முதல்வர் நலம் பெற வேண்டி 10,750 பால்குடம் ஊர்வலம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

முதல்வர் நலம் பெற வேண்டி 10,750 பால்குடம் ஊர்வலம்

Added : அக் 23, 2016

பாலக்கோடு: முதல்வர் ஜெயலலிதா நலம் பெற வேண்டி, பாலக்கோட்டில், 10 ஆயிரத்து, 750 பால்குட ஊர்வலம் நடந்தது. பால்குடங்களை பெற பொதுமக்கள் முண்டியடித்ததால் பலர் கீழே விழுந்து காயமடைந்தனர்.
முதல்வர் ஜெயலலிதா பூரண நலம் பெற வேண்டி, மாநிலம் முழுவதும் அ.தி.மு.க.,வினர் பல்வேறு பிரார்த்தனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்தில், அமைச்சர் அன்பழகன், முன்னாள் அமைச்சர் பழனியப்பன் உட்பட அ.தி.மு.க., நிர்வாகிகள், சிறப்பு யாக பூஜை மற்றும் வழிபாட்டில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று பாலக்கோட்டில், 10 ஆயிரத்து, 750 பால்குட ஊர்வலம், அமைச்சர் அன்பழகன் தலைமையில் நடந்தது. ஊர்வலத்தில் பங்கேற்ற அ.தி.மு.க.,வை சேர்ந்த பெண்கள் மற்றும் இதர பெண்களுக்கு, கோவில் அருகே உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் பால்குடங்கள் வழங்கப்பட்டது. டோக்கன் வழங்கப்பட்டு, முறையாக பள்ளி மைதானத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த போதும், காலை, 10:30 மணிக்கு, பால் குடங்களை பெற கட்சியினர் மற்றும் பொதுமக்கள் முண்டியடித்து சென்றதால், தடுப்புக்கள் உடைந்து விழுந்ததில், பலர் கீழே விழுந்து காயமடைந்தனர். பின் கூட்டம் கட்டுப்படுத்தப்பட்டு, கோவிலில் இருந்து காலை, 11:00 மணிக்கு பால்குட ஊர்வலம் துவங்கியது. ஊர்வலம் புதூர் மாரியம்மன் கோவிலில் முடிந்தது. அங்கு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.

* இதேபோல், தமிழக முதல்வர் நலம் பெற வேண்டி, ஓசூர் அடுத்த பெத்தகுள்ளு சங்கமேஸ்வரர் கோவிலில், அமைச்சர் பாலகிருஷ்ணாரெட்டி தலைமையில் கோ பூஜை நடந்தது. அதைத்தொடர்ந்து இடைய நல்லூர் மாரியம்மன் கோவிலில், சிறப்பு பூஜை மற்றும், 508 பால்குட அபி?ஷகம் நடந்தது. ஓசூர் நகர அ.தி.மு.க., செயலாளர் பால்நாராயணன், நகராட்சி தலைவர் ராமு, அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் மாதேவா உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X