டேன் (நானாக விரும்பி சேரவில்லை).. நான் +2 வில் ஒரு சுமாரான மாணவன்தான்...என்னாலும் சாதிக்கமுடியும் என்ற நம்பிக்கை இழந்து, வாழ்க்கையை கண்டு பயந்து, பட்டணத்து கல்லூரி மாணவன் போல் மிகவும் ஆரவாரமாக (பொய்யான மிதப்புடன்) இருக்க முடியவில்லையே என்ற வருத்தத்துடன் இருந்ததுண்டு.. இந்த கல்லூரியின் பயிற்று முறை மற்றும் ஆசிரியர்களின் நேரடி அக்கறை எனக்கு, என்னாலும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை கொடுத்தது... என்னுடைய ஆசிரியர்களுக்கு நன்றி.. இந்த கல்லூரிக்கு நன்றி... நான் இன்று என்னுடைய வாழ்க்கையை, சவால்களை மிகவும் நம்பிக்கையுடன் சந்திக்கிறேன்...
Rate this:
Share this comment
Cancel
Rangiem N Annamalai - bangalore,இந்தியா
17-அக்-201616:40:15 IST Report Abuse
Rangiem N Annamalai நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் .
Rate this:
Share this comment
Cancel
K.KRISHNAMURTHY - TIRUPUR.,இந்தியா
17-அக்-201615:26:42 IST Report Abuse
K.KRISHNAMURTHY நானும் எனது அண்ணனும் இந்த கல்லூரியில் 1979 முதல் 1981 வரை 10+2 படித்தோம். அதற்கு முன் 1974 முதல் 1979 வரை திருச்சிராப்பள்ளி அருகில் உள்ள திருப்பராய்துறையில் ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனத்தின் பள்ளியில் 6TH முதல் 10TH வரை படித்தோம். இன்றும் அந்த ஸ்தாபனத்தின் முறைகள் மற்றும் நேரம் தவறாமையில் கடுகளவும் கூட எந்த மாற்றமும் இல்லை. உண்மையாகவே இந்த ஸ்தாபனத்தில் படித்த மற்றும் படித்துக்கொண்டிருக்கின்ற அனைத்து மாணவ செல்வங்களும் உண்மையிலேயே பூர்வ ஜென்மத்தின் புண்ணிய பலத்தினால் இங்கே படிக்க எங்களுக்கு வாய்ப்பு கிடைத்தது. அதற்கு எங்களது பெரிய ஸ்வாமியின் ஆசிர்வாதம் எங்களுக்கு முழுமையாக கிடைத்தது என்பதில் துளியேனும் ஐயப்பாடு இல்லை. இதன் மூலம் எல்லோருக்கும் நான் தெரிவித்துக்கொள்ள வேண்டுவது எல்லாம் தயவு செய்து ஒரு முறை திருப்பராய்த்துறை தபோவனம் சென்று அந்த குருகுலத்தின் பெருமையை உணருங்கள். ஆனந்தமாக வாழுங்கள்.
Rate this:
Share this comment
Cancel
vidhura - chennai,இந்தியா
17-அக்-201614:31:58 IST Report Abuse
vidhura விளம்பரம் இன்றி பல வருடங்களாக கல்லூரி ஆற்றிவரும் அறிய செயல். இதில் படித்த , படிக்கும் அனைவரும் புண்ணியம் செய்தவர்கள்.
Rate this:
Share this comment
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
17-அக்-201613:54:24 IST Report Abuse
மலரின் மகள் நம் கல்வியில் அரிதாகிப் போன விஷயங்கள் இவை. மீண்டும் தளிர்ப்பது நலமே.என் தந்தையர் காலத்தில் நீதி போதனை என்று ஒரு வகுப்பு இருக்குமாம். அது நாளாவட்டத்தில் விளையாட்டுக்கு என்று அவர் விட்டு விட்டாராம், பின்னர் கணக்கு வாத்தியார் பாடம் முடிக்க வில்லை என்று கூறி அந்த வகுப்பை கணினிக்கு பாடத்திற்கு ஒதுக்க, பிறகு அதற்கு போட்டியாக அறிவியலும் வந்து அவர்கள் அந்த பாட நேரத்தை பயன் படுத்திக்க கொண்டார்களாம். இறுதியில் நீதி போதனை வகுப்பு என்பது பாட வேளைகளில் இருந்து காணாமல் போய்விட்டதாம். இட்ஸ் கான்.
Rate this:
Share this comment
Cancel
pradeban - goodge street ,யுனைடெட் கிங்டம்
17-அக்-201613:26:46 IST Report Abuse
pradeban அருமையான கல்வி முறை, வாழ்த்துக்கள். இங்கு படித்த மாணவர்கள் தாங்கள் பெற்ற பயனை தெரிவித்துள்ளது பாராட்டுக்குரியது .
Rate this:
Share this comment
Cancel
venkat - chennai,இந்தியா
17-அக்-201612:31:17 IST Report Abuse
venkat இது தான் இந்திய பாரம்பரிய கல்விமுறை. இதை சொன்னால் மதவாதம் என்றும், பிற்போக்குவாதி என்று சில பகுத்தறிவுவாதிகள் சொல்லுவர். மக்களை முட்டாள்களாக்கி ஒட்டு பெற்று ஆட்சியில் அமர்ந்து கொள்ளை அடிப்பர்
Rate this:
Share this comment
Cancel
Vasudevan - kochi,இந்தியா
17-அக்-201611:02:29 IST Report Abuse
Vasudevan நானும் இந்த கல்லூரியில் தான் படித்தேன்(1982-85). மிக மிக நல்ல கல்லூரி. இன்று வரை இந்த கல்லூரியின் பழக்கங்கள் விடவில்லை. இன்று மிக உயர்ந்த நிலையில் நான் இருக்க இந்த கல்லூரி தான் காரணம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை