3 தொகுதிகளில் தேர்தல்; திமுக வேட்பாளர்கள் யார்? | Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

3 தொகுதிகளில் தேர்தல்; திமுக வேட்பாளர்கள் யார்?

Updated : அக் 20, 2016 | Added : அக் 20, 2016 | கருத்துகள் (9)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
கருணாநிதி நாளை நேர்காணல், திமுக வேட்பாளர்கள் யார் ?

சென்னை: நடக்கவிருக்கும் 3 தொகுதி தேர்தலில் திமுக., வேட்பாளரிடம் கருணாநிதி நாளை நேர்காணல் நடத்துகிறார். இந்த தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து பலர் மனுக்கள் அளித்து வருகின்றனர்.

வரும் 19ம் தேதி அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கவுள்ளது. இதற்கான வேட்பாளர்களை அதிமுக அறிவித்து விட்டது. இந்த தேர்தலில் பல்வேறு கட்சிகள் போட்டியிடவில்லை என அறிவித்து விட்டது. இந்த தேர்தலை பொறுத்த மட்டில் அதிமுக - திமுக., இடையே தான் கடும் போட்டி இருக்கும். திமுக தரப்பில் போட்டியிட விரும்புவோர் தங்களின் மனுக்களை அளிக்கலாம் என திமுக தலைமை கழகம் அறிவித்திருந்தது. இதன் அடிப்படையில் இன்று அறிவாலயத்தில் திமுகவினர் பலர் வந்திருந்தனர். அறிவாலய மானேஜர் பத்மநாபன், தலைமை நிலைய செயலர் பூச்சி முருகன் , ஜெயக்குமார் ஆகியோர் மனுக்களை பெற்று கொண்டனர்.

3 தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு கொடுத்தவர்கள் விவரம் வருமாறு:
01. அரவக்குறிச்சி - பழனிச்சாமி .
02. தஞ்சாவூர் - ஜெயப்பிரகாஷ் தேமுதிகவில் இருந்து சமீபத்தில் திமுகவுக்கு வந்தவர். திமுக இளைஞரணி அமைப்பாளர் சன் ராமநாதன்,
03. திருப்பரங்குன்றம் - மாநில திமுக., மருத்துவ அணி துணை தலைவர் டாக்டர் சரவணன். கவுன்சிலர் ரோஸ் முத்தையா, ஒன்றிய செயலர் ஈஸ்வரன்.


கருணாநிதி நாளை நேர்காணல்:


திமுக., வேட்பாளர்களை தேர்வு செய்வதில் கட்சியின் தலைவர் கருணாநிதி நாளை நேர்காணல் நடத்துகிறார். நாளையே வேட்பாளர்கள் பெயர் விவரம் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


தி.மு.க., வெற்றி:

தி.மு.க., தலைவர் கருணாநிதியுடன் ஆலோசனை நடத்திய ஸ்டாலின் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது: தேர்தலை சந்திக்க தி.மு.க., தயாராக உள்ளது. போட்டியிட விண்ணப்பித்தவர்களை நேர்காணல் செய்து வேட்பாளர்களை கருணாநிதி அறிவிப்பார். முறையாக தேர்தல் நடந்தால் தி.மு.க., நிச்சயம் வெற்றி பெறும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், விவசாய சங்கங்களுடன் பேசி அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vimalrajkumar Mohan Venkataraman - Chennai,இந்தியா
21-அக்-201603:15:25 IST Report Abuse
Vimalrajkumar Mohan Venkataraman அரவக்குறிச்சி தொகுதியை காங்கிரஸ் ஜோதிமணிக்கு விட்டு கொடுக்க வேண்டும். கேசி.பழனிசாமியும் ஜோதிமணிக்கு விட்டு கொடுக்க கேட்டு கொள்கிறோம்.
Rate this:
Share this comment
Cancel
Baskar - Paris,பிரான்ஸ்
21-அக்-201602:54:00 IST Report Abuse
Baskar எவன் ஒருவன் இரண்டு பெட்டி கொடுக்கிறானோ அவனுக்கு தான் சீட்டு.ஏன் இரண்டு பெட்டி.ஒரு பெட்டி தயாளுவுக்கு இரண்டாவது பெட்டி ராசாத்திக்கு. அப்போது தான் கட்சியும் குடும்பமும் ஒற்றுமையாக இருக்கும்.
Rate this:
Share this comment
Cancel
K,kittu.MA. - Anna Nagar,இந்தியா
20-அக்-201620:15:55 IST Report Abuse
K,kittu.MA. திமுக மண்ணை கவ்வும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X