இலவச 'காஸ்' இணைப்பு திட்டத்திற்கு முழுக்கு? | இலவச 'காஸ்' இணைப்பு திட்டத்திற்கு முழுக்கு? Dinamalar
பதிவு செய்த நாள் :
இலவச 'காஸ்' இணைப்பு திட்டத்திற்கு முழுக்கு?

ஏழை குடும்பத்தைச் சேர்ந்த பெண்களின் பெயரில் இலவச சமையல், 'காஸ்' இணைப்பு வழங்கும் திட்டம், போதிய ஏற்பாடுகள் செய்யாததால், தோல்வியடையும் நிலையை எட்டியுள்ளது.

இலவச 'காஸ்' இணைப்பு திட்டத்திற்கு முழுக்கு?

நாடு முழுவதும் உள்ள, ஐந்து கோடி ஏழை குடும்பத்தைச் சேர்ந்த பெண்களின் பெயரில், சமையல் காஸ் இணைப்பு வழங்கும் திட்டத்தை, மே மாதம், பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார்.

உயர்ந்த நோக்கத்துடன் துவங்கப்பட்டுள்ள, 8,000 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த திட்டம்,

மிகவும் மந்த நிலையிலேயே உள்ளது. பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆராயாமல், இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக, எல்.பி.ஜி., வினியோகஸ்தர்கள் கூட்டமைப்பு கூறியுள்ளது.
பல்வேறு எண்ணெய் நிறுவனங்களின் வினியோ கஸ்தர்கள் உள்ள இந்த கூட்டமைப்பின் தலைவர், பி.வி.ராவ் கூறியதாவது:

பிரதமர் மோடி யின் இந்த திட்டம், மிக நல்ல திட்டம் தான். அதே நேரத்தில், போதிய பாதுகாப்பு ஏற்பாடு கள், அதுகுறித்த விழிப்புணர்வை மேற்கொள்ளா மல், இதை செயல்படுத்துவது, ஆபத்தை ஏற்படுத்தும்.

ஏழை, எளிய மக்கள், சிறிய குடிசைகளில் வசிப்பர்; சமையல் காஸை பாதுகாப்பாக பயன் படுத்துவது குறித்து, அவர்களுக்குவிழிப்புணர்வு இருப்பதற்கு வாய்ப்பில்லை. சமையல் காஸ் சிலிண்டரால் விபத்து ஏற்பட்டால்,இன்சூரன்ஸ் தொகை கிடைக்கும்; ஆனால், அது தீர்வல்ல. உயிர் பலி ஏற்படாமல் தடுக்க வேண்டும்.

இது குறித்து, எண்ணெய் நிறுவனங்களும்

Advertisement

மவுனமாக இருக்கின்றன; போட்டி போட்டு, இணைப்பு களை வழங்கி வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார். இந்த பிரச்னையால் தான், இந்த திட்டம் மந்தமாகவே உள்ளது.

இதுவரை, 13 லட்சம் பேருக்கு மட்டுமே இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது. இந்த மந்த நிலை தொடர்ந்தால்,இந்த திட்டம் பாதியிலேயே நிறுத்தப்படலாம் என்று, மத்திய பெட்ரோலிய துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Advertisement

வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kuppuswamykesavan - chennai,இந்தியா
26-அக்-201621:06:12 IST Report Abuse

kuppuswamykesavanஇது பிரதமரின் ஒரு கனவு திட்டமன்றோ. அதற்கா இப்படி ஒரு நிலை?.

Rate this:
Cheran - Kongu seemai,இந்தியா
26-அக்-201619:23:00 IST Report Abuse

Cheranஅடிச்சாண்டா அந்தர் பல்டி பிஜேபி இன் உண்மை முகம் இது. ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கான அணைத்து திட்டமும் நிறுத்தி சாதனை புரிகிறது இந்த இந்துத்துவ கட்சி.

Rate this:
G.Rajagopalan - Seeatle,யூ.எஸ்.ஏ
26-அக்-201613:36:17 IST Report Abuse

G.Rajagopalanநகர் புறங்களியே காஸ் சிலிண்டர் வெடித்து விபத்து நடக்கிறது. படிப்பறிவில்லா ஏழைகள் எவ்வாறு கையாள்வார்கள்

Rate this:
மேலும் 13 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X