"ராகுல் தலைமையை ஏற்க முடியாது" - பா.ஜ.,வில் இணைந்த ரீட்டா பேட்டி| Dinamalar

"ராகுல் தலைமையை ஏற்க முடியாது" - பா.ஜ.,வில் இணைந்த ரீட்டா பேட்டி

Added : அக் 20, 2016 | கருத்துகள் (23)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
ராகுல் தலைமை, ஏற்க முடியாது, பா.ஜ., ரீட்டா பகுகுணா

புதுடில்லி: ராகுல் யார் சொல்வதையும் கேட்பதில்லை எனவும், அவரது தலைமையை ஏற்க முடியாது எனவும் பா.ஜ.,வில் இணைந்த ரீட்டா பகுகுணா கூறினார்.


பின்னடைவு:

உ.பி.,யில், அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இதற்காக, அனைத்து கட்சிகளும், இப்போதே தேர்தல் பிரசாரத்தை தீவிரப்படுத்தி வருகின்றன. .ஒரு காலத்தில், உ.பி.,யில் ஆளுங்கட்சியாக இருந்த காங்கிரஸ், உ.பி., தேர்தலில் ஆட்சி அமைக்க முடியாது என்பதுடன், எதிர்க்கட்சியாக கூட இருக்க முடியாது என்ற நிலையே, தற்போது உள்ளது.. அடுத்த லோக்சபா தேர்தலுக்கு முன்னோட்டமாக பார்க்கப்படும், உ.பி., சட்டசபை தேர்தலுக்கான பிரசாரத்தில், பிரதான கட்சிகள் ஏற்கனவே களமிறங்கி விட்டன. காங்., துணைத் தலைவர் ராகுலும், 3,500 கி.மீ., துார விவசாயிகள் பேரணியை நடத்தினார். உ.பி.,யில் இழந்த ஆட்சியை, மீண்டும் அடையும் இலக்குடன் நடந்த இந்த பேரணி, மிகப்பெரிய வெற்றி என, காங்., கூறி வருகிறது. உ.பி., மக்கள் தொகையில், 14 சதவீதம் உள்ள பிராமணர்களின் கணிசமான ஓட்டுகளை, அவர் ஈர்த்துள்ளார் என்றும் கூறப்பட்டது. அதேபோல், 8 சதவீதம் உள்ள தாக்குர், 20 சதவீதம் உள்ள முஸ்லிம்களின் ஓட்டுகளை அறுவடை செய்யும் வகையில், ராகுலின் யாத்திரைநடந்ததாக,கட்சியின் மூத்த தலைவர்கள் கூறி வருகின்றனர். ராகுலுக்கு பின்னடைவாக, கட்சியின், உ.பி., தலைவராக இருந்த, மூத்த பெண் தலைவர் ரீட்டா பகுகுணா, பா.ஜ.,வில் இணையப் போவதாக செய்திகள் வெளியாகின. உ.பி., முதல்வர் வேட்பாளராக, டில்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித்தை அறிவித்தது, கட்சி யின், பிராமண முகமாக கருதப்படும் ரீட்டாவுக்கு, கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதே, இதற்கு காரணம் என்றும் கூறப்பட்டது.


ராகுல் மீது கோபம்:

இந்நிலையில், ரீட்டா பகுகுணா இன்று பா.ஜ., தலைவர் அமித் ஷா முன்னிலையில் பா.ஜ.,வில் இணைந்தார்.
பின்னர் அவர் அளித்த பேட்டி: காங்கிரில் 24 வருடம் அரசியல் நடத்தியுள்ளேன். தற்போது அங்கிருந்து விலகி பா.ஜ.,வில் இணைந்துள்ளேன். நாட்டு நலனுக்காக கடுமையான முடிவை எடுத்துள்ளேன். எம்.எல்.ஏ., பதவியிலிருந்தும் ராஜினாமா செய்து விட்டேன்.பா.ஜ., ஆட்சிக்கு கடுமையாக உழைப்பேன். சர்ஜிக்கல் தாக்குதலுக்கு ஆதாரம் கேட்பது ஏற்க முடியாதது.அனைத்து உலக நாடுகளும் சர்ஜிக்கல் தாக்குதலை அங்கிகரித்துள்ள நிலையில், ராகுலின் விமர்சனம், என்னை கோபப்பட வைத்துள்ளது.
உ.பி., உள்ளிட்ட யாரும் ராகுல் தலைமையை ஏற்கவில்லை. எந்த மாநில தலைவர்களும் ராகுலிடம் தங்களது கருத்தை தெரிவிக்க முடியவில்லை. ராகுல் தலைமையை ஏற்க முடியாது. உ.பி., மக்கள் காங்கிரசை நிராகரித்து விட்டனர். மோடியும் பா.ஜ., மட்டுமே நாட்டை காப்பாற்ற முடியும். நாங்கள் சொல்வதை சோனியா கேட்ட போதும், உ.பி., உட்பட யாரும் ராகுல் தலைமையை ஏற்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Chitra - Chennai,இந்தியா
21-அக்-201608:51:55 IST Report Abuse
Chitra பரிதாபமான பொது அறிவு, உளறல்களால் மட்டுமே நிறைந்த பேச்சு, இவற்றால் பப்புவை ஒரு ஆரம்ப நிலை அரசியல்வாதியாகக் கூட ஏற்க முடியாது. இதில் இவரது தலைமையை வேறு எப்படி சகிப்பது?
Rate this:
Share this comment
Cancel
Prem Kumar - Bangalore,இந்தியா
21-அக்-201604:35:46 IST Report Abuse
Prem Kumar உ.பி. மாநிலத்தில் முக்கிய காங்கிரஸ் பிரமுகரான ரீட்டா பகுகுணா கடைசியில் கட்சியில் இருந்து விலகி உள்ளார். தனது தந்தை மறைந்த எச்.என். பகுகுணா காலத்திலிருந்தே தீவிர அரசியலில் ஈடுபட்டு காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்கு பாடுபட்ட மிக சிறந்த தெளிவும் தேசிய சிந்தனையும் படைத்த அரசியல்வாதி. அவரது வெளியேற்றம் உண்மையில் உ.பி. ஒரு திருப்பத்தை ஏற்படுத்தும். ராகுல் கட்சிக்குள் காலடி வைத்த நாளிலிருந்தே காங்கிரஸ் சரிய ஆரம்பித்து விட்டது. பல மாநிலங்களில் முடிவுரை எழுதிய காங்கிரஸ் தற்போது உ.பி, மாநிலத்திலும் தொடர்ந்துள்ளது.
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
20-அக்-201622:49:41 IST Report Abuse
K.Sugavanam பாவம், அங்கு போய் என்ன செய்யப் போறாரோ? பிஜேபி ஜாக்கிரதை..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X