காரா...ஆட்டக்காரா காத்திருக்கேனே - பேஷா பாடும் ஷாஷா| Dinamalar

காரா...ஆட்டக்காரா காத்திருக்கேனே - பேஷா பாடும் ஷாஷா

Updated : அக் 27, 2016 | Added : அக் 23, 2016
Advertisement
காரா...ஆட்டக்காரா காத்திருக்கேனே - பேஷா பாடும் ஷாஷா

'காரா ஆட்டக்காரா காத்திருக்கேனே'... மணிரத்னம் படம் என்றாலே படத்தின் பாடல்கள் எல்லாம் மணி, மணியாக அழகாக இருக்கும். அப்படி ஒரு அழகான பாடல்களில் ஒன்று தான், 'ஓ காதல் கண்மணி' படத்தில் வரும் 'ஆட்டக்காரா' பாடல். பாடல் மட்டுமல்ல இந்த பாடலை பேஷாக பாடிய ஷாஷா திருப்பதியும் பேரழகு தான். இசை தென்றலாய் நம் இதயங்களை வருடும். இவருடன் ஓர் இனிய நேர்காணல்...

* இசையின் அறிமுகம்...
நான் கனடா பொண்ணுங்க... 10 வயதில் இந்துஸ்தானி கிளாசிகல் மியூசிக் கத்துகிட்டேன். இப்போ இந்தியா வந்தாச்சு... நிறைய இந்தி, தமிழ் சினிமாவில் பாடி வருகிறேன்.

* முதல் தமிழ் படம், பாட்டு ?
ஜி.வி.பிரகாஷ் இசையில் 'ராஜா ராணி' படத்தில் 'ஓடே... ஓடே...' என் முதல் தமிழ் பாட்டு.

* ஏ.ஆர்.ரஹ்மான்...
அவரை பற்றி சொல்ல வார்த்தைகளே இல்லை... அவர் ஒரு 'மியூசிகல் யுனிவர்சிட்டி'... பாடகர்களுக்கு அதிக தன்னம்பிக்கை கொடுப்பாரு, இசையில் தெரியாத விஷயங்களை கற்றுக் தருவார்.

* ரஹ்மான் இசையில்...
தமிழில் கோச்சடையான் - 'வாடா வாடா', காவியத் தலைவன் - 'ஏ மிஸ்டர் மைனர்', லிங்கா - 'என் மன்னவா', ஓ காதல் கண்மணி - 'காரா ஆட்டக்காரா', 24 - 'புன்னகையே', அச்சம் என்பது மடமையடா - 'ராசாலி' பாடல்களை பாடியிருக்கிறேன்.

* இன்றைய பாடல்களில் இசை அதிகமாக இருக்கிறதே...
இது தான் இசையின் புதிய வடிவம்னு நான் நினைக்கிறேன்... காலத்திற்கு ஏற்ப இசையும் மாறியிருக்கிறது, இதுவும் ஒரு டிரண்ட் தானே...

* நீங்க கனடா... தமிழில் நல்லா பாடுறீங்களே
தமிழ் வார்த்தைகளுக்கு அர்த்தங்களை கற்றுத் தரும், இசையமைப்பாளர், கவிஞர்களுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்.

* பிடித்த கவிஞர்...
கவிஞர் வைரமுத்து, தாமரை, நா.முத்துக்குமார், மதன் கார்க்கி.

* நீங்களும் இசையமைப்பீர்களா...
நானே பாடல் எழுதி, இசையமைத்து 'ஆல்பம்' வெளியிட்டுள்ளேன். விளம்பரங்களுக்கு ஜிங்கில்ஸ், வாய்ஸ் ஓவர் கொடுத்திருக்கேன்.

* இசைக்க தெரிந்த இசைக்கருவிகள்...
ஆப்ரிக்கா டிரைபல்ஸ் இசைக்கும் 'கஜூ', 'கிளாசிகல் கிட்டார்' இசைக்க தெரியும்.

* தமிழ், இந்தி தவிர...
பெங்காலி, உருது, இத்தாலி, பார்சி, பஞ்சாபி மொழிகள் பேச, எழுத தெரியும்.

* மதுரை?
ஹூம்ம்... வந்திருக்கேன் மீனாட்சி கோயில் எனக்கு ரொம்ப பிடிக்கும்.

* அடுத்த பாடல்...
பிரபுதேவா தயாரிப்பில், இமான் இசையில் 'வினோதன்' படத்தில் பாடுகிறேன்.
facebook.com/sashasmusic

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X