நடிகர் சிவகுமாரின் ஒவியங்கள்...| Dinamalar

நடிகர் சிவகுமாரின் ஒவியங்கள்...

Updated : அக் 30, 2016 | Added : அக் 26, 2016 | கருத்துகள் (23)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement


நடிகர் சிவகுமாரின் ஒவியங்கள்...


நடிகர் சிவகுமாரின் 75வது பிறந்த தினத்தை முன்னிட்டு அவர் வரைந்த ஒவியங்களின் கண்காட்சி சென்னை லலித் கலா அகாடமியில் நடந்துவருகிறது.
வருகின்ற 27ந்தேதியுடன் நிறைவு பெற உள்ள இந்த ஒவிய கண்காட்சியை அவரது மகன்களும் நடிகர்களுமான சூரியா மற்றும் கார்த்தி ஆகியோர் இணைந்து அமைத்துள்ளனர்.


1958ம் ஆண்டு முதல் 1965ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் பென்சில்,கிரையான்,வாட்டர் கலர் மற்றும் ஆயில் பெயிண்டிங் கொண்டு வரையப்பட்டுள்ள ஒவியங்கள் இடம் பெற்றுள்ளன.தலைவர்கள்,இயற்கை,வழிபாட்டுதலங்கள் மற்றும் நடிகர் நடிகையர் என்று இவர் வரைந்துள்ள படங்களுக்கு கிழேயே படங்கள் குறித்த குறிப்புகளும் இடம் பெற்றுள்ளன.

குறிப்புகளில் நான் இந்த ஒவியத்தை இதில் இருந்து பார்த்து காப்பி செய்துதான் வரைந்தேன் என்று சில படங்களில் சொல்லி தனது நேர்மையை வெளிப்படுத்தி உள்ளார், அதே போல நாகேஷ் மற்றும் பத்மினியின் படங்களுக்கு கீழ் உள்ள குறிப்புகள் நெகிழ்சியை ஏற்படுத்துகின்றன.இவர் தன்னைத் தானே வரைந்து கொண்டுள்ள செல்ப் போர்ட்ரைட் படமும், குழந்தை பருவ சூர்யா படமும் பலரை கவர்கின்றன.


திரைஉலகில் கண்ணியமிக்கவராகவும் துாய்மையானவராகவும் வலம் வந்த நடிகர் சிவகுமார் தனது ஒவிய கண்காட்சி குறித்து கூறுகையில், கிராமத்து பள்ளியில் படித்த எனது ஒவியத்தைப் பார்த்து எந்தவித அடிப்படை பயிற்சியும் இல்லாமல் இவ்வளவு நன்றாக ஒவியம் வரைகிறாயே நீ சென்னைக்கு சென்று இதற்கான பள்ளி கல்லுாரியில் படி என்று சொல்லி அனுப்பிவைத்தார்.
அப்படி சென்னை வந்து ஒவியக் கல்லுாரியில் படிக்கின்ற காலத்தில் வரைய ஆரம்பித்த ஒவியங்கள்தான் இவை பின் நடிகராக திசைமாறிய பின் ஒவியம் வரைய நேரமில்லாமல் போனது ஆனாலும் கடந்த ஐம்பது ஆண்டு காலமாக நான் வரைந்த ஒவியங்களை பொக்கிஷம் போல பாதுகாத்து வந்தேன்.


எந்த பிறந்த நாளையும் சிறு கேக் வெட்டி கூட கொண்டாடியது இல்லை, ஆனால் 75வது பிறந்த நாளை ஒவியங்கள் கொண்டு கொண்டாடியே தீருவோம் என்று பிள்ளைகள் பிடிவாதம் பிடித்த போது மறுக்கமுடியாமல் போனது

எப்போதும் கற்பனை ஒவியங்கள் மீது எனக்கு விருப்பம் கிடையாது நான் நேரில் பார்த்து பிடித்துப் போன விஷயங்களை மட்டுமே ஒவியங்களாக வைத்துள்ளேன் இந்த ஒவியங்களை பார்க்கும் மக்களுக்கு சந்தோஷம் வரும் என்றால் எனக்கும் சந்தோஷமே.


எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in




Advertisement


வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malimar Nagore - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
13-டிச-201609:50:19 IST Report Abuse
Malimar Nagore ஓவியம் என்றல் என்ன வேண்டு தெரிந்தவன் இல்லையடா.
Rate this:
Share this comment
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
22-நவ-201615:28:46 IST Report Abuse
இந்தியன் kumar நல்ல மனிதருக்கு நல்ல வாழ்வு , வாழ்க வளமுடன்.
Rate this:
Share this comment
Cancel
R.Selvaperumal - kuwait,குவைத்
05-நவ-201615:06:17 IST Report Abuse
R.Selvaperumal வணங்குகிறேன்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X