14 பங்களா; 1 கிலோ தங்கம் : ஆந்திராவை அதிர வைத்த அதிகாரி | 14 பங்களா; 1 கிலோ தங்கம் : ஆந்திராவை அதிர வைத்த அதிகாரி Dinamalar
பதிவு செய்த நாள் :
14 பங்களா; 1 கிலோ தங்கம் :
ஆந்திராவை அதிர வைத்த அதிகாரி

ஐதராபாத்: ஆந்திராவில், வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரி வீட்டில் சோதனை நடத்திய, லஞ்ச ஒழிப்பு போலீசார், அந்த அதிகாரி சேர்த் துள்ள சொத்துக்களை பார்த்து, மலைத்து போய் விட்டனர்.

14 பங்களா; 1 கிலோ தங்கம் : ஆந்திராவை அதிர வைத்த அதிகாரி

முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான, தெலுங்கு தேசம் ஆட்சி உள்ள, ஆந்திராவின் குண்டூர் மாவட்டம், வினுகோண்டா வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் அதிகாரியாக

பணியாற்றுபவர், பூர்ணசந்திர ராவ், 55. லஞ்சம் வாங்கியதாக வந்த புகாரில் அவரது வீட்டில், ஆந்திரா லஞ்ச ஒழிப்பு போலீசார், திடீர் சோதனை நடத்தினர்.

அந்தசோதனையில், பூர்ணசந்திர ராவ், ஆந்திராவின் பல்வேறு பகுதிகளில்,14 வீடுகள்,ஒரு கிலோ தங்கம், ஒரு அறை முழுவதும் நிரப்பக் கூடிய அளவுக்கு உள்ள, 60 கிலோ வெள்ளிப் பொருட்கள், 20 லட்சம் ரூபாய் ரொக்கம் உள்ளிட்டவை சேர்த்துள்ளது தெரிய வந்துள்ளது.

இவர், 1981ல், ஆந்திர போக்குவரத்து துறையில் இன்ஸ்பெக்டராக சேர்ந்தார்.தன், 35 ஆண்டுகள் அரசு சேவையில் சேர்த்த பணத்தின் மூலமே இந்த சொத்துகளை வாங்கியதாகவும், இவற்றின் மதிப்பு, மூன்று கோடி ரூபாய் மட்டுமே என்று, விசாரணை யில், பூர்ணசந்திர ராவ் கூறியுள்ளார்.ஆனால், இவற்றின் மதிப்பு, 25 கோடி ரூபாயை தாண்டும்

Advertisement

என்றும், தொடர்ந்து விசாரணை நடந்து வருவ தாகவும், லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்து உள்ளனர்.

ஒரு அரசு அதிகாரி வீட்டில், அதிக அளவு சொத் துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது, ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Advertisement

வாசகர் கருத்து (47)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kuttizen - Erode,இந்தியா
27-அக்-201600:37:18 IST Report Abuse

kuttizenஇந்தியன் தாத்தா... நீங்க எங்க இருக்கீங்க? உங்களுக்கு இங்க களை எடுக்கற வேளை வந்திருச்சு..

Rate this:
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
26-அக்-201616:56:44 IST Report Abuse

மலரின் மகள்///14 வீடுகள்,ஒரு கிலோ தங்கம், ஒரு அறை முழுவதும் நிரப்பக் கூடிய அளவுக்கு உள்ள, 60 கிலோ வெள்ளிப் பொருட்கள், 20 லட்சம் ரூபாய் ரொக்கம்/// அம்மாடி அரை முழுவதுமா.வெறும் வட்டாரத்திற்கு போக்குவரத்து அதிகாரியா?? இது போன்றவர்களை கண்டுபிடித்தாலே போதும். நம் நாட்டின் அடுத்த 50 வருடங்களுக்கு வரி இல்லா பட்ஜெட் போட்டு விடலாம். அல்லது ராணுவத்தை உலகின் தன்னிகரற்றகாங்கி விடலாம்.

Rate this:
karthi - MADURAI,இந்தியா
26-அக்-201616:35:18 IST Report Abuse

karthiதமிழ்நாட்டில் எப்போ ?.

Rate this:
மேலும் 44 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X